உள்ளடக்கத்துக்குச் செல்

தாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாடி
Beard
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்barba
TA98A16.0.00.018
TA27058
FMA54240
உடற்கூற்றியல்

தாடி (beard) என்பது மனிதர்களின் முகத்தில் கன்னம், நாடி, கழுத்து ஆகிய பகுதிகளில் வளரக்கூடிய முடி ஆகும். ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளப்படுகிறது. மீசையைப்போன்றே தாடியும் ஆண்களுக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

சவரம் செய்தபின் ஆண்களின் முகம் வசீகரமாக தோற்றமளிப்பதோடு உற்சாகமாய் இருப்பதாக உணர்வதால் சவரம் செய்யும் வழக்கம் தோன்றியது.

சில சடங்கு, சம்பிரதாயங்களை முன்னிட்டு ஆண்கள் சவரம் செய்யக்கூடாது என சில சமயங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. ரஷ்யாவின் முதலாம் பீட்டர் அருட்பணியாளர்கள் நீண்ட தாடி வைத்துக் கொள்வதைக் கண்டித்தார் என உருசிய வரலாறு கூறுகிறது.

காவலர்கள் தாடி வைத்துக்கொள்ள பல நாடுகளில் அனுமதி மறுக்கப்படுகிறது[1] [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "தாடி வளர்க்க, மொட்டை அடிக்க தடை". Archived from the original on 2012-11-28. பார்க்கப்பட்ட நாள் 2012-12-05.
  2. "முதன் முறையாக பக்கிங்காம் அரண்மனை ஊழியருக்கு தலைப்பாகையுடன் பணியாற்ற அனுமதி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடி&oldid=3557597" இலிருந்து மீள்விக்கப்பட்டது