கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்பது இந்தியாவின் ஒரு அரசியல் கட்சியாகும். இது 1951 இல் நிறுவப்பட்டது, பின்வந்த ஆண்டில் இக் கட்சியும், சோசலிச கட்சியும் இணைந்து பிரஜா சோசலிச கட்சியாக உருவானது. 'விவசாயத் தோழிலாளர் மக்கள் கட்சி' என்றும் அழைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

இக்ட்சியானது 1951 சூனில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் அதிருப்தியுற்றவரான ஆச்சார்ய கிருபளானியின் தலைமையில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய இரண்டு தலைவர்கள் : பிரபுல்லா சந்திர கோஷ் மற்றும் தங்குதூரி பிரகாசம் ஆகியோர். இவர்கள் முறையே மேற்கு வங்கத்திலும், சென்னை மாகாணத்திலும் முதலமைச்சராக இருந்தவர்களாவர். [1] 1951 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது. இத்தேர்தலில் 16 மாநிலங்களில் போட்டியிட்டு ஒன்பது மக்களவை இடங்களை வென்றது, இதில் மைசூர் மாநிலத்தில் ஆறு தொகுதிகளும், [2] மதறாஸ் மாநிலத்தில், தில்லி மற்றும் விந்திய பிரதேசம் ஆகிய மாகாணங்களில் தல ஒரு தொகுதிகள் அடங்கும். [3] [4] இக்கட்சி மொத்தம் 5.8% வாக்குகளைப் பெற்றது. என்றாலும் மாநில சட்டமன்றங்களில் 77 இடங்களை மட்டுமே வென்றது. 1952 செப்டம்பரில் சோசலிச கட்சியுடன் இணைந்தது. [1] [5]

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 சந்திரா, பிபான் மற்றும் பலர் (2000). இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947-2000, புது தில்லி: பெங்குயின் புத்தகங்கள்,
  2. http://parliamentofindia.nic.in/ls/lok01/state/01lsmd.htm
  3. "Archived copy". மூல முகவரியிலிருந்து 18 December 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-18.
  4. http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table01.pdf
  5. http://articles.timesofindia.indiatimes.com/2004-04-03/india/28332682_1_janata-party-political-parties-parties-today