உருசிய வரலாறு
| உருசிய வரலாறு |
|---|
உருசிய வரலாறானது (ஆங்கிலம்: History of Russia) கிழக்கு சிலாவியர்களுடன் தொடங்குகிறது.[1][2] குறிப்பிடத் தகுந்த உருசிய வரலாற்றின் பாரம்பரிய தொடக்க நாளானது 862-ஆம் ஆண்டு வடக்கில் உருசு அரசு உருவாக்கப்பட்ட நாளாக உள்ளது. இந்த அரசானது வாராஞ்சியர்களால் ஆளப்பட்டது.[3][4] 882-இல் நோவ்கோரோதுவின் இளவரசர் ஒலெக் கீவைக் கைப்பற்றிக் கொண்டார். கிழக்கு சிலாவியர்களின் வடக்கு மற்றும் தெற்கு நிலங்களை ஒற்றை அதிகார அமைப்பின் கீழ் ஒன்றிணைத்தார். பத்தாம் நூற்றாண்டின் முடிவு வாக்கில் நிர்வாக மையத்தைக் கீவுக்கு நகர்த்தினார். வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று குறிப்பிடத்தகுந்த சுயாட்சியைப் பேணின. 988-ஆம் ஆண்டு இந்த அரசானது கிறித்தவ சமயத்தைப் பைசாந்தியப் பேரரசிடமிருந்து பின்பற்றத் தொடங்கியது. அடுத்த ஆயிரமாண்டுகளுக்கு உருசியப் பண்பாட்டை வரையறுத்த பைசாந்திய, சிலாவிய மற்றும் இசுக்கான்டினேவியப் பண்பாடுகளின் கலவையை இது தொடங்கி வைத்தது. 1237-1240-ஆம் ஆண்டுகளின் மங்கோலியப் படையெடுப்புகளின் காரணமாக ஓர் அரசாகக் கீவ உருசானது இறுதியாகச் சிதைவடைந்தது. 13-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மாசுகோவானது ஒரு குறிப்பிடத் தகுந்த அரசியல் மற்றும் பண்பாட்டு சக்தியாகத் தோன்றியது. உருசிய நிலப்பரப்புகளை ஒன்றிணைக்கத் தொடங்கியது.[5] 15-ஆம் நூற்றாண்டின் முடிவில் மாசுகோவைச் சுற்றியிருந்த பல சிறிய வேள் பகுதிகள் மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதியுடன் இணைக்கப்பட்டன. பேரரசர் மூன்றாம் இவானுக்குக் கீழ் அதன் சொந்த இறையாண்மையின் முழு கட்டுப்பாட்டையும் மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதியானது பெற்றது.
நான்காம் இவான் மாட்சி மிக்க வேள் பகுதியை 1547-ஆம் ஆண்டு ஜார் ஆட்சியாக மாற்றினார். எனினும், இவானின் மகன் முதலாம் பியேதோர் வாரிசின்றி 1598-ஆம் ஆண்டு இறந்த நிகழ்வானது ஒரு வாரிசுப் பிரச்சினையை உருவாக்கியது. இடர்ப்பாடுகளின் காலம் என்று அறியப்படும் அமைதியின்மை மற்றும் உள்நாட்டுப் போரின் ஒரு காலத்திற்கு உருசியாவைக் கொண்டு வந்தது. 1613-ஆம் ஆண்டு உரோமனோவ் அரசமரபின் முதல் ஜார் மன்னராக மிக்கைல் உரோமனோவுக்கு முடி சூட்டப்பட்டதுடன் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. 17-ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலத்தின் போது சைபீரியாவை ஆய்வு செய்து, வெல்லும் பணியை உருசியா முடித்தது. அந்த நூற்றாண்டின் முடிவு வாக்கில் அமைதிப் பெருங்கடல் வரையிலும் இருந்த நிலங்களுக்கு உரிமை கோரியது. உள்நாட்டு ரீதியாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பல்வேறு இனக்குழுக்களின் ஏராளமான கிளர்ச்சிகளை உருசியா எதிர் கொண்டது. 1670-1671-ஆம் ஆண்டின் ஒரு கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய கோசாக் தலைவர் இசுதென்கா இரசினை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். 1721-இல் பெரும் வடக்குப் போர் தொடங்கிய போது ஜார் மன்னரான முதலாம் பேதுரு அரசின் பெயரை உருசியப் பேரரசு என்று மாற்றினார். தன்னுடைய பேரரசின் புதிய தலைநகராக சென் பீட்டர்சுபெர்கை நிறுவியதற்காகவும், உருசியாவுக்கு மேற்கு ஐரோப்பியப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியதற்காகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். 1762-இல் உருசியா இரண்டாம் கேத்தரீனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பேரரசர் பேதுருவின் மேற்கத்தியமயமாக்கும் கொள்கைகளை இவர் தொடர்ந்தார். உருசிய அறிவொளிக்கால சகாப்தத்திற்கு தலைமை வகித்தார். கேத்தரீனின் பேரனான முதலாம் அலெக்சாந்தர் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனால் நடத்தப்பட்ட ஒரு படையெடுப்பை முறியடித்தார். உலக வல்லமைகளில் ஒன்றாக உருசியாவின் நிலையை உயர்த்தினார்.
19-ஆம் நூற்றாண்டின் போது சிறு விவசாயிகளின் புரட்சிகளானவை அதிகரித்தன. 1861-இல் உருசிய நிலக்கிழார்களிடமிருந்த பணியாளர் முறையை இரண்டாம் அலெக்சாந்தர் நீக்கியதுடன் இது முடிவுக்கு வந்தது. தொடர்ந்து வந்த தசாப்தங்களில் 1906-1914-இன் இசுதோலிபின் சீர்திருத்தங்கள், 1906-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு, மற்றும் அரசு துமாவானது (1906-1917) பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை கட்டற்றதாக மற்றும் தாராண்மையாக்கும் முயற்சியை மேற்கொண்டது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பேரரசர்கள் தங்களது தன்னிச்சை ஆட்சியை விட்டுக் கொடுக்க மறுத்தும், தங்களது சக்தியைப் பகிர்ந்து கொள்வதைத் தடுத்தும் வந்தனர். பொருளாதார நொடிப்பு, முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பு சரியாக மேலாண்மை செய்யப்படாதது மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான அமைப்புடனான அதிருப்தி ஆகியவை 1917-ஆம் ஆண்டு உருசியப் புரட்சிக்குத் தூண்டுதலாக அமைந்தன. முடியாட்சி முடிவுக்கு வந்ததானது தொடக்கத்தில் தாராண்மையாளர்கள் மற்றும் மிதவாதப் பொதுவுடமைவாதிகளின் ஒரு கூட்டணியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. ஆனால், அவர்களின் தோல்வியடைந்த கொள்கைகளானவை அக்டோபர் புரட்சிக்குக் காரணமாயின. 1922-இல் சோவியத் உருசியாவானது உக்குரைனிய சோ. ச. கு., பைலோருசிய சோ. ச. கு. மற்றும் தெற்கு காக்கேசிய சோ. கூ. ச. கு. ஆகியவற்றுடன் சேர்ந்து சோவியத் ஒன்றியத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அனைத்து நான்கு குடியரசுகளையும் இணைத்து சோவியத் ஒன்றியத்தை ஓர் ஒற்றை அரசாக அமைப்பதை இது அதிகாரப்பூர்வமாக்கியது. 1922 மற்றும் 1991-க்கு இடைப்பட்ட உருசிய வரலாறானது பொதுவாக சோவியத் ஒன்றியத்தின் வரலாறாக உருவானது. இக்காலத்தின் போது இரண்டாம் உலகப் போரின் வெற்றியாளர்களில் ஒரு நாடாக சோவியத் ஒன்றியம் திகழ்ந்தது. அதற்கு முன்னர் நாசி செருமனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளால் 1941-இல் நடத்தப்பட்ட ஒரு திடீர்ப் படையெடுப்பிலிருந்து மீண்டிருந்தது. அதற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துடன் நாசி செருமனியானது போரைத் தவிர்க்கும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவு நிலைகளின் போது சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்குப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட கிழக்கு ஐரோப்பாவில் இருந்த இதன் ஆதரவு நாடுகளானவை பனிப் போரில் சக வல்லரசான ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடன் ஒரு வல்லரசாக சோவியத் ஒன்றியம் போட்டியிடுவதற்கு உதவின.
1980-களின் நடுப்பகுதி வாக்கில் சோவியத் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளின் பலவீனங்களுடன் முதன்மையான சீர்திருத்தங்களை மிக்கைல் கொர்பச்சோவ் புதிதாகத் தொடங்கினார். பொதுவுடைமைக் கட்சி பலவீனமடைந்து, சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு இறுதியாக இது வழி வகுத்தது. உருசியா மீண்டும் தனித்து விடப்பட்டது. சோவியத் காலத்துக்குப் பிந்தைய உருசியாவின் வரலாற்றின் தொடக்கத்தை இது குறித்தது. உருசிய சோவியத் கூட்டாட்சி சமதர்மக் குடியரசானது தனக்குத் தானே உருசியா என்று பெயர் மாற்றிக் கொண்டது. சோவியத் ஒன்றியத்தின் வழி வந்த முதன்மையான அரசாக உருவானது.[6] உருசியா தன்னுடைய அணு ஆயுதங்களைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், வல்லரசு நிலையை இழந்தது. 1990-களில் சோவியத் சகாப்தத்தின் மையத் திட்டமிடல் மற்றும் உடைமைகளை அரசாங்கம் உரிமையாகக் கொண்டிருப்பதை நீக்கியது. அதிபர் விளாதிமிர் பூட்டினால் தலைமை தாங்கப்பட்ட புதிய தலைவர்கள் 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் மற்றும் பொருளாதார சக்தியைப் பெற்றனர். தீர்க்கமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டு வந்தனர். பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து ஓர் உலக சக்தியாக குறிப்பிடத்தக்க உலகளாவிய நிலையை உருசியா மீண்டும் பெற்றுள்ளது. கிரிமிய மூவலந்தீவை 2014-ஆம் ஆண்டு உருசியா இணைத்துக் கொண்டதானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்குக் காரணமாயின. உக்குரைன் மீதான உருசியாவின் 2022-ஆம் ஆண்டுப் படையெடுப்பானது இப்பொருளாதார தடைகள் அதிகப்படுத்தப்படுவதற்கு காரணமாகியுள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
[தொகு]
உருசிய நிலப்பரப்பில் முதல் மனித குடியிருப்பானது பழைய கற்காலத்தின் பிந்தைய பாதியின் தொடக்கப் பகுதியிலிருந்த ஓல்தோவன் காலத்திற்குக் காலமிடப்படுகிறது. சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓமோ இரெக்டசு மனிதர்கள் மேற்காசியாவிலிருந்து வடக்கு காக்கேசியாவிற்கு இடம் பெயர்ந்தனர். தமன் மூவலந்தீவில் அமைந்துள்ள தொல்லியல் களமானது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.[7] அவ்விடத்தில் 15 முதல் 12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எலசுமோதேரியம் காக்கேசியம் என்ற இனத்தின் ஒரு மண்டையோட்டில் ஒரு கற்கருவியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[8] வடக்கு காக்கேசியாவின் தாகெஸ்தான் அகுசா பகுதியில் 15 இலட்சம் ஆண்டுகள் பழமையான ஓல்தோவன் சிக்கிமுக்கி கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்கால உருசியாவின் நிலப்பரப்பில் தொடக்க கால மனிதர்களின் இருப்பை இது விளக்குகிறது.[9]
உருசியாவில் தெனிசோவன் மனிதர்களின் புதை படிவங்களானவை சுமார் 1,10,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு காலமிடப்படுகின்றன.[10] தெனிசோவா குகையில் கண்டெடுக்கப்பட்ட ஓர் எலும்புத் துணுக்கிலிருந்து பெறப்பட்ட மரபணுவானது சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த ஒரு பெண்ணுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நியாண்டர்தால் தாயையும், ஒரு தெனிசோவன் தந்தையையும் கொண்ட ஒரு கலப்பினம் அப்பெண் என காட்டப்பட்டுள்ளது.[11] கடைசியில் தப்பிப் பிழைத்திருந்த நியாண்டர்தால் மனிதர்களில் சிலருக்குத் தாயகமாகவும் உருசியா குறிப்பிடப்படுகிறது. அடிகேயாவில் உள்ள மெசுமைசுகயா குகையில் ஒரு நியாண்டர்தால் குழந்தையின் பகுதியளவு எலும்புக் கூடானது கரிமக் காலக் கணக்கெடுப்பின் படி வெறும் 45,000 ஆண்டுகளுக்கு மட்டுமே முந்தையது என்று காட்டப்பட்டுள்ளது.[12] சைபீரியாவின் அல்த்தாய் மலைத் தொடர்களில் தெனிசோவா குகை தளத்தில் பணியாற்றிய நோவாசிபீர்சுக்கின் தொல்லியல் மற்றும் இனவியல் அமைப்பைச் சேர்ந்த உருசிய தொல்லியல் ஆய்வாளர்கள் 2008-இல் ஒரு மனித இனக் குழந்தையின் ஐந்தாவது விரலைச் சேர்ந்த 40,000 ஆண்டுகள் பழமையான சிறிய எலும்புத் துணுக்கைக் கண்டுபிடித்தனர். மரபணு ஆராய்ச்சியானது இது முன்னர் அறியப்படாத மனிதர்களின் ஓர் இனம் என்பதை வெளிக் காட்டியது. அக்குழந்தைக்கு தெனிசோவா மனித இனம் என்று பெயரிடப்பட்டது.[13]
உருசிய நிலப்பரப்பின் பெரிய பரப்பளவில் ஓமோ சேப்பியன்கள் எனும் மனிதர்களின் முதல் தடையமானது நடு சைபீரியாவில் (உசுத்-இசிம் மனிதன்) 45,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குக் காலமிடப்படுகிறது. ஐரோப்பாவில் எங்கும் கண்டுபிடிக்கப்பட்ட உடலமைப்பு ரீதியிலான நவீன மனிதர்களின் இருப்புக்கான தொடக்க கால ஆதாரங்களில் சிலவற்றின் கண்டுபிடிப்பானது 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, உருசியாவின் தொன் ஆற்றுக்கு அருகிலிருந்த கோசுதெங்கி தொல்லியல் களம் (குறைந்தது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்பட்டது) மற்றும் சுங்கிர் (34,600 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்பட்டது) ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. மனிதர்கள் ஆர்க்டிக் உருசியாவை (மாமோந்தோவயா குர்யா) 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் அடைந்தனர்.
வரலாற்றுக்கு முந்தைய சகாப்தங்களின் போது தெற்கு உருசியாவின் பரந்த ஸ்டெப்பி புல்வெளிகளானவை நாடோடி மேய்ச்சல் வாழ்க்கை வாழ்ந்த பழங்குடியினங்களுக்குத் தாயகமாக இருந்தது. (செவ்வியல் பண்டைக் காலத்தின் போது இந்த பான்டிக் புல்வெளியானது "சிதியா" என்று அறியப்பட்டது.[14]) நெடுங்காலத்திற்கு முன்னரே மறக்கப்பட்டு விட்ட இந்த புல்வெளிப் பண்பாடுகளின் எஞ்சிய சிதிலங்களானவை 20-ஆம் நூற்றாண்டின் போக்கில் இபதோவோ,[14] சிந்தசுதா,[15] அருகைம்[16] மற்றும் பசிரிக்[17] போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைக் காலம்
[தொகு]
பொ. ஊ. மு. 8-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதியில் தனைசு மற்றும் பனகோரியா ஆகிய இடங்களில் வணிக சந்தைகளுக்குள் செவ்வியல் நாகரிகத்தை கிரேக்க வணிகர்கள் கொண்டு வந்தனர்.[18] கேலோனுசு நகரமானது எரோடோட்டசுவால் எலோனி மற்றும் புதினி ஆகிய இனத்தவர்களால் பொ. ஊ. மு. சுமார் 500-ஆம் ஆண்டு வாக்கில் குடியமரப்பட்டிருந்த ஒரு பெரிய (ஐரோப்பாவின் மிகப் பெரிய) மணல் மற்றும் மற அரண்களைக் கொண்ட கிராடு (அரண்களைக் கொண்ட சிலாவியக் குடியிருப்பு) என்று விளக்கப்பட்டுள்ளது. பொ. ஊ. மு. 513-இல் அகாமனிசியப் பேரரசின் மன்னனான முதலாம் தாரா கருங்கடலைச் சுற்றியிருந்த பகுதியிலிருந்து சிதியாவுக்குள் (நவீன கால உக்குரைன்) ஓர் இராணுவப் படையெடுப்பைத் தொடங்கினார். தற்போது தொன் என்று அறியப்படும் தனைசு ஆற்றை இறுதியாக அடைந்தார்.
பெரும்பாலும் மிலீட்டஸ் நகர-அரசைச் சேர்ந்த கிரேக்கர்கள் பொ. ஊ. மு. ஏழாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளின் போது நவீன கால கிரிமியா மற்றும் அசோவ் கடலின் பெரும் பகுதிகளைக் குடியேற்றமாக்கினர். பொ. ஊ. மு. 480 வாக்கில் பாசுபர இராச்சியமாக இது இறுதியாக ஒன்றிணைக்கப்பட்டது. பொ. ஊ. மு. 107-இல் பெரிய பாந்துசு இராச்சியத்துக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த இராச்சியமானது இறுதியாக உரோமைக் குடியரசால் வெல்லப்பட்டது. பாசுபர இராச்சியமானது உரோமைப் பேரரசின் ஒரு துணை அரசாக உருவானது. பொ. ஊ. மு. இரண்டாம் நூற்றாண்டின் போது கோத்துகள் கருங்கடலுக்குப் புலம் பெயர்ந்தனர். பொ. ஊ. மு. மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் பகுதியளவு-கதையான ஒய்யம் எனும் கோத்திய இராச்சியமானது தெற்கு உருசியாவில் ஊணர்களால் தாக்குதல் ஓட்டத்திற்கு உள்ளாகும் வரை நீடித்திருந்தது. பொ. ஊ. மு. மூன்றாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாசுபர இராச்சியமானது நாடோடிகளின் வெற்றிகரமான அலை போன்ற படையெடுப்புகளால் திணறடிக்கப்பட்டது[19]. ஐரோப்பாவுக்கு அடிக்கடி புலம் பெயரும் போர்க் குணம் கொண்ட பழங்குடியினங்கள் இதற்குத் தலைமை தாங்கின. ஊணர்களும், துருக்கிய அவார்களும் இப்பழங்குடியினங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பொ. ஊ. மு. இரண்டாம் ஆயிரமாண்டில் காமா மற்றும் இருதிசு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்புகளானவை ஆதி-உராலிய மொழி பேசிய மக்களுக்குத் தாயகமாக இருந்தது. தெற்கிலிருந்த ஆதி-இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்களுடன் இவர்கள் தொடர்பிலிருந்தனர். தெற்கு உராலியாவின் நவீன கால உக்கிரிய குடியிருப்புவாசிகளின் முன்னோர்கள் இந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்த மக்களாவர். பிற ஆய்வாளர்கள் காந்தி மக்கள் தெற்கு உரால் புல்வெளியில் தோன்றி வடக்கு நோக்கிப் புலம் பெயர்ந்து தங்களுடைய தற்போதைய அமைவிடத்திற்கு சுமார் பொ. ஊ. 500-ஆம் ஆண்டு வாக்கில் வந்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.
ஒரு துருக்கிய மக்களான கசர்கள் எட்டாம் நூற்றாண்டு வரை காசுப்பியன் மற்றும் கருங்கடலுக்கு இடைப்பட்ட கீழ் வோல்கா வடிநிலத்தின் ஸ்டெப்பி புல்வெளிகளை ஆண்டு வந்தனர்.[20] தங்களது சட்டங்கள், சகிப்புத் தன்மை மற்றும் பல-இன பண்பாட்டிற்காக குறிப்பிடப்படும் இவர்கள்[21] பால்டிக் பகுதி, மற்றும் பகுதாதுவில் மையத்தைக் கொண்டிருந்த முசுலிம் அப்பாசியக் கலீபகப் பேரரசுக்கு இடையிலான முதன்மையான வணிக இணைப்பாக இருந்தனர்.[22] கிழக்கு உரோமைப் பேரரசின் முக்கியமான கூட்டாளிகளாக இவர்கள் திகழ்ந்தனர்.[23] அரேபியக் கலீபகங்களுக்கு எதிராக வெற்றிகரமான ஒரு தொடர்ச்சியான போர்களில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.[20][24]
தொடக்க வரலாறு
[தொகு]தொடக்க சிலாவியர்
[தொகு]நவீன கால உருசியர்களின் முன்னோர்களில் சிலர் சிலாவியப் பழங்குடியினராக இருந்தனர். இவர்களின் உண்மையான தாயகமானது பிரிப்பெத்து சதுப்பு நிலங்கள் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[25] தொடக்க கால கிழக்கு சிலாவியர்கள் படிப்படியாக ஐரோப்பிய உருசியாவில் இரு அலைகளில் குடியமர்ந்தனர்: ஓர் அலையானது கீவிலிருந்து (தற்கால உக்குரைன்) தற்கால சுசுதால் மற்றும் முரோமை நோக்கியும், மற்றொரு அலையானது போலோத்சக்கிலிருந்து (தற்கால பெலருஸ்) வெலிக்கி நோவ்கோரோது நகரம் மற்றும் ரோசுதோவை நோக்கியும் புலம் பெயர்ந்தது.[26]
ஏழாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு உருசியாவின் மக்கள் தொகையில் பெரும்பாலான பகுதியினராக கிழக்கு சிலாவியர்கள் திகழ்ந்தனர்.[26] மெர்யா,[27] முரோமியர்[28] மற்றும் மெஸ்சேரா[29] போன்ற பூர்வீக பின்னிய மற்றும் பால்டிக் பழங்குடியினங்களை மெதுவாக வென்று இணைத்தனர்.
825-850-ஆவது ஆண்டுகளிலிருந்தே நடு தினேப்பர் ஆற்றுக்கு வடக்கே ஓர் அரசியல் படிநிலை அமைப்பானது இருந்தது. அநேகமாக இதற்கு முந்தைய காலத்திலிருந்தே கூட இது இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிராங்கிய நூலான அன்னலேசு பெர்தினியானியில் உண்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி சில ரோசுகள் (இப்பெயராலேயே இவர்கள் பைசாந்தியர்களால் அறியப்பட்டிருந்தனர்) பிராங்கிய மன்னன் பக்தியுடைய லூயிசின் அவைக்கு ஒரு பைசாந்திய தூதுக்குழுவுடன் சென்றனர். தங்களது தாயகத்துக்குத் திரும்புவதற்கு உதவி வேண்டினர். இவர்களது ஆட்சியாளர் கசர்களின் ஆட்சியாளருடையதை ஒத்த ஒரு பட்டத்தைக் கொண்டிருந்தார் (சகானுசு; ககான்). ஆனால், இருந்த போதிலும் இவர்கள் "சுவீடிய மக்களைச்" சேர்ந்தவராக தம்மைத் தாமே குறிப்பிட்டனர். எனினும், இந்த அரசியல் படிநிலை அமைப்புடன் தொடர்புடைய குறிப்பிடத்தகுந்த உண்மைகளானவை ஏராளமான முரண்பட்ட வரலாற்றுப் புரிதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.[30]
கீவ உருசு (862–1240)
[தொகு]
மேற்கு ஐரோப்பாவில் வைக்கிங்குகள் மற்றும் கிழக்கில் வாராஞ்சியர்கள்[31] என்று அறியப்பட்ட இசுக்கான்டினேவிய வடக்கு மனிதர்களானவர் வடக்கு ஐரோப்பா முழுவதும் கடல் கொள்ளை மற்றும் வணிகம் ஆகிய இரு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கிழக்கு பால்டிக்கிலிருந்து கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களுக்கு நீர் வழிகளின் வழியாகப் பயணிக்கும் துணிகர முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர்.[32] நோவ்கோரோதுதின் முதல் காலவரிசை நூல் மற்றும் முதன்மையான காலவரிசை நூல் போன்ற பல உருசு காலவரிசை நூல்களில் பதிவிடப்பட்டுள்ள வாராஞ்சியர்கள் அழைக்கப்படுதல் எனும் தொன்மத்தின் படி வாராஞ்சியர்களான உருரிக், சினேயசு மற்றும் துருவோர் ஆகியோர் 860-களில் மூன்று பட்டணங்களில் ஒழுங்கை நிலைநாட்ட அழைக்கப்பட்டனர். அந்த மூன்று நகரங்கள் முறையே வெலிக்கி நோவ்கோரோது (பெரும்பாலான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) அல்லது இச்சுதரயா லதோகா (இசுபாதியன் கோதெக்சு என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது); பெலூசெரோ; மற்றும் இசுபோர்சுக் (பெரும்பாலான நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது) அல்லது "இசுலோவென்ஸ்க்" (பெசுகோ மூன்றாவது காலவரிசை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆகியவை ஆகும்.[33][31][34][35] சான்றில்லாவிட்டாலும் குறிப்பிடப்படுவதன் படி, இவர்களது வழி வந்தவர்கள் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். தங்களது அதிகார அமைப்பை கீவ் வரை விரிவாக்கினர்.[36] கீவானது அதற்கு முன்னர் கசர்களால் ஆதிக்கம் பெற்றிருந்தது.[37]
இவ்வாறாக முதல் கிழக்கு சிலாவிய அரசான உருசானது தினேப்பர் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நெடுகில் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது.[35] ஆற்று வழிகளின் நெடுகில் வணிகத்தைப் பேணுவதில் ஒரு பொதுவான விருப்பத்தையுடைய, ஒத்துழைப்பையுடைய வேள் பகுதி அரசுகளின் ஒரு குழுவான கீவ உருசானது வோல்கோக் மற்றும் தினேப்பர் ஆறுகளின் நெடுகில் இசுக்கான்டினேவியா மற்றும் பைசாந்தியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையில் உரோமங்கள், மெழுகு மற்றும் அடிமைகளுக்கான வணிக வழியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.[35]
பத்தாம் நூற்றாண்டின் முடிவு வாக்கில் சிறுபான்மையினரான வடக்கு மனிதர்களின் இராணுவ உயர்குடியினர் பூர்வீக சிலாவிய மக்களுடன் இணைந்தனர்.[38] சார்கிராது அல்லது கான்சுடான்டினோபிலைச்[39] சூறையாடும் பல படையெடுப்புகளின் போக்கில் கிரேக்க கிறித்தவ தாக்கங்களையும் சிலாவிய மக்கள் உள்ளிழுத்துக் கொண்டனர். இது போன்ற ஒரு படையெடுப்பானது முதன்மையான சிலாவிய துருசினா தலைவரான முதலாம் இசுவியதோசுலாவின் உயிரைப் பறித்தது. வோல்காவில் கசர்களின் சக்தியை நொறுக்கியதற்காக இவர் பெயர் பெற்றிருந்தார்.[40]

கிழக்கு மரபுவழி கிறித்தவ சமயத்தின் ஒரு மாறுபட்ட சிலாவிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதற்காக கீவ உருசானது முக்கியமானதாக உள்ளது.[35] அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு உருசியப் பண்பாட்டை வரையறுத்த பைசாந்திய மற்றும் சிலாவியப் பண்பாடுகளின் ஒரு கலவையின் ஆழத்தை இது பெருமளவுக்கு அதிகரித்தது. இளவரசர் முதலாம் விளாதிமிரால் கீவ் வாசிகள் பொது திருமுழுக்கு செய்யப்பட்ட அலுவல்பூர்வ செயல்பாட்டின் மூலம் 988-ஆம் ஆண்டு இப்பகுதியானது கிறித்தவத்தைப் பின்பற்றத் தொடங்கியது.[41] சில ஆண்டுகளுக்குப் பிறகு உருசுகயா பிராவிதா என்ற சட்டங்களின் முதல் தொகுப்பானது புத்திசாலி யரோசிலாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.[42] அன்றிலிருந்து கீவ் இளவரசர்கள் பைசாந்திய எடுத்துக்காட்டைப் பின்பற்றத் தொடங்கினர். திருச்சபையை தங்களைச் சார்ந்திருக்கும் வகையில் அமைத்தனர்.[43]
11-ஆம் நூற்றாண்டு வாக்கில், குறிப்பாக புத்திசாலி யாரோசிலாவின் ஆட்சிக் காலத்தின் போது, கீவ உருசு ஐரோப்பியக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அப்போது இருந்ததை விட மேம்பட்ட ஒரு பொருளாதாரம், மற்றும் கட்டடக் கலை மற்றும் இலக்கியத்தில் சாதனைகளை வெளிக் காட்டியது.[44] ஐரோப்பிய கிறித்தவ இராச்சியங்களின் மொழிகளுடன் ஒப்பிடும் போது உருசிய மொழியானது தொடக்க கால கிறித்தவ நூல்களின் கிரேக்க மற்றும் இலத்தீன் தாக்கங்களைச் சிறிதளவு கொண்டிருந்தது.[35] இதற்குக் காரணம் திருச்சபை சிலாவிய மொழியானது நேரடியாக கிறித்தவ சமய வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டதே ஆகும்.[45] 11-ஆம் நூற்றாண்டின் முடிவில் உருசுக்கு அண்டைப் பகுதியாக இருந்த தெற்குப் புல்வெளிப் பகுதிகளில் ஒரு நாடோடி துருக்கிய மக்களான கிப்சாக்குகள் (இவர்கள் குமன்கள் என்றும் அறியப்பட்டனர்) முன்னர் இருந்த இருந்த பெச்சனகர்களை ஆதிக்கம் மிகுந்த சக்தியாக இடம் மாற்றினர். கருங்கடலின் நெடுகில் புல்வெளிகளில் ஒரு நாடோடி அரசை (தெசுது-இ கிப்சாக்) கிப்சாக்குகள் தொடங்கினர். கிப்சாக்குகளின் வாடிக்கையான தாக்குதல்களை முறியடிப்பது, குறிப்பாக கீவ் முறியடிப்பதானது, உருசிய தெற்குப் பகுதிகளுக்கு ஒரு கடுமையான சுமையாக இருந்தது. நாடோடி ஊடுருவல்களானவை ஒரு பெருமளவிலான சிலாவியர்கள் வடக்கின் பாதுகாப்பான, கடுமையான காடுகளைக் கொண்டிருந்த பகுதிகளுக்கு வந்து குவிவதற்குக் காரணமானது. குறிப்பாக சலேசியே என்று அறியப்பட்ட பகுதிக்கு இவர்கள் இடம் பெயர்ந்தனர்.[சான்று தேவை]
இந்த அரசை ஒன்றிணைந்து ஆட்சி செய்த அரச குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற உட்சண்டை காரணமாக ஓர் அரசாக கீவ உருசானது இறுதியாக சிதைவடைந்தது. கீவின் ஆதிக்கம் மங்கியதானது, வடகிழக்கே விளாதிமிர்-சுசுதால், வடக்கே நோவ்கோரோது மற்றும் தென்மேற்கே கலிச்-வோலினியா ஆகிய அரசுகலுக்கு அனுகூலமாக இருந்தது. 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலிய தங்க நாடோடிக் கூட்டம் இந்த அரசை வென்றதானது இறுதி அடியாக விழுந்தது. கீவ் அழிக்கப்பட்டது.[46] கலிச்-வோலினியாவானது இறுதியாக போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்துக்குள்[35] உள்ளிழுக்கப்பட்டது. அதே நேரத்தில். மங்கோலிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த விளாதிமிர்-சுசுதால் மற்றும் சுதந்திரமான நோவ்கோரோது குடியரசு ஆகிய கீவின் தொலை தூர விளிம்பிலிருந்த இரு பகுதிகள் நவீன உருசிய நாட்டுக்கான அடித்தளத்தை நிறுவின.[35]
மங்கோலியப் படையெடுப்பும், அடி பணிதலும் (1223–1480)
[தொகு]
படையெடுத்து வந்த மங்கோலியர்கள் உருசு சிதைவடைதலை வேகமாக்கினர். 1223-இல் ஒன்றிணையாத தெற்கு இளவரசர்கள் ஒரு மங்கோலிய ஊடுருவல் படையை கல்கா ஆற்றின் கரையில் எதிர் கொண்டனர். இதில் உருசு நாட்டவர் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டனர்.[47] 1237-1238-இல் மங்கோலியர்கள் விளாதிமிர் (4 பெப்ரவரி 1238),[48] மற்றும் வடகிழக்கு உருசியாவின் பிற முதன்மையான நகரங்களை எரித்துத் தரை மட்டமாக்கினர். சித் ஆற்றின் கரையில் உருசியர்களைத் தோற்றோடச் செய்தனர்.[49] பிறகு, மேற்கே போலந்து மற்றும் அங்கேரியை நோக்கி நகர்ந்தனர். அந்நேரத்திலேயே அவர்கள் உருசு வேள் பகுதிகளில் பெரும்பாலானவற்றை வென்றிருந்தனர்.[50] நோவ்கோரோது குடியரசு மட்டுமே மங்கோலிய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பியது. ஆன்சியாத்திய குழுமத்தின் வளையத்துக்குள் தொடர்ந்து செழித்திருந்தது.[51]
கீவ உருசின் நிலப்பரப்புகள் மீதான மங்கோலியப் படையெடுப்பின் தாக்கமானது சீரற்றதாக இருந்தது. மேம்பட்ட நகரப் பண்பாடானது கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தது. தொடக்க தாக்குதலின் அழிவிலிருந்து கீவ், விளாதிமிர் போன்ற பழைய மையங்கள் என்றுமே மீளாத போது,[46] மாசுகோ,[52] திவேர்[52] மற்றும் நீசுனி நோவ்கோரோது[53] போன்ற புதிய நகரங்கள் தங்க நாடோடிக் கூட்டத்தின் மேல் ஆட்சியின் கீழ் இருந்த, மங்கோலிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த உருசு வேள் பகுதிகளில் ஆதிக்கத்திற்காகப் போட்டியிடத் தொடங்கின. 1380-இல் குலிகோவோவில் திமித்திரி தோன்சுகோயால் தலைமை தாங்கப்பட்ட உருசிய இளவரசர்களின் ஒரு கூட்டணியானது மங்கோலியப் போர்ப் பிரபு மமயைத் தோற்கடித்திருந்தாலும்,[54] மங்கோலிய அதிகார அமைப்பை எதிர்த்ததற்காக ஒரு தண்டனையாக புதிய கான் தோக்தமிசு மற்றும் அவரது உருசிய கூட்டாளிகளின் படைகளானவை மாசுகோவை 1382-இல் உடனடியாக சூறையாடின.[55] மாசுகோவிய நூல்களில் பிந்தைய காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, 1480-இல் உக்கிரா ஆற்றின் தீர்க்கமற்ற நிலைப்பாட்டில் உருசு வென்றதானது "தாதர் நுகத்தடியின் முடிவு" மற்றும் "உருசியா விடுதலை பெற்றது" ஆகியவற்றை முக்கியத்துவப்படுத்தினாலும் கிரிமிய கான்கள் போன்ற பல்வேறு மேலாட்சிப் பிரபுக்களால் வரி வசூலிக்கப்படுவதுடன் சேர்த்து உருசு வேள் பகுதிகள் மீதான மங்கோலிய ஆதிக்கமானது 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தொடர்ந்தது.[56]

வோல்கா ஆற்றின் கீழ் பகுதிகளில் மங்கோலியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சராயிலிருந்த தங்களது மேற்கு தலைநகரத்திலிருந்து உருசியாவை அசைந்தாடச் செய்தனர்.[57] சராயானது நடுக்காலத்தில் இருந்த மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகும். உருசு இளவரசர்கள் தங்க நாடோடிக் கூட்டத்தின் மங்கோலியர்களுக்குத் திறை செலுத்த வேண்டியிருந்தது. மங்கோலியர்கள் பொதுவாக தாதர்கள் என்று அழைக்கப்பட்டனர்.[57] ஆனால், கைமாறாக கான்களுக்குத் துணைத் தலைவர்களாக உருசு இளவரசர்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரங்களைப் பெற்றனர். பொதுவாக தாங்கள் விரும்பிய படி ஆட்சி செய்வதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுதந்திரமானது இளவரசர்களுக்கு அளிக்கப்பட்டது.[57] அதே சமயத்தில், உருசிய மரபுவழித் திருச்சபையானது ஓர் ஆன்மீகப் புத்தெழுச்சியையும் கூட கண்டது.
இராணுவ உத்திகள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் உருசியர்கள் மீது மங்கோலியர்கள் தங்களது தாக்கத்தை விட்டுச் சென்றனர். மங்கோலிய ஆக்கிரமிப்பின் கீழ் மசுகோவியானது அதன் தபால் சாலை அமைப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, நிதி அமைப்பு மற்றும் இராணுவ அமைப்பு ஆகியவற்றையும் மேம்படுத்தியது.[35]
அதே நேரத்தில், நோவ்கோரோதுதின் இளவரசரான அலெக்சாந்தர் நெவ்ஸ்கியால் மேற்கிலிருந்து நோவ்கோரோதுதுக்கு எதிராக நடத்தப்பட்ட வடக்கு சிலுவைப் போர்களின் தாக்குதலை முறியடிக்க முடிந்தது. இருந்த போதிலும், மாட்சி மிக்க இளவரசராக உருவானாலும், அலெக்சாந்தர் தங்க நாடோடிக் கூட்டத்தின் சக்தியை எதிர்க்க வலிமையற்றவராக இருந்ததன் காரணமாக அடி பணிந்தவராக தன்னைத் தானே அறிவித்தார்.
மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதி (1283–1547)
[தொகு]மாசுகோவின் வளர்ச்சி
[தொகு]
அலெக்சாந்தர் நெவ்சுகியின் கடைசி மகனான தானீல் அலெக்சாந்திரோவிச் மாசுகோ வேள் பகுதியை நிறுவினார் (இது பொதுவாக மாசுகோவி என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிறது).[52] இது முதலில் தாதலர்களுடன் ஒத்துழைத்தும், இறுதியாக அவர்களை உருசியாவிலிருந்து வெளியேற்றவும் செய்தது. உருசியாவின் நடு ஆற்று அமைப்பில் நன்றாக அமைவிடத்தைப் பெற்றும், பாதுகாப்பான காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களால் சூழப்பட்டும் இருந்த மாசுகோவானது முதலில் விளாதிமிர் அரசுக்கு ஓர் அடி பணிந்த அரசாகத் திகழ்ந்தது. ஆனால், சீக்கிரமே தன்னுடைய பெற்றோர் அரசை உள்ளிழுத்துக் கொண்டது.
மாசுகோ வளர்ச்சியடைந்ததில் ஒரு முக்கியமான காரணியானது மங்கோலிய மேலாட்சி பிரபுக்களுடன் இதன் ஆட்சியாளர்கள் ஒத்துழைத்ததே ஆகும். மங்கோலியர்கள் மாசுகோவின் இளவரசருக்கு மாசுகோவின் மாட்சி மிக்க இளவரசர் என்ற பட்டத்தை வழங்கினர். உருசிய வேள் பகுதிகளிடமிருந்து தாதர்களுக்கு வர வேண்டிய வரியை வசூலிக்கும் முகவர்களாக இவர்களை ஆக்கினர். உருசிய மரபுவழித் திருச்சபையின் மையமாக மாசுகோ உருவானது. அப்போது இந்த வேள் பகுதியின் மதிப்பானது மேலும் அதிகரித்தது. திருச்சபையின் தலைவரான மெத்ரோபாலித்தன் 1299-இல் கீவிலிருந்து விளாதிமிருக்குத் தப்பித்து ஓடினார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையான பட்டமாகிய கீவ் மெத்ரோபாலித்தன் என்ற பட்டத்தின் கீழ் மாசுகோவில் திருச்சபையின் நிரந்தரமான தலைமையகத்தை நிறுவினார்.
14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் மங்கோலியர்களின் சக்தியானது வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. மாட்சி மிக்க இளவரசர்கள் மங்கோலியர் நுகத்தடியை வெளிப்படையாக எதிர்க்க இயலும் என எண்ணத் தொடங்கினர். 1380-இல் தொன் ஆற்றின் கரையில் நடந்த குலிகோவோ யுத்தத்தில் மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.[54] கடுமையாக சண்டையிட்டு பெறப்பட்ட இந்த வெற்றியானது உருசியாவின் தாதர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராவிட்டாலும் இது மாட்சி மிக்க இளவரசர் திமித்திரி தொன்சுகோய்க்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. உருசியாவில் மாசுகோவின் தலைமைத்துவமானது தற்போது உறுதியாக நிறுவப்பட்டிருந்தது. 14-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் இதன் நிலப்பரப்பானது விலைக்கு வாங்குதல், போர் மற்றும் திருமண உறவுமுறைகள் ஆகியவற்றின் மூலமாகப் பெருமளவுக்கு விரிவடைந்தது.
பேரரசர் மூன்றாம் இவான்
[தொகு]15-ஆம் நூற்றாண்டில் மாசுகோவின் மாட்சி மிக்க இளவரசர்கள் தங்களது மக்கள் தொகை மற்றும் செல்வத்தை அதிகரிப்பதற்காக உருசிய நிலத்தை வலிமைப்படுத்துவதைத் தொடர்ந்தனர். இந்த செயல்பாட்டின் மிக வெற்றிகரமான நபர் மூன்றாம் இவான் ஆவார்.[52] ஓர் உருசிய தேசிய அரசுக்கான அடித்தளங்களை இவர் அமைத்தார். தன்னுடைய சக்தி வாய்ந்த வடமேற்கு எதிரியான லித்துவேனியாவின் மாட்சி மிக்க வேள் பகுதியுடன் மேல் தினேப்பர் மற்றும் ஒகா ஆற்று வடிநிலங்களில் பகுதியளவு-சுதந்திரமான மேல் வேள் பகுதிகளில் சிலவற்றின் மீதான கட்டுப்பாட்டிற்காக இவான் போட்டியிட்டார்.[58][59]
சில இளவரசர்கள் கட்சி தாவியது, எல்லைப்புற சண்டைகள் மற்றும் நோவ்கோரோது குடியரசுடனான ஒரு நீண்ட கால போர் ஆகியவற்றின் மூலமாக மூன்றாம் இவானால் நோவ்கோரோது மற்றும் திவேர் ஆகிய அரசுகளை இணைக்க முடிந்தது.[60] இதன் விளைவாக இவரது ஆட்சியின் கீழ் மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதியானது அளவில் மும்மடங்கானது.[52] பெசுகோவுடனான இவரது சண்டையின் போது பிலோபெய் (பெசுகோவின் பிலோதியசு) என்ற பெயருடைய ஒரு துறவி மூன்றாம் இவானுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் இவனின் இராச்சியமானது மூன்றாவது உரோமாக இருக்கும் என கணித்துக் கூறினார்.[61] கான்சுடான்டினோபிளின் வீழ்ச்சி மற்றும் கடைசி கிரேக்க மரபுவழி கிறித்தவப் பேரரசரின் இறப்பு ஆகியவை புதிய உரோம் மற்றும் மரபுவழி கிறித்தவத்தின் தலைமையகமாக மாசுகோ உருவாகும் என்ற இந்த புதிய கருத்துக்கு வலுவூட்டின. மேலும், 1472-ஆம் ஆண்டு பைசாந்திய இளவரசி சோபியா பலையோலோகினாவை இவான் திருமணம் செய்து கொண்டதும் இதற்கு வலுவூட்டியது.[52]

மூன்றாம் இவனுக்குக் கீழ் பிரிகாசு எனப்படும் முதல் மைய அரசாங்க அமைப்புகளானவை உருசியாவில் உருவாக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து முதல் முறையாக சுதேப்னிக் எனப்படும் சட்டங்களின் முதல் தொகுப்பானது பின்பற்றப்படத் தொடங்கியது. உருசியாவின் சின்னமாக இரட்டைத் தலைக் கழுகானது பயன்படுத்தப்படத் தொடங்கியது.
அனைத்து உருசிய இளவரசர்கள் மற்றும் உயர்குடியினர் மீதான தனது ஒட்டு மொத்த இறையாண்மையை இவான் அறிவித்தார். தாதர்களுக்கு மேற்கொண்டு திறை செலுத்த மறுத்தார். வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த தங்க நாடோடிக் கூட்டம் முழுவதுமாகத் தோற்கடிக்கப்படுவதற்கான வழியைத் திறந்த ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களை இவான் தொடங்கினார். தங்க நாடோடிக் கூட்டமானது தற்போது பல்வேறு கானரசுகள் மற்றும் நாடோடிக் கூட்டங்களாகப் பிரிந்திருந்தது. இவானும், அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் தங்களது மேலாட்சியின் தெற்கு எல்லைகளை கிரிமிய தாதர்கள் மற்றும் பிற நாடோடிக் கூட்டங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க விரும்பினர்.[62] இந்த குறிக்கோளை அடைவதற்காக பெரிய அபாதிசு பட்டையைக் கட்டமைப்பதற்கு அவர்கள் கொடை வழங்கினர். இராணுவத்தில் சேவையாற்ற முன் வந்த உயர்குடியினருக்கு பண்ணை மாளிகைகளை வழங்கினர். குதிரைப்படையை அடிப்படையாக் கொண்ட வளர்ந்து வந்த ஓர் இராணுவத்திற்கு ஓர் அடித்தளத்தை இந்த பண்ணை மாளிகை அமைப்பானது வழங்கியது.

இவ்வழியில் உள்நாட்டில் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவதானது, அரசு வெளிப்புறமாக விரிவாக்கப்படுவதுடன் சேர்த்து நடைபெற்றது. 16-ஆம் நூற்றாண்டு வாக்கில் மாசுகோவின் ஆட்சியாளர்கள் ஒட்டு மொத்த உருசிய நிலப்பரப்பையும் தங்களது கூட்டு உடைமையாகக் கருதினர். பல்வேறு பகுதியளவு-சுதந்திரமுடைய இளவரசர்கள் இன்னும் குறிப்பிட்ட நிலப்பரப்புகளுக்கு உரிமை கோரினர்.[59] ஆனால், மூன்றாம் இவான் சிறிய இளவரசர்களை மாசுகோவின் மாட்சி மிக்க இளவரசரின் முதன்மை நிலையை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும், இராணுவம், நீதித்துறை மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள் மீதான கட்டுப்பாட்டை உடைய எதிர்த்து கேள்வியெழுப்ப இயலாத ஆட்சியாளர்களாக அவருடைய வழித் தோன்றல்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளினார். படிப்படியாக உருசிய ஆட்சியாளர் ஒரு சக்தி வாய்ந்த, சர்வாதிகார ஆட்சியாளரான ஒரு ஜாராக உருவாகினார். அதிகாரப்பூர்வமாக தனக்குத் தானே "ஜார்" என்ற பட்டத்தை சூட்டிக் கொண்ட முதல் உருசிய ஆட்சியாளர் நான்காம் இவான் ஆவார்.[52]
தன்னுடைய அரசின் நிலப்பரப்பை மூன்றாம் இவான் மும்மடங்காக்கினார். உருசு மீதான தங்க நாடோடிக் கூட்டத்தின் மேலாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். மாசுகோ கிரெம்லினை புதுப்பித்தார். உருசிய அரசுக்கான அடித்தளங்களை நிறுவினார். சுயசரிதையாளர் பென்னல் என்பவரின் கூற்றுப்படி இவரது ஆட்சிக் காலமானது "இராணுவ ரீதியாகப் புகழ் பெற்றதாகவும், பொருளாதார ரீதியாக உறுதியானதாகவும்" திகழ்ந்தது. இந்த சுயசரிதையாளர் இவரது நிலப்பரப்பு இணைப்புகள் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்கள் மீதான இவரது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். எனினும், பென்னல் இவரது ஆட்சிக் காலமானது பண்பாட்டு ரீதியிலான எழுச்சியின்மை மற்றும் ஆன்மிக ரீதியிலான வெறுமை ஆகியவற்றின் காலமாகவும் இருந்ததாக வாதிடுகிறார். உருசிய நிலங்களுக்குள் சுதந்திரமானது நீக்கப்பட்டிருந்தது. கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிரான தனது விரும்பாமை மூலம் உருசியா மற்றும் மேற்குலகத்துக்கு இடையிலிருந்த திரையை இவான் நீக்கினார். நிலப்பரப்பு விரிவாக்கத்திற்காக மேற்குலக கற்றல் மற்றும் நாகரிகத்தின் பலன்களை இவரது நாடானது பெறாத நிலைக்கு இவர் காரணமானார் என்று குறிப்பிடப்படுகிறது.[63]
உருசிய ஜார் ஆட்சி (1547–1721)
[தொகு]நான்காம் இவான்
[தொகு]
ஜார் மன்னரின் சர்வாதிகார அதிகாரங்களின் பெருக்கமானது நான்காம் இவானின் ஆட்சிக் காலத்தின் (1547–1584) போது ஓர் உச்சத்தை அடைந்தது. முடியரசரின் நிலையை அதற்கு முன்னர் இருந்திராத அளவுக்கு இவர் வலிமைப்படுத்தினார்.[64][65] உயர்குடியினரை தன்னுடைய விருப்பத்திற்கு இரக்கமற்ற வகையில் கீழ்படிய வைத்தார். வெறும் சிறிதளவு எதிர்ப்பைக் காட்டியோரையும் நாடு கடத்தினார் அல்லது மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.[52] இருந்த போதிலும், இவான் பொதுவாக தொலை நோக்குப் பார்வையுடைய ஓர் அரசியல் மேதையாகப் பார்க்கப்படுகிறார். தான் உருவாக்கிய ஒரு புதிய சட்டங்களைக் (1550-ஆம் ஆண்டின் சுதேப்னிக்) கொண்டு வந்ததன் மூலம் உருசியாவை சீர்திருத்தியவராகப் பார்க்கப்படுகிறார்.[66] செம்சுகி சோபோர் எனப்படும் முதல் உருசிய நிலக்கிழார் பிரதிநிதித்துவ அமைப்பை நிறுவினார். மதகுருமார்களின் செல்வாக்கைக் குறைத்தார்.[67] கிராமப்புற பகுதிகளில் உள்ளூர் அளவிலான சுய-மேலாண்மையை அறிமுகப்படுத்தினார்.[68] இசுதிரேல்ச்சி என்றழைக்கப்படும் முதல் வழக்கமான இராணுவத்தை உருசியாவில் இந்த ஜார் மன்னர் உருவாக்கினார்.
பால்டிக் கடற்கரையின் கட்டுப்பாடு மற்றும் கடல் வாணிபத்திற்கான வழியைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட இவரது நீண்ட கால லிவோனியப் போரானது இறுதியில் ஒரு செலவினத்தை ஏற்படுத்திய தோல்வியென நிரூபணமானது.[69] கசன், அசுதிரகான் மற்றும் சைபீரியா ஆகிய கானரசுகளை இணைக்க இவானால் முடிந்தது.[70] வோல்கா மற்றும் உரால் மலைகள் வழியாக ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் ஆக்ரோஷமான நாடோடிக் கூட்டங்களின் புலப்பெயர்வை இந்த வெற்றிகள் கடினமாக்கின. இந்த வெற்றிகளின் மூலமாக உருசியா ஒரு குறிப்பிடத்தக்க அளவுடைய முசுலிம் தாதர் மக்களைப் பெற்றது. பல இன மற்றும் பல நம்பிக்கைகளையுடைய ஓர் அரசாக உருவானது. இதே நேரம் வாக்கில், இசுதுரோகனோவ் வணிகக் குடும்பமானது உரல் மலைகளில் ஒரு திடமான இருப்பை நிறுவியது. சைபீரியாவைக் குடியேற்றமாக்க உருசிய கோசாக் மக்களைச் சேர்த்தது.[71]

இவரது ஆட்சிக் காலத்தின் பிந்தைய பகுதியில் இவான் தனது ஆட்சிப் பரப்பை இரண்டாகப் பிரித்தார். ஒப்ரிச்னினா என்று அறியப்பட்ட பகுதியில் நிலக்கிழார் வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான குருதி தோய்ந்த ஒழித்துக் கட்டல்களை இவானின் ஆதரவாளர்கள் நடத்தினர் (இளவரசர் ஆந்திரே குருப்சிகியின் துரோகத்திற்குப் பிறகு இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்). 1570-ஆம் ஆண்டின் நோவ்கோரோது படு கொலையில் இது இறுதிக் கட்டத்தை எட்டியது. இராணுவ இழப்புகள், கொள்ளை நோய்கள் மற்றும் மோசமான அறுவடைகளுடன் இதுவும் சேர்ந்து உருசியாவை பலவீனமடையச் செய்தது. இந்நிலை காரணமாக நடு உருசியப் பகுதிகளை கிரிமிய தாதர்களால் சூறையாட முடிந்தது. அவர்கள் 1571-இல் மாசுகோவை எரித்துத் தரை மட்டமாக்கினர்.[72] எனினும், 1572-இல் உருசியர்கள் கிரிமிய தாதர் இராணுவத்தை மோலோதி யுத்தத்தில் தோற்கடித்தனர். ஒப்ரிச்னினாவை இவான் கைவிட்டார்.[73][74]
நான்காம் இவானின் ஆட்சிக் காலத்தின் முடிவில் போலந்து-லித்துவேனியா மற்றும் சுவீடிய இராணுவங்கள் உருசியாவிற்குள் ஒரு சக்தி வாய்ந்த தலையீட்டை நடத்தின. இதன் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளை அழிவுக்குட்படுத்தின.[75]
இடர்ப்பாடுகளின் காலம்
[தொகு]
இவானின் மகனான பியோதோர் குழந்தைகளின்றி இறந்தார். இதற்குப் பிறகு உள்நாட்டுப் போர்கள் மற்றும் அயல்நாட்டு தலையீட்டின் ஒரு காலமானது வந்தது. இது இடர்ப்பாடுகளின் காலம் (1606–13) என்று அறியப்படுகிறது.[52] மட்டு மீறிய அளவுக்குக் குளிரான கோடை காலங்கள் (1601–1603) பயிர்களை சீர்குலைத்தன.[76] 1601-1603-ஆம் ஆண்டின் உருசிய பஞ்சத்திற்குக் காரணமாயின. சமூக ஒழுங்கின்மையை அதிகரித்தன. போரிசு கோதுனோவின் ஆட்சிக் காலமானது அமைதியின்மை, அயல்நாட்டுத் தலையீட்டுடன் கூடிய உள்நாட்டுப் போர், பல நகரங்கள் அழிவுக்குள்ளானது மற்றும் கிராமப்புறப் பகுதிகள் மக்கள் தொகைக் குறைவுக்கு உள்ளானதுடன் முடிவடைந்தது. உள்நாட்டு அமைதியின்மையால் பாதிப்படைந்திருந்த நாடானது போலந்து-லித்துவேனிய பொதுநலவாயத்தால் ஏற்படுத்தப்பட்ட அலைகள் போன்ற பல தலையீடுகளையும் ஈர்த்தது.[77] போலந்து-மாசுகோவியப் போரின் (1605–1618) போது போலந்து-லித்துவேனியப் படைகள் மாசுகோவை அடைந்தன. ஆள் மாறாட்டம் செய்யும் போலி முதலாம் திமித்திரி 1605-ஆம் ஆண்டிலும் பதவியில் அமர்த்தின. பிறகு 1607-இல் போலி இரண்டாம் திமித்திரிக்கு ஆதரவளித்தன. 4 சூலை [யூ.நா. 24 சூன்] 1610 அன்று குலுசினோ யுத்தத்தில் எத்மன் இசுதானிசுலாவ் சோல்கியேவ்சுகியால் தலைமை தாங்கப்பட்ட போலந்துப் படைகளால் ஒருங்கிணைந்த உருசிய-சுவீடிய இராணுவமானது தோற்கடிக்கப்பட்ட போது தீர்க்கமான தருணமானது வந்தது. இந்த யுத்தத்தின் விளைவாக ஏழு போயர்கள் என்றழைக்கப்பட்ட உருசிய உயர்குடியினரின் ஒரு குழுவானது 27 சூலை [யூ.நா. 17 சூலை] 1610 அன்று ஜார் மன்னர் வாசிலி சுயிசுகியைப் பதவியிலிருந்து நீக்கியது. 6 செப்டம்பர் [யூ.நா. 27 ஆகத்து] 1610 அன்று போலந்து இளவரசன் நான்காம் விலாதிசுலாவ் வசாவை உருசியாவின் ஜார் மன்னராக அங்கீகரித்தனர்.[78][79] 21 செப்டம்பர் [யூ.நா. 11 செப்டம்பர்] 1610 அன்று போலந்துக்காரர்கள் மாசுகோவை ஆக்கிரமித்தனர். மாசுகோ புரட்சியில் ஈடுபட்டது. ஆனால், ஆர்ப்பாட்டங்களானவை மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டன. நகரத்திற்குத் தீ வைக்கப்பட்டது.[80][81][82]
இப்பிரச்சனையானது படையெடுப்புக்கு எதிராக ஒரு தேசப்பற்று மிக்க தேசிய எழுச்சியை 1611 மற்றும் 1612 ஆகிய இரு ஆண்டுகளிலுமே தூண்டியது. வணிகன் குசாமா மினின் மற்றும் இளவரசர் திமித்திரி போசார்சிகியால் தலைமை தாங்கப்பட்ட ஒரு தன்னார்வ இராணுவமானது 4 நவம்பர் [யூ.நா. 22 அக்டோபர்] 1612 அன்று தலைநகரத்திலிருந்து அயல் நாட்டுப் படைகளை வெளியேற்றியது.[83][84][85]
அரசாங்கத்தின் மைய அதிகார அமைப்பின் வலிமையின் காரணமாக இடர்ப்பாடுகளின் காலம், மற்றும் பலவீனமான அல்லது ஊழல் ஜார் மன்னர்களின் ஆட்சியிலிருந்து ஒரு சுதந்திரமான நாடாக உருசியா மீண்டது. ஆட்சியாளரின் முறைமைத் தன்மை அல்லது அரியணையைக் கட்டுப்படுத்தும் பிரிவினர் ஆகிய யாரையும் சாராது அரசாங்கச் செயல்பாடுகளானவை தொடர்ந்து சேவையாற்றின.[52] எனினும், உருசிய-போலந்துப் போரில் போலந்து-லித்துவேனியப் பொதுநாலவாயத்திடம் பெரும்பாலான நிலப்பரப்பை இழப்பதற்கு இடர்ப்பாடுகளின் காலமானது காரணமானது. மேலும், இங்கிரியப் போரில் சுவீடியப் பேரரசிடமும் உருசியா நிலப்பரப்புகளை இழந்தது.
உரோமனோவ்கள் பொறுப்பேற்றலும், தொடக்க கால ஆட்சியும்
[தொகு]
பெப்ரவரி 1613-இல் அமைதியின்மை மற்றும் மாசுகோவிலிருந்து போலந்துக்காரர்களை வெளியேற்றியதற்குப் பிறகு ஒரு தேசிய அவையானது பிலாரெத்தின் இளம் மகனான மிக்கைல் உரோமனோவை அரியணைக்குத் தேர்ந்தெடுத்தது. உரோமனோவ் அரசமரபானது 1917 வரை உருசியாவை ஆண்டது.
புதிய முடியரசரின் உடனடி வேலையானது அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதாக இருந்தது. மாசுகோவுக்கு அதிர்ஷ்டவசமாக அதன் முதன்மையான எதிரிகளான போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயமும், சுவீடனும் ஒன்றுடனொன்று கசப்பான சண்டையில் ஈடுபட்டிருந்தன. இது 1617-இல் சுவீடனுடன் ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும், 1619-இல் போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயத்துடன் ஒரு தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் வாய்ப்பை உருசியாவுக்கு வழங்கியது.
இழந்த நிலப்பரப்புகளைத் திரும்ப பெறுவதானது 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. அப்போது உக்குரைனில் போலந்து ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கிமேல்நினித்சிகி கிளர்ச்சியானது (1648–1657) உருசியா மற்றும் உக்குரைனிய கோசாக்குகளுக்கு இடையில் பெரேயாசிலாவ் ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் முன்னர் போலந்தின் கட்டுப்பாட்டிலிருந்த இடது-கரை உக்குரைனில் கோசாக்குகளின் அரசுக்கு உருசியா பாதுகாப்பு வழங்கியது. இது நீண்ட காலம் நீடித்த உருசிய-போலந்துப் போருக்குத் (1654–1667) தூண்டுதலாக அமைந்தது. அப்போரானது ஆந்துருசோவோ ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் இடது-கரை உக்குரைன், கீவ் மற்றும் சுமோலென்சுக் ஆகியவற்றை இழந்ததைப் போலந்து ஏற்றுக் கொண்டது.[52] 16-ஆம் நூற்றாண்டின் முடிவில் தொடங்கிய சைபீரியா மீதான உருசியப் படையெடுப்பானது 17-ஆம் நூற்றாண்டில் தொடர்ந்தது. 1640-களின் முடிவு வாக்கில் உருசியர்கள் அமைதிப் பெருங்கடலை அடைந்தனர். அந்தரத்தில் உருசிய நாடுகாண் பயணியான செம்யோன் தேசினேவ் ஆசியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நீரிணைப்பைக் கண்டுபிடித்தார். தூரக் கிழக்கில் உருசிய விரிவாக்கமானது சிங் சீனாவிடமிருந்து எதிர்ப்பைப் பெற்றது. உருசியா மற்றும் சீனாவுக்கு இடையிலான போருக்குப் பிறகு நெர்சின்சிக் ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது. அமூர் பகுதியில் நிலப்பரப்புகளின் எல்லையை வரையறுத்தது.

மேற்கொண்ட உள்நாட்டுப் போரில் தங்களது நிலங்களை பாதிப்புக்கு உட்படுத்துவதற்கு மாறாக போயர்கள் முதலில் உரோமனோவ்களுடன் அதிகார அமைப்பு மையப்படுத்தப்படும் வேலையை முடிக்க அனுமதி அளித்து ஒத்துழைத்தனர். இவ்வாறாக அரசானது பழைய மற்றும் புதிய உயர்குடியினர் ஆகிய இரு பிரிவினரிடமிருந்தும், முதன்மையாக இராணுவத்தில், சேவையைப் பெறும் தேவையைக் கொண்டிருந்தது. மாறாக ஜார் மன்னர்கள் விவசாயிகளைப் பண்ணை அடிமை முறைக்கு மாற்றும் செயல்பாட்டை முடிக்க போயர்களுக்கு அனுமதி வழங்கினர்.
அதற்கு முந்தைய நூற்றாண்டில் அரசானது ஒரு நிலக்கிழாரிடமிருந்து மற்றொரு நிலக்கிழாருக்கு மாறும் விவசாயிகளின் உரிமைகளைப் படிப்படியாகச் சுருக்கியது. அரசானது தற்போது பண்ணை அடிமை முறைக்கு முழுவதுமாக அனுமதியளித்ததுடன், இந்த முறையிலிருந்து தப்பியோடிய விவசாயிகள் அரசாங்கத்திடமிருந்து தப்பியோடியவர்களாகக் கருதப்பட்டனர். தங்களது நிலத்துடன் "இணைக்கப்பட்ட" விவசாயிகள் மீதான நிலக்கிழார்களின் சக்தியானது கிட்டத்தட்ட முழுமையடைந்தது. அரசு மற்றும் உயர்குடியினர் இணைந்து விவசாயிகள் மீது திணறடிக்கும் வரிச் சுமையை ஏற்றினர். ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்ததை விட 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த வரி வீதமானது 100 மடங்கு அதிகமாக இருந்தது. இதே போல நடுத்தர வகுப்பு நகர்ப்புற வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கும் விதிக்கப்படும் வரியானது மதிப்பிடப்பட்டது. குடியிருக்கும் இடத்தை மாற்ற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனைத்து பிரிவு மக்களும் இராணுவ வரி மற்றும் சிறப்பு வரிகளுக்கு உள்ளாயினர்.[86]
மாசுகோவின் விவசாயிகள் மற்றும் குடிமகன்கள் மத்தியிலான ஆர்ப்பாட்டங்களானவை இந்நேரத்தில் பரவலாக நடைபெற்றன. இதில் உப்பு ஆர்ப்பாட்டம் (1648),[87] தாமிர ஆர்ப்பாட்டம் (1662)[87] மற்றும் மாசுகோ கிளர்ச்சி (1682)[88] ஆகியவை உள்ளடங்கும். 17-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் அதுவரை நடந்திராத மிகப் பெரிய விவசாயிகள் கிளர்ச்சியானது 1667-ஆம் ஆண்டு வெடித்தது. தெற்கு உருசியாவின் சுதந்திரமான குடியிருப்புவாசிகளான கோசாக் மக்கள் அரசின் அதிகரித்து வந்த மையப்படுத்தப்படும் நிலைக்கு எதிராக வினையாற்றினர். பண்ணை அடிமை முறையிலிருந்து விவசாயிகள் தங்களது நிழக்கிழார்களிடமிருந்து தப்பித்தனர். கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தனர். கோசாக் தலைவர் இசுதேங்கா ராசின் தனது ஆதரவாளர்களுக்குத் தலைமை தாங்கி வோல்கா ஆறு வரை சென்றார். இது விவசாயிகள் கிளர்ச்சிகளைத் தூண்டியது. உள்ளூர் அரசாங்கங்களை கோசாக் ஆட்சியானது இடமாற்றம் செய்தது.[52] ஜார் மன்னரின் இராணுவமானது அவரது படைகளை 1670-ஆம் ஆண்டு இறுதியாக நொறுக்கியது. ஓராண்டு கழித்து இசுதேங்கா பிடிக்கப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டார். இருந்த போதிலும், அடுத்த அரை நூற்றாண்டுக்குள்ளாகவே இராணுவப் போர்ப் பயணங்களின் செயல்பாடுகளானவை அசுதிரகானில் மற்றொரு கிளர்ச்சிக்குக் காரணமாயின. அதுவும் இறுதியாக ஒடுக்கப்பட்டது.
உருசியப் பேரரசு (1721–1917)
[தொகு]மக்கள் தொகை
[தொகு]உருசியாவின் விரிவாக்கத்தில் பெரும்பான்மையானது 17-ஆம் நூற்றாண்டில் நடைபெற்றறது. 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் முதல் உருசியக் குடியேற்றம் அமைக்கப்பட்டதில் உச்சநிலையை அடைந்தது. உருசிய-போலந்துப் போரானது (1654–1667) இடது-கரை உக்குரைனை இணைத்தது. சைபீரியா மீதான உருசிய படையெடுப்பும் இக்காலத்தில் நடைபெற்றது. 1790-1815 ஆண்டு கால சகாப்தத்தில் போலந்து பிரிக்கப்பட்டது. நிலம் மற்றும் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் உருசியாவுக்குள் இணைந்தனர். 19-ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியில் பெரும்பான்மையானது ஆசியாவில் சைபீரியாவுக்கு தெற்கே நிலப்பரப்பை இணைத்ததன் மூலம் நடைபெற்றது.[89]
| ஆண்டு | உருசியாவின் மக்கள் தொகை (கோடிகள்)[90] | குறிப்புகள் |
| 1720 | 1.55 | புதிய பால்டிக் மற்றும் போலந்து நிலப்பரப்புகள் உட்பட |
| 1795 | 3.76 | போலந்தின் பகுதிகள் உட்பட |
| 1812 | 4.28 | பின்லாந்து உட்பட |
| 1816 | 7.30 | பேரவை போலந்து, பெச்சராபியா உட்பட |
| 1914 | 17.00 | புதிய ஆசிய நிலப்பரப்புகள் உட்பட |
பேரரசர் பேதுரு
[தொகு]
பேரரசர் பேதுரு (முதலாம் பேதுரு, 1672–1725) மையப்படுத்தப்பட்ட சர்வாதிகாரத்தை உருசியாவுக்குள் கொண்டு வந்தார். ஐரோப்பிய அரசு அமைப்பிற்குள் நாட்டைக் கொண்டு வருவதில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார்.[91] உருசியா தற்போது உலகிலேயே மிகப் பெரிய நாடாகத் திகழ்ந்தது. பால்டிக் கடல் முதல் அமைதிப் பெருங்கடல் வரை விரிவடைந்திருந்தது. நிலத்தில் பெரும்பான்மையான பரப்பானது மக்களால் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தது. நாட்டிற்குள் பயணமானது மிகவும் மெதுவாக நடைபெற்றது. இந்நாட்டின் விரிவாக்கத்தில் பெரும்பான்மையானது 17-ஆம் நூற்றாண்டில் நடைபெற்றது. 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் முதல் உருசியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது, கீவ் மீண்டும் வெல்லப்பட்டது, மற்றும் சைபீரியப் பழங்குடியினங்கள் அமைதிப்படுத்தப்பட்டதுடன் இது உச்ச நிலையை அடைந்தது.[92] எனினும், வெறும் 1.40 கோடி மக்களே இந்த பரந்த நிலப்பரப்பில் பரவிக் காணப்பட்டனர். ஒரு குறுகிய பயிர் விளைச்சல் பருவத்துடன் தானிய மகசூலானது மேற்குலகத்தில் இருந்ததை விட குறைவாகவே கிடைக்கப் பெற்றது. உருளைக் கிழங்கு வேளாண்மையானது இன்னும் பரவலாக்கப்படாமல் இருந்தது. இதன் விளைவாக மக்கள் தொகையின் பணியாளர்களில் பெரும் அளவினர் வேளாண்மையில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். உருசியா கடல் வாணிபத்திலிருந்து இன்னும் தனித்து விடப்பட்டிருந்தது. இதன் உள்நாட்டு வணிகம், தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்தித் துறை ஆகியவை பருவ காலத்தைச் சார்ந்திருந்தன.[93]
பேதுரு உருசிய இராணுவத்தைச் சீர்திருத்தினார். உருசியக் கடற்படையை உருவாக்கினார். பேதுருவின் முதல் இராணுவ முயற்சிகளானவை உதுமானியத் துருக்கியர்களுக்கு எதிராக நடந்தன. அசோவ் பட்டணத்தைக் கைப்பற்றுவதன் மூலம் கருங்கடலில் ஓர் உருசிய வேறூன்றலை நிறுவுவது இவரது குறிக்கோளாக இருந்தது.[94] இவரது கவனமானது பிறகு வடக்கு நோக்கித் திருப்பியது. வெள்ளைக் கடலில் ஆர்க்கேஞ்சலில் இருந்ததைத் தவிர்த்து ஒரு பாதுகாப்பான வடக்கு கடல் துறைமுகம் இல்லாத நிலையையே பேதுரு கொண்டிருந்தார். ஆர்க்கேஞ்சல் கடல் துறைமுகம் ஓராண்டுக்கு ஒன்பது மாதங்கள் உறைந்திருந்தது. பால்டிக் கடலுக்கான வழியானது அக்கடலை மூன்று புறங்களிலும் சூழ்ந்திருந்த நிலப்பரப்புகளைக் கொண்டிருந்த சுவீடனால் தடுக்கப்பட்டது. "கடலுக்கான ஒரு சன்னல்" எனும் பேதுருவின் குறிக்கோள்களானவை 1699-இல் சுவீடனுக்கு எதிராக போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம் மற்றும் தென்மார்க்குடன் ஓர் இரகசியக் கூட்டணியை இவர் ஏற்படுத்துவதற்குக் காரணமானது. இது பெரும் வடக்குப் போருக்கு வழி வகுத்தது.
சோர்வடைந்த சுவீடன் உருசியாவுடன் அமைதி வேண்டிய போது இப்போரானது 1721-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பின்லாந்து வளைகுடாவிற்குத் தெற்கு மற்றும் கிழக்கே அமைந்திருந்த நான்கு மாகாணங்களைப் பேதுரு பெற்றார். இவ்வாறாக கடலுக்கு வழி வேண்டிய தனது குறிக்கோளை இவர் உறுதி செய்தார். 1703-இல் அங்கு உருசியாவின் புதிய தலைநகராக உருவாகிய சென் பீட்டர்சுபெர்கு நகரத்தை ஏற்கனவே இவர் நிறுவியிருந்தார். பொதுநலவாயத்தில் உருசிய தலையீடானது அமைதி செசத்துடன் (பொதுநலவாய நாடாளுமன்றம்) அப்பகுதியில் 200 ஆண்டு காலத்திற்கு உருசியப் பேரரசு ஆதிக்கம் செலுத்தியதன் தொடக்கத்தைக் குறித்தது. தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாட பேதுரு பேரரசர் என்ற பட்டத்தைப் பெற்றார். உருசிய ஜார் ஆட்சியானது அதிகாரப்பூர்வமாக 1721-ஆம் ஆண்டு உருசியப் பேரரசாக உருவானது.
பேதுரு தனது அரசாங்கத்தை அக்கால மேற்குலக மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு மறு ஒருங்கிணைப்பு செய்தார். ஓர் ஒட்டு மொத்த அதிகாரமுடைய அரசாக உருசியாவை உருவாக்கினார். பழைய போயர் துமாவானது (உயர்குடியினரின் மன்றம்) செனட் எனும் சபையால் இடமாற்றம் செய்யப்பட்டது. செயல்பாட்டு ரீதியில் அரசின் ஓர் அதியுயர் மன்றமாக உருவானது. கிராமப்புறப் பகுதியும் புதிய மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தனது குறிக்கோள் வரி வசூலிப்பது என செனட் சபையிடம் பேதுரு குறிப்பிட்டார். மாறாக இவரது ஆட்சிக் காலத்தின் போக்கில் வரி வருவாய்களானவை மும்மடங்கானது.[95]
பழைய அரசாங்கத் துறைகளை இடமாற்றம் செய்வதற்காக சென் பீட்டர்சுபெர்கில் நிர்வாக அமைச்சகங்கள் நிறுவப்பட்டன. 1722-இல் பேதுரு தனது பிரபலமான தரநிலைகளின் அட்டவணை என்ற சட்டத்தை அறிவித்தார். அரசாங்க சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக மரபுவழி திருச்சபையானது நாட்டின் நிர்வாக அமைப்புக்குள் பகுதியளவுக்கு இணைக்கப்பட்டது. செயல்பாட்டு ரீதியில் அரசின் ஒரு கருவியாக திருச்சபையை ஆக்கியது. பேதுரு திருச்சபை மதகுருமாரின் அலுவலகத்தை நீக்கினார். புனித சினோது என்றழைக்கப்பட்ட ஒட்டு மொத்த அமைப்பைக் கொண்டு இடமாற்றம் செய்தார். இந்த அமைப்பிற்கு ஓர் உபாசக அரசாங்க அதிகாரி தலைமை தாங்கினார். அனைத்து உயர்குடியினரும் அரசாங்க சேவையாற்ற வேண்டும் என்ற தனக்கு முந்தைய ஆட்சியாளர்களின் நிலையைப் பேதுரு தொடர்ந்து, அதிகப்படியாக்கினார்.
அந்நேரத்தில் தெற்கில் ஒரு காலத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்த பாரசீக சபாவியப் பேரரசானது கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பேதுரு உருசிய-பாரசீகப் போரைத் (1722–1723) தொடங்கினார். உருசிய வரலாற்றாளர்களால் "பேரரசர் பேதுருவின் பாரசீகப் போர்ப் பயணம்" என்று இது அறியப்படுகிறது. காக்கேசியா மற்றும் காசுப்பியன் கடல் பகுதியில் உருசிய செல்வாக்கை நிறுவிய முதல் உருசியப் பேரரசராக இவர் உருவானார். காக்கேசியா மற்றும் பாரசீகத்தின் வடக்கு முதன்மை நிலப்பகுதியில் பல மாகாணங்கள் மற்றும் நகரங்களைக் கைப்பற்றி, குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகளைப் பெற்றதற்குப் பிறகு உருசியாவிடம் நிலப்பரப்புகளை அளிக்கும் நிலைக்கு சபாவியர்கள் தள்ளப்பட்டனர். எனினும், 12 ஆண்டுகள் கழித்து அனைத்து நிலப்பரப்புகளும் பாரசீகத்திடம் திருப்பியளிக்கப்பட்டன. இப்போது வசீகரமான இராணுவ மேதையான நாதிர் ஷாவால் பாரசீகம் தலைமை தாங்கப்பட்டிருந்தது. ரெசுது மற்றும் கஞ்சா ஒப்பந்தங்கள், இரு நாடுகளுக்கும் பொதுவான அண்டை எதிரியான உதுமானியப் பேரரசுக்கு எதிரான உருசிய-பாரசீகக் கூட்டணி ஆகியவற்றின் ஒரு பகுதியாக இவ்வாறு திருப்பியளிக்கப்பட்டது.[96]
பேரரசர் பேதுரு 1725-இல் இறந்தார். தனது வாரிசு யார் என்று அவர் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அவரது ஆட்சிக் காலத்தின் முடிவின் போது உருசியா ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவாகியிருந்தது. முதலாம் பேதுருவுக்குப் பிறகு அவரது இரண்டாவது மனைவியான முதலாம் கேத்தரீன் பதவிக்கு (1725–1727) வந்தார். உயரதிகாரிகளின் ஒரு சக்தி வாய்ந்த குழுவிற்கு வெறுமனே ஓர் அடையாளத் தலைவியாக அவர் திகழ்ந்தார். அதற்குப் பிறகு பேதுருவின் சிறு வயது பேரன் இரண்டாம் பேதுருவும் (1727–1730), பிறகு பேதுருவின் உடன் பிறப்பின் மகளும், ஜார் மன்னர் ஐந்தாம் இவானின் மகளுமான அன்னா ஆட்சிக்கு (1730–1740) வந்தார். அன்னாவின் வாரிசு ஓர் ஆட்சி கவிழ்ப்பில் சீக்கிரமே பதவி நீக்கம் செய்யப்பட்டார். முதலாம் பேதுருவின் மகளான எலிசபெத்து 1741 முதல் 1762 வரை ஆட்சி புரிந்தார். எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தின் போது உருசியா ஏழாண்டுப் போரில் பங்கெடுத்தது.
பேரரசி கேத்தரீன்
[தொகு]
பேதுருவைப் போல ஒப்பீட்டளவில் குறிக்கோள்களையுடைய ஓர் ஆட்சியாளர் தோன்றுவதற்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கடந்தன. உருசிய முடியாட்சிக்கான செருமானிய வாரிசை மணந்த ஒரு செருமானிய இளவரசியான "பேரரசி" இரண்டாம் கேத்தரீன் (ஆ. 1762–1796) தான் அந்த ஆட்சியாளர். இவர் தன் கணவனை 1762-ஆம் ஆண்டில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பில் பதவியிலிருந்து தூக்கியெறிந்ததற்கு பிறகு ஆட்சி அதிகாரமுடைய அரசியானார்.[97][98] அறிவொளிக் கால கருத்துக்களுக்கு உற்சாகத்துடன் கேத்தரீன் ஆதரவளித்தார். இவ்வாறாக ஓர் அறிவொளி பெற்ற எதேச்சதிகாரி என்ற நிலையைப் பெற்றார் என்று குறிப்பிடப்படுகிறது. கலை, அறிவியல் மற்றும் கற்றலுக்கு இவர் ஆதரவளித்தார்.[99] பேரரசர் பேதுருவின் இறப்பிற்குப் பிறகு தொடங்கிய உருசிய உயர்குடியினர் மறு எழுச்சி பெற இவர் பங்களித்தார். உயர்குடியினருக்கான சாசனத்தை கேத்தரீன் அறிவித்தார். இது உருசிய உயர்குடியினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீண்டும் தெளிவுபடுத்தியது. கட்டாய அரசாங்க சேவையை நீக்கியது. திருச்சபையின் அனைத்து நிலங்களின் கட்டுப்பாட்டையும் இவர் பறித்தார். மடாலயங்களின் அளவைப் பெருமளவுக்கு குறைத்தார். எஞ்சிய மதகுருமார்களை ஒரு சிக்கனமான வரவு செலவு திட்டத்தின் கீழ் வைத்தார்.[100]
நிலப்பரப்பை விரிவாக்கும் ஓர் அயல்நாட்டுக் கொள்கைக்கு கேத்தரீன் பெருமளவுக்கு செலவழித்தார். தர்கோவிகா கூட்டமைப்புக்கு ஆதரவளித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் போலந்து-லித்துவேனிய பொதுநலவாயம் மீதான உருசியாவின் அரசியல் கட்டுப்பாட்டை இவர் விரிவாக்கினார். இவரது படையெடுப்புகளுக்கான செலவினங்களுடன் சேர்த்து தங்களது நிலக்கிழார்களின் நிலத்தில் கிட்டத்தட்ட தங்களது அனைத்து நேரத்தையும் பணி செய்வதிலேயே பண்ணைக் கொத்தடிமைகள் செலவழிக்க வேண்டிய தேவையைக் கொண்டிருந்த ஒடுக்குமுறை கொண்ட சமூக அமைப்பானது 1773-ஆம் ஆண்டில் விவசாயிகளின் ஒரு முதன்மையான கிளர்ச்சியைத் தூண்டியது. எமெல்யன் புகசேவ் என்ற பெயருடைய ஒரு கொசக்கால் அகத்தூண்டுதல் பெற்ற கிளர்ச்சியாளர்கள் "அனைத்து நிலக்கிழார்களையும் தூக்கிலிடுங்கள்" என்ற உறுதியான குரலை எழுப்பினர். கேத்தரீனால் இந்த கிளர்ச்சி நொறுக்கப்படும் வரை கிளர்ச்சியாளர்கள் மாசுகோவை கைப்பற்றும் நிலையில் அச்சுறுத்தலாக விளங்கினர். ஐரோப்பாவின் பிற அறிவொளி பெற்ற எதேச்சதிகாரிகளைப் போலவே தன்னுடைய சொந்த அதிகாரத்தை கேத்தரீன் உறுதிப்படுத்தினார். உயர்குடியினருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார்.[101]
சிதைவடைந்து கொண்டிருந்த உதுமானியப் பேரரசுக்கு எதிராக கேத்தரீன் வெற்றிகரமாக இரு போர்களைத் (1768–1774, 1787–1792) தொடுத்தார்.[102] உருசியாவின் தெற்கு எல்லையை கருங்கடலுக்குக் கொண்டு சென்றார். 1775-இல் பகுதியளவு தன்னாட்சி கொண்டிருந்த கொசக் அரசியல் அமைப்பான சபோரிசியா சிச்சை இவர் கலைத்தார். உக்குரைனிய கொசக்குகளின் முந்தைய நிலங்களில் அவர்களது குடியிருப்புகளின் இடங்களில் நோவோரோசியா ஆளுநராகமானது உருவாக்கப்பட்டது. இதில் புதிய நகரங்களான யகதெரினோசிலாவ் (1776), எலிசவேத்கிராத், கெர்சன் (1778) மற்றும் ஒடெசா (1794) ஆகியவை அமைக்கப்பட்டன.[103][104][105][106] உருசியா 1783-இல் கிரிமியாவை இணைத்தது. கருங்கடல் கப்பல் குழுவை உருவாக்கியது. பிறகு ஆத்திரியா மற்றும் புருசியாவின் ஆட்சியாளர்களுடன் இணைந்ததன் மூலம் இவர் போலந்து-லித்துவேனிய பொது நலவாயத்தின் நிலப்பரப்புகளை உருசியாவுடன் இணைத்தார். ஒரு நூற்றாண்டு கால உருசிய ஆட்சிக்குப் பிறகு இங்கே கத்தோலிக்கர் அல்லாத, முதன்மையாக மரபுவழி கிறித்தவ மக்கள் தொகை போலந்து பிரிக்கப்பட்ட காலத்தின் போது உருவானது.[107] இது உருசியாவின் எல்லைகளை மேற்கு நோக்கி நாடு ஐரோப்பாவுக்குள் விரிவாக்கியது.[108]

சார்சியர்களுக்கு எதிராக அவர்களின் பாரசீக மேலாட்சியாளர்களின் எந்த ஒரு புதிய படையெடுப்பு மற்றும் மேற்கொண்ட அரசியல் குறிக்கோள்களுக்கு எதிராக சார்சியர்களைப் பாதுகாப்போம் என உருசியா ஒப்பந்தம் செய்திருந்தது. பாரசீகர்கள் சார்சியா மீது படையெடுத்து 1795-இல் அங்கு ஆட்சியை நிறுவியிருந்தனர். காக்கேசியாவில் புதிதாக நிறுவப்பட்ட உருசிய கோட்டை காவல் படையினரை வெளியேற்றியிருந்தனர். இதைத் தொடர்ந்து 1796-இல் கேத்தரீன் பாரசீகத்திற்கு எதிராக ஒரு புதிய போரைத் தொடங்கினார்.
1798-1799-இல் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான கூட்டணியில் உருசியத் துருப்புகள் பங்கெடுத்தன. தளபதி அலெக்சாந்தர் சுவோரோவ் தலைமையிலான துருப்புகள் வடக்கு இத்தாலியில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of Russia – Slavs in Russia: from 1500 BC". Historyworld.net. Archived from the original on 9 March 2006. Retrieved 14 July 2016.
- ↑ Hosking, Geoffrey; Service, Robert, eds. (1998). Russian Nationalism, Past and Present. Springer. p. 8. ISBN 9781349265329.
- ↑ Grey, Ian (2015). Russia: A History. New Word City. p. 5. ISBN 9781612309019.
- ↑ Ketola, Kari; Vihavainen, Timo (2014). Changing Russia? : history, culture and business (1 ed.). Helsinki: Finemor. p. 1. ISBN 978-9527124017.
- ↑ Curtis, Glenn Eldon (1998). Russia: A Country Study (in ஆங்கிலம்). Federal Research Division, Library of Congress. p. 12. ISBN 978-0-8444-0866-8.
Muscovy gained full sovereignty over the ethnically Russian lands... by the beginning of the sixteenth century virtually all those lands were united
- ↑ Article 1 of the Lisbon Protocol from the U.S. State Department website. பரணிடப்பட்டது 28 மே 2019 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Щелинский В. Е. и др. Раннеплейстоценовая стоянка Кермек в Западном Предкавказье (предварительные результаты комплексных исследований) பரணிடப்பட்டது 21 மார்ச் 2021 at the வந்தவழி இயந்திரம் // Краткие сообщения ИА РАН. Вып. 239, 2015.
- ↑ Щелинский В. Е. "Об охоте на крупных млекопитающих и использовании водных пищевых ресурсов в раннем палеолите (по материалам раннеашельских стоянок Южного Приазовья)" (PDF). www.archaeolog.ru (in ரஷியன்). Archived (PDF) from the original on 7 June 2023. Retrieved 17 December 2019. // Краткие сообщения Института археологии. Вып. 254. 2019
- ↑ Chepalyga, A.L.; Amirkhanov, Kh.A.; Trubikhin, V.M.; Sadchikova, T.A.; Pirogov, A.N.; Taimazov, A.I. (2011). "Geoarchaeology of the earliest paleolithic sites (Oldowan) in the North Caucasus and the East Europe". Archived from the original on 20 May 2013. Retrieved 18 December 2013.
Early Paleolithic cultural layers with tools of oldowan type was discovered in East Caucasus (Dagestan, Russia) by Kh. Amirkhanov (2006) [...]
- ↑ A fourth Denisovan individual பரணிடப்பட்டது 15 ஆகத்து 2022 at the வந்தவழி இயந்திரம், 2017.
- ↑ Matthew Warren, «Mum's a Neanderthal, Dad's a Denisovan: First discovery of an ancient-human hybrid - Genetic analysis uncovers a direct descendant of two different groups of early humans», Nature, vol. 560, 23 August 2018, pp. 417-418.
- ↑ Igor V. Ovchinnikov; Anders Götherström; Galina P. Romanova; Vitaliy M. Kharitonov; Kerstin Lidén; William Goodwin (30 March 2000). "Molecular analysis of Neanderthal DNA from the northern Caucasus". Nature 404 (6777): 490–493. doi:10.1038/35006625. பப்மெட்:10761915. Bibcode: 2000Natur.404..490O.
- ↑ Mitchell, Alanna (30 January 2012). "Gains in DNA Are Speeding Research into Human Origins". The New York Times இம் மூலத்தில் இருந்து 12 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170912024249/http://www.nytimes.com/2012/01/31/science/gains-in-dna-are-speeding-research-into-human-origins.html?_r=2&nl=todaysheadlines&emc=tha210/&.
- ↑ 14.0 14.1 Belinskij, Andrej; H. Härke (March–April 1999). "The 'Princess' of Ipatovo". Archeology 52 (2). http://cat.he.net/~archaeol/9903/newsbriefs/ipatovo.html. பார்த்த நாள்: 26 December 2007.
- ↑ Drews, Robert (2004). Early Riders: The beginnings of mounted warfare in Asia and Europe. New York: Routledge. p. 50. ISBN 0-415-32624-9.
- ↑ Dr. Ludmila Koryakova, "Sintashta-Arkaim Culture"[usurped!] - The Center for the Study of the Eurasian Nomads (CSEN). Retrieved 20 July 2007.
- ↑ 1998 NOVA documentary: "Ice Mummies: Siberian Ice Maiden" பரணிடப்பட்டது 13 மே 2011 at the வந்தவழி இயந்திரம் Transcript.
- ↑ Esther Jacobson, The Art of the Scythians: The Interpenetration of Cultures at the Edge of the Hellenic World, Brill, 1995, p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09856-9.
- ↑ Peter Turchin, Historical Dynamics: Why States Rise and Fall, Princeton University Press, 2003, pp. 185–186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-11669-5.
- ↑ 20.0 20.1 David Christian, A History of Russia, Central Asia and Mongolia, Blackwell Publishing, 1998, pp. 286–288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-20814-3.
- ↑ Frank Northen Magill, Magill's Literary Annual, 1977 Salem Press, 1977, p. 818. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89356-077-4.
- ↑ André Wink, Al-Hind, the Making of an Indo-Islamic World, Brill, 2004, p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09249-8.
- ↑ András Róna-Tas, Hungarians and Europe in the Early Middle Ages: An Introduction to Early Hungarian History, Central European University Press, 1999, p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 963-9116-48-3.
- ↑ Daniel H. Frank and Oliver Leaman, History of Jewish Philosophy, Routledge, 1997, p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-08064-9.
- ↑ For a discussion of Slavic origins, see Paul M. Barford, The Early Slavs, Cornell University Press, 2001, pp. 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-3977-9.
- ↑ 26.0 26.1 David Christian, op cit., pp. 6–7.
- ↑ Henry K Paszkiewicz, The Making of the Russian Nation, Darton, Longman & Todd, 1963, p. 262.
- ↑ Ed. Timothy Reuter, The New Cambridge Medieval History, Volume 3, Cambridge University Press, 1995, pp. 494-497. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-36447-7.
- ↑ Aleksandr Lʹvovich Mongaĭt, Archeology in the U.S.S.R., Foreign Languages Publishing House, 1959, p. 335.
- ↑ Jonathan Shepard, "The Origins of Rus' (c. 900–1015)," in The Cambridge History of Russia, vol. 1, ed. Maureen Perrie (Cambridge: Cambridge University Press, 2006), 49-51.
- ↑ 31.0 31.1 Magocsi 2010, ப. 55, 59–60.
- ↑ Dimitri Obolensky, Byzantium and the Slavs, St Vladimir's Seminary Press, 1994, p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88141-008-X.
- ↑ Martin 2009b, ப. 3.
- ↑ Cross & Sherbowitz-Wetzor 1953, ப. 38–39.
- ↑ 35.0 35.1 35.2 35.3 35.4 35.5 35.6 35.7 Kievan Rus' and Mongol Periods பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், excerpted from Glenn E. Curtis (ed.), Russia: A Country Study, Department of the Army, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-16-061212-8.
- ↑ James Westfall Thompson, and Edgar Nathaniel Johnson, An Introduction to Medieval Europe, 300–1500, W. W. Norton & Co., 1937, p. 268.
- ↑ David Christian, Op cit. p. 343.
- ↑ Particularly among the aristocracy. See World History[usurped!]. Retrieved 22 July 2007.
- ↑ See Dimitri Obolensky, "Russia's Byzantine Heritage," in Byzantium & the Slavs, St Vladimir's Seminary Press, 1994, pp. 75–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88141-008-X.
- ↑ Serhii Plokhy, The Origins of the Slavic Nations: Premodern Identities in Russia, Ukraine, and Belarus, Cambridge University Press, 2006, p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-86403-8.
- ↑ See The Christianisation of Russia பரணிடப்பட்டது 27 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம், an account of Vladimir's baptism, followed by the baptism of the entire population of Kiev, as described in The Russian Primary Chronicle.
- ↑ Gordon Bob Smith, Reforming the Russian Legal System, Cambridge University Press, 1996, pp. 2–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-45669-X.
- ↑ P. N. Fedosejev, The Comparative Historical Method in Soviet Mediaeval Studies, USSR Academy of Sciences, 1979. p. 90.
- ↑ Russell Bova, Russia and Western Civilization: Cultural and Historical Encounters, M.E. Sharpe, 2003, p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7656-0976-2.
- ↑ Timothy Ware: The Orthodox Church (Penguin, 1963; 1997 revision) p. 74
- ↑ 46.0 46.1 In 1240. See Michael Franklin Hamm, Kiev: A Portrait, 1800–1917, Princeton University Press, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-02585-1
- ↑ See David Nicolle, Kalka River 1223: Genghis Khan's Mongols Invade Russia, Osprey Publishing, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-233-4.
- ↑ Tatyana Shvetsova, The Vladimir Suzdal Principality பரணிடப்பட்டது 20 மார்ச் 2008 at the வந்தவழி இயந்திரம். Retrieved 21 July 2007.
- ↑ Martin 2004, ப. 139.
- ↑ "The Destruction of Kiev". Archived from the original on 27 April 2011.
- ↑ Jennifer Mills, The Hanseatic League in the Eastern Baltic பரணிடப்பட்டது 29 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம், SCAND 344, May 1998. Retrieved 21 July 2007.
- ↑ 52.00 52.01 52.02 52.03 52.04 52.05 52.06 52.07 52.08 52.09 52.10 52.11 Muscovy பரணிடப்பட்டது 20 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம், excerpted from Glenn E. Curtis (ed.), Russia: A Country Study, Department of the Army, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-16-061212-8.
- ↑ Sigfried J. De Laet, History of Humanity: Scientific and Cultural Development, Taylor & Francis, 2005, p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-3-102814-6.
- ↑ 54.0 54.1 The Battle of Kulikovo (8 September 1380)[usurped!]. Retrieved 22 July 2007.
- ↑ Halperin 1987, ப. 73–75.
- ↑ Halperin 1987, ப. 77–78.
- ↑ 57.0 57.1 57.2 "History of the Mongols". History World. Archived from the original on 28 October 2018. Retrieved 26 July 2007.
- ↑ Ivan III பரணிடப்பட்டது 6 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம், The Columbia Encyclopedia, Sixth Edition. 2001–05.
- ↑ 59.0 59.1 Ivan III பரணிடப்பட்டது 15 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2007
- ↑ Donald Ostrowski in The Cambridge History of Russia, Cambridge University Press, 2006, p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-81227-5.
- ↑ See e.g. Eastern Orthodoxy பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2007. Encyclopædia Britannica.
- ↑ "The Tatar Khanate of Crimea". Archived from the original on 8 November 2017. Retrieved 12 July 2009.
- ↑ J. L. I. Fennell, Ivan the Great of Moscow (1961) p. 354
- ↑ McDaniel, Tim (1991). Autocracy, Modernization, and Revolution in Russia and Iran. Princeton University Press. p. 46. ISBN 0-691-03147-9.
- ↑ O'Connor, Kevin (2003). The History of the Baltic States. Greenwood Press. p. 23. ISBN 0-313-32355-0. Archived from the original on 30 October 2022.
- ↑ "Ivan the Terrible". Minnesota State University Mankato. Archived from the original on 18 July 2007. Retrieved 23 July 2007.
- ↑ Serge Aleksandr Zenkovsky (October 1957). "The Russian Church Schism: Its Background and Repercussions". Russian Review (Blackwell Publishing) 16 (4): 37–58. doi:10.2307/125748. https://archive.org/details/sim_russian-review_1957-10_16_4/page/36.
- ↑ Skrynnikov R., "Ivan Grosny", p. 58, M., AST, 2001
- ↑ Urban, William (Fall 1983). "The Origin of the Livonian War, 1558". Lithuanian Quarterly Journal of Arts and Sciences. Archived from the original on 30 May 2002. Retrieved 16 July 2023.
- ↑ Martin 2004, ப. 395.
- ↑ Siberian Chronicles, Строгановская Сибирская Летопись. изд. Спаским, СПб, 1821
- ↑ Skrynnikov R. "Ivan Grozny", M, 2001, pp. 142–173
- ↑ Robert I. Frost The Northern Wars: 1558–1721 (Longman, 2000) pp. 26–27
- ↑ "Moscow – Historical background". The Economist: City Guide. Archived from the original on 11 October 2007.
- ↑ Skrynnikov. "Ivan Grozny", M, 2001, pp. 222–223
- ↑ Borisenkov E, Pasetski V. "The thousand-year annals of the extreme meteorological phenomena", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-244-00212-0, p. 190
- ↑ Solovyov. "History of Russia...", v.7, pp. 533–535, 543–568
- ↑ Lev Gumilev (1992), Ot Rusi k Rossii. Ocherki e'tnicheskoj istorii [From Rus' to Russia], Moscow: Ekopros.
- ↑ Michel Heller (1997), Histoire de la Russie et de son empire [A history of Russia and its empire], Paris: Plon.
- ↑ George Vernadsky, "A History of Russia", Volume 5, Yale University Press, (1969). Russian translation பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mikolaj Marchocki "Historia Wojny Moskiewskiej", ch. "Slaughter in the capital", Russian translation பரணிடப்பட்டது 4 சூலை 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Sergey Solovyov. History of Russia... Vol. 8, p. 847
- ↑ Chester S L Dunning, Russia's First Civil War: The Time of Troubles and the Founding of the Romanov Dynasty, p. 434 Penn State Press, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-271-02074-1
- ↑ Troubles, Time of பரணிடப்பட்டது 18 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்." பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2006
- ↑ Pozharski, Dmitri Mikhailovich, Prince பரணிடப்பட்டது 11 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்", Columbia Encyclopedia
- ↑ For a discussion of the development of the class structure in Tsarist Russia see Skocpol, Theda. States and Social Revolutions: A Comparative Analysis of France, Russia, and China. Cambridge University Press, 1988.
- ↑ 87.0 87.1 Jarmo Kotilaine and Marshall Poe, Modernizing Muscovy: Reform and Social Change in Seventeenth-Century Russia, Routledge, 2004, p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-30751-1.
- ↑ (in உருசியம்) Moscow Uprising of 1682 பரணிடப்பட்டது 1 சூலை 2017 at the வந்தவழி இயந்திரம் in the History of Russia of Sergey Solovyov
- ↑ Brian Catchpole, A Map History of Russia (1974) pp 8–31; Martin Gilbert, Atlas of Russian history (1993) pp. 33–74.
- ↑ Brian Catchpole, A Map History of Russia (1974) p. 25.
- ↑ James Cracraft, The Revolution of Peter the Great (2003)
- ↑ Basil Dmytryshyn, "Russian expansion to the Pacific, 1580–1700: a historiographical review." Slavic Studies 25 (1980): 1–25. online பரணிடப்பட்டது 25 செப்டெம்பர் 2019 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Milov L.V. "Russian peasant and features of the Russian historical process", the research of Russian economic history of 15th–18th centuries". Archived from the original on 18 April 2009. Retrieved 6 August 2007.
- ↑ Lord Kinross, The Ottoman Centuries: The Rise and Fall of the Turkish Empire (1979) p. 353.
- ↑ Hughes, Lindsey (2000). Russia in the Age of Peter the Great. Yale University Press. ISBN 9780300082661.
- ↑ Stephen J. Lee (2013). Peter the Great. Routledge. p. 31. ISBN 9781136453250. Archived from the original on 22 January 2023. Retrieved 25 October 2015.
- ↑ Alexander, John T. (1988). Catherine the Great: Life and Legend. Oxford University Press. ISBN 9780199878857.
- ↑ de Madariaga, Isabel (2002). Catherine the Great: A Short History. Yale University Press. ISBN 9780300097221.
- ↑ Nancy Whitelaw, Catherine the Great and the Enlightenment in Russia (Morgan Reynolds, 2005) pp 33–34.online
- ↑ de Madariaga, Isabel (2002). Russia in the Age of Catherine the Great. Phoenix. ISBN 9781842125113.
- ↑ Campbell (28 January 2015). Western Civilization. Routledge. p. 86. ISBN 9781317452300. Archived from the original on 22 January 2023. Retrieved 25 October 2015.
- ↑ "History". Parallel 60. Archived from the original on 21 January 2010. Retrieved 23 July 2007.
- ↑ К. М. Корольков «Столетний юбилей города Екатеринослава (1787 — 9-го мая — 1887)» (Екатеринослав, 1887).
- ↑ Місто і люди. Єлисаветград — Кіровоград, 1754—2004. Ілюстрована енциклопедія., Кіровоград:, «Імекс-ЛТД», 2004, 303 стор.
- ↑ Бобух А.І. Херсон: Путівник. — Херсон : Степ, 1994. — 60 с.
- ↑ Балабанова Д. А., Веприцкая В. Н. Становление адвокатуры в Южноукраинских губерниях Российской империи в первой половине XIX века (на примере Одессы) // Раціональний та почуттєво-емоційний аспекти правосвідомості та поведінки суб’єктів права. — 2012.
- ↑ According to Brockhaus and Efron Encyclopedic Dictionary: 1891 Grodno province – Catholics 384,696, total population 1,509,728 [1] பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்; Curland province – Catholics 68,722, total population 555,003 [2] பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்; Volyhnia Province – Catholics 193,142, total population 2,059,870 [3]
- ↑ Thomas McLean, The Other East and Nineteenth-Century British Literature: Imagining Poland and the Russian Empire (Palgrave Macmillan, 2012) pp. 14-40.