காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:27, 15 திசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2486968 Ran wei meng (talk) உடையது. (மின்))
காளி
அதிபதிகாலம், உருவாக்கம், அழிவு மற்றும் சக்தி
தேவநாகரிकाली
வகைமஹாவித்யா, தேவி, பார்வதி
இடம்மயானம்
மந்திரம்ஓம் க்ரீம் காள்யை நமஹ ,
ஓம் கபாலின்யை நமஹ,
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வாரி
காளிகே ஸ்வாஹா
ஆயுதம்கொடுவாள், சூலம்
துணைசிவன்
காளி இயந்திரம்

காளி என்பவர் இந்து சமயத்தின் சாக்த பிரிவினர் வணங்கும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் சக்தியின் தச மகா வித்யாக்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]

காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள 'காலா' என்ற பெயரின் பெண் சொல் ஆகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.[2] அவர் தெய்வீக பாதுகாப்பாளராகவும், மோட்சம் அல்லது விடுதலையை வழங்குபவராகவும் கருதப்படுகிறார்.


தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. Kali
  2. Kali: The Dark Mother
  3. KALIGHAT KALI TEMPLE


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி&oldid=2613897" இலிருந்து மீள்விக்கப்பட்டது