இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
ஏழாண்டுப் போர்
ஆபிரகாம் சமவெளிகள் சண்டையினைக் காட்டும் ஓவியம் (தி டெத் ஆஃப் ஜெனரல் வொல்ஃபே (1771); ஓவியர் பெஞ்சமின் வெஸ்ட்)
ஏழாண்டுப் போர் (Seven Years' War) என்பது 1756க்கும் 1763க்கும் இடையில் நடந்த உலகளாவிய இராணுவப் போராகும். வடக்கு அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரித்தானிய இந்தியா, பிலிப்பின்ஸ் இந்த போரில் பங்கு பெற்றன. வரலாற்றில் இந்தப் போர் பிரெஞ்சு இந்திய போர் (1754–1763), போமேரனியன் போர் (1757–1762), மூன்றாவது ஆங்கில மைசூர் போர் (1757–1763), மூன்றாவது சிலேசியன் போர் (1756–1763) என்றெல்லாம் அறியப்படுகிறது. பிரித்தானியப் பேரரசுக்கும் பிரெஞ்சு, எசுப்பானிய அரச மரபான போர்பன் குலத்துக்கும் இடையே நிலவிய பகையுணர்வும், பிரசியாவின் ஹோஹன்சோலர்ன் மற்றும் ஆஸ்திரியாவின் ஹாப்ஸ்பர்க் குடிகளிடையே நிலவிய பகையுணர்வும் இப்போருக்குக் காரணமாக அமைந்தன. இரு பெரும் கூட்டணிகள் மோதிக்கொண்ட இப்போரில் எப்பக்கத்துக்கும் முழுமையான வெற்றி கிட்டவில்லை.