நெல்லூர் நகரச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்லூர் நகரச் சட்டமன்றத் தொகுதி (Nellore City Assembly Constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். இந்தத் தொகுதி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று.

2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த அனில் குமார் யாதவ் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கண்ணோட்டம்[தொகு]

இது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துகூர், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவாலி, ஆத்மகூர், கோவூர், நெல்லூர் கிராமப்புரம் மற்றும் உதயகிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் நெல்லூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2019 அனில் குமார் யாதவ் ஒய்.எசு.ஆர்.கா.
2014
2009 முங்கமுரு ஸ்ரீதர கிருஷ்ணா ரெட்டி பிரசா ராச்யம் கட்சி
2004 ஆனம் விவேகானந்த ரெட்டி இதேகா
1999
1994 தாளபாக ரமேஷ்ரெட்டி தெலுங்கு தேசம்
1989 ஜக்கா கோதண்டராமி ரெட்டி சுயேச்சை
1985 குணம் வெங்கட சுப்பா ரெட்டி இதேகா
1983 ஆனம் ராமநாராயண ரெட்டி தெலுங்கு தேசம்
1978 குணம் வெங்கட சுப்பா ரெட்டி இதேகா
1972 ஆனம் வெங்கட ரெட்டி இதேகா
1967 எம்.ஆர்.அன்னதாதா பாரதீய ஜனசங்கம்
1962 கங்கை சீனா கொண்டையா இதேகா
1955 ஆனம் செஞ்சு சுப்பா ரெட்டி இதேகா
1952 சுவர்ண வேமையா (உறுப்பினர் 2) சுயேச்சை
கந்தவல்லி கிருஷ்ணராவ் (உறுப்பினர் 1)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.