உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களகிரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்களகிரி
இந்தியத் தேர்தல் தொகுதி
மங்களகிரி நகரம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
மக்களவைத் தொகுதிகுண்டூர்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,68,429
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அல்லா ராமகிருஷ்ண ரெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

மங்களகிரி சட்டமன்றத் தொகுதி (Mangalagiri Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] எல்லை நிர்ணய ஆணைகளின் (2008) படி, இந்த தொகுதி தடேபள்ளே, மங்களகிரி மற்றும் துக்கிரலா ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. தடிகொண்டா, பொன்னூர், தெனாலி, பிரதிபாடு, குண்டூர் மேற்கு மற்றும் குண்டூர் கிழக்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அல்லா ராமகிருஷ்ண ரெட்டி இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 268,429 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்

[தொகு]

மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் தடேபள்ளே, மங்களகிரி மற்றும் துக்கிராலா மண்டலங்கள் உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி இரண்டாமிடம் கட்சி
2019–பதவியில் அல்லா ராமகிருஷ்ண ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி நாரா லோகேஷ் தெலுங்கு தேசம்
2014–2019[5] அல்லா ராமகிருஷ்ண ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி கஞ்சி சிரஞ்சீவி தெலுங்கு தேசம்
2009–2014 கந்துரு கமலா இந்திய தேசிய காங்கிரசு தம்மிசெட்டி ஜானகி தேவி பிரசா ராச்யம் கட்சி
2004–2009 முருகுடு அனுமந்தராவ் இந்திய தேசிய காங்கிரசு தம்மிசெட்டி ஜானகி தேவி பாரதிய ஜனதா கட்சி
1999–2004 முருகுடு அனுமந்தராவ் இந்திய தேசிய காங்கிரசு நிம்மதி ராமமோகனராவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1994–1999 நிம்மதி இராமமோகனராவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி தமர்லா உமாமகேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1989–1994 கோலி வீராங்கனையுலு இந்திய தேசிய காங்கிரசு சிம்ஹாத்ரி சிவா ரெட்டி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1985–1989 எம். எஸ் .எஸ். கோட்டேஸ்வர ராவ் தெலுங்கு தேசம் கட்சி ஸ்ரீமதி ஜமுனா இந்திய தேசிய காங்கிரசு
1983–1985 எம். எஸ்.எ ஸ். கோட்டேஸ்வர ராவ் தெலுங்கு தேசம் கட்சி ராயபதி ஸ்ரீனிவாசு இந்திய தேசிய காங்கிரசு
1978–1983 காட்டே வெங்கட ரத்தையா ஜனதா கட்சி துலாபந்துல நாகேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1972–1978 வெமுலபள்ளி ஸ்ரீகிருஷ்ணா இந்தியப் பொதுவுடமைக் கட்சி குஜ்ஜுலா கங்காதர ரெட்டி சுயேச்சை
1967–1972 துலாபந்துல நாகேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு வெமுலபள்ளி ஸ்ரீகிருஷ்ணா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1962–1967 வெமுலபள்ளி ஸ்ரீகிருஷ்ணா இந்தியப் பொதுவுடமைக் கட்சி தம்மா ரங்கா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1955–1961 மேகா கோட்டிரெட்டி இந்திய தேசிய காங்கிரசு நூத்தகி வெங்கடரங்கராவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1952–1955 தர்சி லட்சுமியா இந்தியப் பொதுவுடமைக் கட்சி இம்கிலபதி கோவிந்த ராவ் சுயேச்சை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  5. "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 14. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.