எரவிகுளம் தேசிய பூங்கா
Appearance
எரவிகுளம் தேசிய பூங்கா மலையாளம்: ഇരവികുളം ദേശീയോദ്യാനം | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | இடுக்கி, கேரளம், இந்தியா மற்றும் பூயம்குட்டி காடு, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியா |
அருகாமை நகரம் | மூணார், பழனி, தேனி, கோதமங்கலம், அடிமாலி |
ஆள்கூறுகள் | 10°12′00″N 77°04′59″E / 10.2°N 77.083°E |
பரப்பளவு | 97 km2 (37 sq mi) |
வருகையாளர்கள் | 1,48,440 (in 2001) |
நிருவாக அமைப்பு | வன மற்றும் வனவிலங்கு துறை, கேரள அரசு |
www |
எரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது .
வரையாடுகள்
[தொகு]இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றது.
கீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில்
[தொகு]நீலகிரி வரையாடு தவிர கரும்வெருகு, ரடி வகை கீரி (ruddy mongoose), காட்டு நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில் (dusky-striped sqirrel) போன்ற அரிய வகை உயிரினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன.[1]
புதிய வகைத் தவளை இனம்
[தொகு]Raorchestes resplendens என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகைத் தவளை இனம் இப்பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற விபரம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலின் அண்மைய இதழில் வெளிவந்துள்ளது.