பேச்சு:உருசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
COTWnew.png உருசியா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ரஸ்சியா ரஷ்யா எது சரி? --Natkeeran 20:06, 2 ஜூன் 2006 (UTC)

உருசியா அல்லது ர்ஷ்யா அல்லது ருஷ்யா. ரஸ்சியா என்பது சிறப்பாகத் தெரியவில்லை. ஒருசியர்கள் தங்கள் மொழியில் சகரத்தை சற்றே ஷகரம் போல் பலுக்குகிறார்கள். (வங்களியரும் அப்படித்தான்). ஆனாலும் ருஸ்கி எனப்தும் சரியே.--C.R.Selvakumar 22:20, 2 ஜூன் 2006 (UTC)செல்வா

ரஷ்யர்கள் தங்கள் நாட்டை ரஷ்ய மொழியில் றஸ்சீயா (Росси́я) என அழைப்பார்கள். மொழியை றுஸ்கி (Pycckии́) என அழைப்பார்கள். கட்டுரையில் ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiya அல்லது Rossija எனக் குறிக்கப்பட்டுள்ளது. அது தவறு. Russiya என இருக்க வேண்டும். தமிழில் (குறிப்பாக ஈழத்தில்) ரஷ்யா (இலக்கியத்தில் உருசியா) என்றும் ரஷ்யர்கள் (அல்லது உருசியர்கள்) என்று அழைப்பார்கள்.--Kanags 23:07, 2 ஜூன் 2006 (UTC)
இக் கட்டுரையின் தலைப்பை உருசியா என மாற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 19:20, 14 ஜூன் 2009 (UTC)
உருசியா எனவே மாற்றலாம்.--Kanags \பேச்சு 21:17, 14 ஜூன் 2009 (UTC)
பல நாடுகளின் பெயர்கள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மாற்றப்படுவதாகத் தெரிகிறது. தயவு செய்து மாற்றம் செய்பவர்கள் உரையாடல் பக்கத்தில் முதலில் கலந்துரையாடவும். "இரச்சியா" என்பது சரியான உச்சரிப்பாகத் தெரியவில்லை. இதுபோலவே சுவிட்சர்லாந்து, சுவித்தர்லாந்து என மாற்றப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை. மயூரநாதன் 01:24, 15 ஜூன் 2009 (UTC)

தலைப்பை மாற்றுக[தொகு]

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. ரஷ்யா என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை ரஷ்யா என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:52, 25 செப்டம்பர் 2019 (UTC)

@GangadharGan26:, நீங்கள் எத்தனையோ தலைப்புக்கள் தொடர்பில் இதே கருத்தை இட்டு வருகிறீர். இலங்கையில் உருசியா என்றே எழுதப்படுகிறது. இன்னும் பலவும் அங்ஙனமே. நீங்கள் இதற்கு முன்னர் கூறியவாறன்றி இசுக்கோதுலாந்து என்றே இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்புக்களில் காணப்படுகின்றன. இன்னும் ஏராளமான வேற்றுமொழிப் பெயர்கள் அங்ஙனமே தமிழிலக்கணஞ் சிதையாமல் மொழிபெயர்க்கவோ ஒலிபெயர்க்கவோ பட்டுள்ளமையைக் காணலாம். எதற்காக நீங்கள் தொடர்ச்சியாகத் தமிழக வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை. இங்கே தமிழகத்தினர் மட்டுமன்றி இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் பங்களித்து வருகின்றனர். உங்களது நாடல்லாத ஏனைய நாடுகளிலிருக்கும் வழமைகளையும் அறிந்து அவற்றையும் மதிக்கக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 07:59, 25 செப்டம்பர் 2019 (UTC)

உருசியா என்றால் வேறு நாட்டைக் குறிப்பது போல் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது. விக்கிப்பீடியா கொள்கைகளின்படி ஒரு தலைப்பு அனைவரும் அறியக்கூடியதாக இருக்க வேண்டும். கிரந்த எழுத்துக்களால் தமிழிலக்கணம் சிதைந்துவிடாது. பிறமொழிப் பெயர்களின் ஒலிப்பிற்கு அவை அவசியம். இலங்கை என்பது சிங்கள மொழிபேசும் நாடு. அங்கு தமிழர்கள் சிறுபான்மையாக வசிக்கின்றனர். அதுபோல் பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்கள் வாழும் இடமாகும். எனவே அவர்களின் வழக்கத்தை ஏற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது. GangadharGan26 (பேச்சு) 08:04, 25 செப்டம்பர் 2019 (UTC)

பெரும்பான்மையைப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் வழக்கம் விக்கிப்பீடியாவில் கிடையாது. நீங்கள் சொல்வது போல் பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டால் இலங்கையில் தமிழ் பேசாமல் சிங்களமும் இந்தியாவில் இந்தியும் மட்டுமே பேச வேண்டியிருக்கும். விக்கிப்பீடியாவில் எது சரி என்பதற்கும் எது தமிழிலக்கணத்துக்கு நெருக்கமானது என்பதற்குமே நாம் முன்னுரிமை கொடுத்து வருகிறோம்; எத்தனை பேர் அதிகமாக ஆதரவளிக்கிறார்கள் என்பதற்கல்ல.--பாஹிம் (பேச்சு) 10:01, 25 செப்டம்பர் 2019 (UTC)

மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே, இப்பாடலை 1917 ஆம் ஆண்டில் எழுதியவர் யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.--Kanags \உரையாடுக 11:00, 25 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உருசியா&oldid=2806973" இருந்து மீள்விக்கப்பட்டது