சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
சீன மொழி: 上海合作组织
உருசியம்: Шанхайская Организация Сотрудничества
சுருக்கம்SCO
முன்னோர்சாங்காய் ஐந்து
உருவாக்கம்15 சூன் 2001; 22 ஆண்டுகள் முன்னர் (2001-06-15)
வகைபரஸ்பர பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு
சட்ட நிலைபிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு[1]
தலைமையகம்பெய்ஜிங், (சீனா) (செயலகம்)
தாஷ்கெண்ட், (உஸ்பெகிஸ்தான்) (மண்டல பயங்கரவாத எதிர்ப்பு அமைபின் நிர்வாகக் குழு)
உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்

பார்வையாளர்கள்

பேச்சுவார்த்தையில் பங்குகொள்வோர்

விருந்தினர்கள்

ஆட்சி மொழி
சீனம் மற்றும் உருசிய மொழி
தலைமைச் செயலாளர்
சாங் மிங்
துணை-தலைமைச் செயலாளர்கள்
கிரிகோரி லோக்வினோவ், சோபிர்சோடா குல்மக்மத், சோகில் கான், ஜானேஷ் கைன், நூர்லான் யேர்மெக்பயெவ்
மண்டல பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS)[2]
நிர்வாகக் குழு இயக்குநர்
ருஸ்லான் மிர்செவ்
வலைத்தளம்http://eng.sectsco.org/

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) என்பது ஒரு யுரேசியா அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பாகும். இதன் புவியியல் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகும். இந்த அமைப்பு யுரேசியாவின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில் சுமார் 60% விழுக்காடு கொண்டுள்ளது. மேலும் உலக மக்கள் தொகையில் 40% கொண்டுள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த அமைப்பின் நாடுகளின் பங்கு 20% ஆகும்.[3]

வரலாறு[தொகு]

1996இல் சீன மக்கள் குடியரசு, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்ந்து சாங்காய் ஐந்து அமைப்பு நிறுவப்பட்டது.[4] 15 சூன் 2001 அன்று இந்த அமைப்பில் உஸ்பெகிஸ்தான் இணைந்தது. 19 செப்டம்பர் 2003 அன்று இந்த அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்த பின் இந்த அமைப்பிற்கு சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப்பெயரிடப்பட்டது. இந்த அமைப்ப்பில் பல நாடுகள் பார்வையாளர்களாகவும் மற்றும் உரையாடல் பங்காளிகளாகவும் உள்ளனர்.

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் குழுவின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்களால் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இது ஆண்டிற்கு ஒரு முறை கூடுகிறது. இதன் தலைமையகம் சீனா நாட்டின் பெய்ஜிங் நகரத்தில் உள்ளது. இந்த அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரததில் செயல்படுகிறது. இதன் அமைப்பின் 8 உறுப்பினர்களாக அந்தந்த நாட்டு நிர்வாகத் தலைவர்கள் உள்ளனர்.

செயல்பாடுகள்[தொகு]

2007இல் போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான இருபதுக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான திட்டங்களை சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு துவக்கியது. மேலும் பாதுகாப்பு, இராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, பொருளாதாரம், கலாச்சாரம், வங்கி மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் மற்ற அதிகாரிகளின் வழக்கமான கூட்டங்களை நடத்தியது.

சூலை 2015இல் ரஷ்யாவின் உஃபாவில், இந்தியாவையும் பாகிஸ்தானையும் முழு உறுப்பினர்களாக சேர்க்க சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முடிவு செய்தது. இரு நாடுகளும் சூலை 2016இல் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள கடமைகளின் குறிப்பாணையில் கையெழுத்திட்டனர். 9 சூன் 2017 அன்று அஸ்தானாவில் நடந்த உச்சிமாநாட்டில், இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகாரப்பூர்வமாக முழு உறுப்பினர்களாக இணைந்தன.[5][6]

சாங்காய் ஒத்துழைப்பு உறுப்பினர் நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் உரையாடல்களில் பங்கு பெறும் நாடுகள்
சாங்காய் ஒத்துழைப்பு உறுப்பினர் நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் உரையாடல்களில் பங்கு பெறும் நாடுகள்

மேற்கோள்கள்[தொகு]