மீசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Hitov.jpeg

மீசை என்பது முகத்தில் மேலுதட்டுக்கு மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகளில் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

மீசை முளைக்க காரணம்[தொகு]

டெஸ்ட்டோஸ்டீரான் பருவ வயதில் சுரக்கும்போது மீசை வளரும் ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோனின் முதல் வேலை அக்குள், மர்ம உறுப்புகளில் முடிவளர வைப்பதாகும். அதன் பிறகு மீசை மற்றும் உடல் பகுதிகளில் ஆங்காங்கே முடியை வளரவைக்கும். இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்குரிய மிடுக்கை கொடுக்கும். தசைகள் இருக்கமாகி, இளமைப்பொலிவு கூடும். குரலும் மாறிவிடும்.

பழமொழி[தொகு]

குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை
போட்டி, சவாலில் நான் தோத்துட்டா ஒரு பக்க மீசைய எடுத்துக்குரேன் என்று கூறி தோல்வி அடைந்தவர்கள் மீசையை இழந்தவர்களும் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசை&oldid=2561995" இருந்து மீள்விக்கப்பட்டது