அனபர்த்தி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனபர்த்தி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
மொத்த வாக்காளர்கள்213,472
இட ஒதுக்கீடுGeneral
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்மருத்துவர் சதி சூர்யநாராயண ரெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

அனபர்த்தி சட்டமன்றத் தொகுதி (Anaparthy Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்ற தொகுதியாகும்.[1] இது இராஜநகரம், ராஜமன்றி நகரம், ராஜமன்றி கிராமம், கோவூர், நிடதவோலு மற்றும் கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதிகளுடன் ராஜமன்றி மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். [2] மருத்துவர் சதி சூர்யநாராயண ரெட்டி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[3] 2019ஆம் ஆண்டில், இத்தொகுதியில் மொத்தம் 213,472 வாக்காளர்கள் இருந்தனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் நான்கு மண்டலங்கள்:[2]

மண்டல்
பெடபுடி
பிக்கவோலு
ரங்கம்பேட்டா
அனபர்த்தி

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 நல்லமில்லி சேஷாரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 நல்லமில்லி ராமகிருஷ்ண ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2019 சதி சூர்யநாராயண ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 18, 30. 3 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Assembly Election 2019". Election Commission of India. 24 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.