திட்டமிட்ட பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திட்டமிட்ட பொருளாதாரம் என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு பொருளியல் முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், வருமானப் பகிர்வு போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது பொதுவுடைமை நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர்.

கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் ஒரு முக்கியமான, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அண்மைக்காலப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன் சீனாவிலும் இப் பொருளாதார முறையே நிலவியது. 1980 களிலும், 1990 களிலும் பல திட்டமிட்ட பொருளாதார நாடுகள் இம் முறையிலிருந்து விலகத் தொடங்கின. கியூபா, வடகொரியா போன்ற நாடுகள் இன்றும் இம் முறையையே கடைப்பிடித்து வருகின்றன.