உள்ளடக்கத்துக்குச் செல்

திமீத்ரி மெத்வேதெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமீத்ரி மெத்வேதெவ்
Dmitry Medvedev
துணைத் தலைவர், பாதுகாப்புப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 சனவரி 2020
தலைவர்விளாதிமிர் பூட்டின்
உருசியத் தலைமை அமைச்சர்
பதவியில்
8 மே 2012 – 16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்விளாதிமிர் பூட்டின்
Deputyவிக்தர் சூப்கொவ்
ஈகர் சுவாலொவ்
அந்தோன் சிலுவானொவ்
முன்னையவர்விளாதிமிர் பூட்டின்
பின்னவர்மிகைல் மிசூசுத்தின்
உருசியாவின் அரசுத்தலைவர்
பதவியில்
7 மே 2008 – 7 மே 2012
பிரதமர்விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்விளாதிமிர் பூட்டின்
பின்னவர்விளாதிமிர் பூட்டின்
உருசியா-பெலருஸ் ஒன்றியப் பேரவைத் தலைவர்
பதவியில்
18 சூலை 2012 – 16 சனவரி 2020
செயலாளர்-நாயகம்பவேல் பரோதின்
முன்னையவர்விளாதிமிர் பூட்டின்
பின்னவர்மிகைல் மிசூசுத்தின்
ஐக்கிய உருசியாவின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2012
செயலாளர்-நாயகம்அந்திரே துர்ச்சாக்
முன்னையவர்விளாதிமிர் பூட்டின்
உருசியாவின் முதல் துணைத் தலைமை அமைச்சர்
பதவியில்
14 நவம்பர் 2005 – 12 மே 2008
Serving with செர்கே இவனோவ்
பிரதமர்மிகைல் பிராத்கொவ்
விக்தர் சூப்கொவ்
முன்னையவர்மிகைல் கசியானொவ்
பின்னவர்விக்தர் சூப்கொவ்
ஈகர் சுவாலொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
திமீத்ரி அனத்தோலியேவிச் மெத்வேதெவ்

14 செப்டம்பர் 1965 (1965-09-14) (அகவை 59)
லெனின்கிராது, சோவியத் ஒன்றியம் (இன்றைய சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா)
அரசியல் கட்சிகம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்)
சுயேச்சை (1991–2011)[1]
ஐக்கிய உருசியா (2011–இன்று)
துணைவர்சிவெத்லானா லின்னிக் (தி. 24 திசம்பர் 1993)
பிள்ளைகள்1
கல்விலெனின்கிராது அரசுப் பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்

திமீத்ரி அனத்தோலியெவிச் மெத்வேதெவ் (Dmitry Anatolyevich Medvedev, உருசியம்: Дми́трий Анато́льевич Медве́дев; பிறப்பு: 14 செப்டம்பர் 1965) உருசிய அரசியல்வாதி ஆவார். இவர் உருசியப் பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக உள்ளார். 2012 முதல் 2020 சனவரி 16 வரை இவர் உருசியத் த,லைமை அமைச்சராகவும்,[2][3][4] 2008 முதல் 2012 உருசிய அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். 2020 சனவரி 15 இல் மெத்வேதெவ் அவரது அமைச்சரவையைக் கலைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இவரது இடத்திற்கு மிகைல் மிசூசுத்தின் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் இவரை பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக நியமித்தார்.[5]

இவருக்கு முன்னதாகவும் பின்னதாகவும் அரசுத்தலைவராக இருந்த விளாதிமிர் பூத்தினை விட மெத்வேதெவ் மிகவும் தாராளவாதியாக அறியப்பட்டவர். இவர் அரசுத்தலைவராக இருந்த காலத்தில் உருசியாவின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நவீனமயமாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மட்டும் நாட்டின் பொருளாதாரம் தங்கியிருப்பது குறைக்கப்பட்டது. இவரது பதவிக்காலத்தில், அணுவாயுதக் குறைப்புத் திட்டத்திற்கான உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது. உருசியாவுக்கும் சியார்சியாவுக்கும் இடையில் 2008 போரில் உருசியா வெற்றி கண்டது. உருசியா பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தில் இருந்து மீண்டது. மெத்வேதெவ் கணிசமான சட்ட அமலாக்க சீர்திருத்தத்தைத் தொடங்கினார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தபோதிலும், ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மெத்வேதெவ் உருசிய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் இயக்குநர் அவைத் தலைவராகவும் 2000-ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றியிருக்கிறார்.[6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. First Deputy Prime Minister Dmitry Medvedev Endorsed for the Next President's Post [தொடர்பிழந்த இணைப்பு], Voice of Ruddia, 10 December 2007.
  2. Russian Parliament approves Medvedev's candidacy for premiership, RT
  3. Medvedev becomes Russia's PM: Voice of Russia பரணிடப்பட்டது 12 மே 2013 at the வந்தவழி இயந்திரம். The Voice of Russia (8 May 2012). Retrieved 10 May 2012.
  4. "Medvedev Announces Russian Government's Resignation". RadioFreeEurope/RadioLiberty (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.
  5. "Подписан Указ о Заместителе Председателя Совета Безопасности Российской Федерации: Владимир Путин подписал Указ «О Заместителе Председателя Совета Безопасности Российской Федерации»". kremlin.ru. 16 January 2020. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  6. Putin sees Medvedev as successor BBC News

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மெத்வேதெவ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமீத்ரி_மெத்வேதெவ்&oldid=3931249" இலிருந்து மீள்விக்கப்பட்டது