குண்டூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டூர் கிழக்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
மொத்த வாக்காளர்கள்2,29,830
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
முகமது முசுதபா சேக்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2009 (முதல்)
குண்டூர்-1 சட்டமன்றத் தொகுதி (1962–2004)

குண்டூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Guntur East Assembly constituency) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] தடிகொண்டா, மங்களகிரி பொன்னுரு, தெனாலி மற்றும் குண்டூர் மேற்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] முன்னர் குண்டூர்-1 சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்ட இது, 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையில் சில சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகி , நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையின்படி குண்டூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) எனப் பெயரிடப்பட்டது.[3]:15 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது முசுதபா சேக் இத்தொகுதியில் வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இந்தத் தொகுதியில் மொத்தம் 229,830 வாக்காளர்கள் உள்ளனர்.[5]

மண்டலங்கள்[தொகு]

இத்தொகுதியின் கீழ் குண்டூர் மண்டலம் (பகுதி), குண்டூர் (மாநகராட்சி) (பகுதி) மற்றும் குண்டூர் (மாநகராட்சி) - பகுதி எண்.7 முதல் 23 வரை அடங்கியுள்ளன.[6]

சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

குண்டூர் கிழக்கு (2009- தற்போது வரை)[தொகு]

ஆண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்
2019 ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முகமது முசுதபா சேக்
2014 ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2009 இந்திய தேசிய காங்கிரசு சேக் மசுதான் வலி

குண்டூர்-1 (1955-2004)[தொகு]

ஆண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்
2004 இந்திய தேசிய காங்கிரசு ஷேக் சுபானி
1999 தெலுங்கு தேசம் ஜியாவுதீன் எஸ்.எம்
1994 தெலுங்கு தேசம்
1989 இந்திய தேசிய காங்கிரசு முகமது ஜானி
1985 இந்திய தேசிய காங்கிரசு
1983 தெலுங்கு தேசம் உமரு காணு படனு
1978 இந்திய தேசிய காங்கிரசு ஈஸ்வர ராவ் லிங்கம்செட்டி
1972 இந்திய தேசிய காங்கிரசு விஜய் ராமானுஜம்
1967 இந்திய தேசிய காங்கிரசு எஸ் அங்கம்மா
1962 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கனபர்த்தி நாகையா
1955 இந்திய தேசிய காங்கிரசு தெள்ளகுல ஜாலய்யா

குண்டூர் (1952 மதராசு மாநிலம்)[தொகு]

ஆண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்
1952 கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி நாடிம்பள்ளி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "DELIMITATION COMMISSION OF INDIA" (pdf). Election Commission of India. p. 15. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
  4. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  5. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  6. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (pdf). Election Commission of India. p. 22. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.