திமித்ரி மெட்வெடெவ்
திமித்ரி மெட்வெடெவ் | |
---|---|
![]() | |
உருசியாவின் தலைமை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 8 மே 2012 | |
குடியரசுத் தலைவர் | விளாடிமிர் பூட்டின் |
முன்னவர் | விளாடிமிர் பூட்டின் |
உருசியாவின் குடியரசுத் தலைவர் | |
பிரதமர் | விளாடிமிர் பூட்டின் |
முன்னவர் | விளாடிமிர் பூட்டின் |
பின்வந்தவர் | விளாடிமிர் பூட்டின் |
உருசியாவின் துணைத் தலைமை அமைச்சர் | |
பதவியில் 14 நவம்பர் 2005 – 12 மே 2008 உடன் பணியாற்றுபவர் செர்கே இவானொவ் | |
பிரதமர் | மிக்கைல் பிராட்கொவ் விக்டர் சூப்கொவ் |
முன்னவர் | மிக்கைல் பிராட்கொவ் |
பின்வந்தவர் | விக்டர் சூப்கொவ் இகோர் சுவலோவ் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 செப்டம்பர் 1965 லெனின்கிராட், சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ரஷ்யா (2011 முதல்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஸ்வெட்லானா மேட்வேடெவா |
பிள்ளைகள் | 1 |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென் பீட்டர்ஸ்பேர்க் அரசுப் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி சட்டத்தரணி |
சமயம் | ரஷ்ய பழமைவாத திருச்சபை[1] |
இணையம் | அதிகாரபூர்வ இணையத்தளம் |
திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ் (Dmitry Anatolyevich Medvedev, ரஷ்ய மொழி: Дми́трий Анато́льевич Медве́дев, பிறப்பு: செப்டம்பர் 14, 1965) என்பவர் 2012ஆம் ஆண்டு முதல் உருசியாவின் தலைமை அமைச்சராகப் பதவியில் உள்ளவர் ஆவார். இவர் 2008 முதல் 2012ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.
இதற்கு முன்னர், நவம்பர் 14, 2005ல் ரஷ்யாவின் முதல் துணைத் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் விளாடிமிர் பூட்டினுடைய முக்கிய அலுவலராகவும், ரஷ்ய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் (Gazprom) இயக்குநர் அவைத் தலைவராகவும் (2000 லிருந்து) பணியாற்றியிருக்கிறார். விளாடிமிர் பூட்டினும் அவருக்கு ஆதரவான கட்சிகளும் இவருடைய போட்டியை ஆதரித்தனர். மெட்வெடவ் 2008ற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ பதவிகள் எதையும் வகித்ததில்லை[2].
மேற்கோள்கள்[தொகு]