கைகளூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைகளூர்
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்ஏலூரு
மொத்த வாக்காளர்கள்195,782
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்துலாம் நாகேசுவர ராவ்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

கைகளூர் சட்டமன்றத் தொகுதி (Kaikalur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் எலுரு மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] இது ஏலூரு மக்களவைத் தொகுதியிலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். பிற சட்டமன்றத் தொகுதிகள் உங்குடூர், தெந்துலூர், எலூர், போலவரம், சிந்தலபுடி மற்றும் நுசுவிட் ஆகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துலாம் நாகேசுவர ராவ் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] மார்ச்சு 25, 2019ஆம் நாளின்படி இத்தொகுதியில் தொகுதியில் மொத்தம் 195,782 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

இச்சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் நான்கு மண்டலங்கள்:[2]

மண்டல்
மண்டவல்லி
கைகளூர்
காளிதிண்டி
முடினேபள்ளே

கைகளூர் சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 ஆடுஸ்ன்மொல்லி வெங்கடசுப்ரமணியம் இந்திய தேசிய காங்கிரசு
2004 யெர்னேனி ராஜா ராமச்சந்தர்
2009 ஜெயமங்கல வெங்கட ரமண தெலுங்கு தேசம் கட்சி
2014 காமினேனி ஸ்ரீனிவாசு பாரதிய ஜனதா கட்சி[5]
2019 துலாம் நாகேசுவர ராவ் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]