ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பெட் தேசியப் பூங்கா
Jim Corbett National Park
அமைவிடம்நைனித்தால் மற்றும் பவ்ரி கட்வால், இந்தியா
அருகாமை நகரம்நைனித்தால், இந்தியா
பரப்பளவு521 km²
நிறுவப்பட்டது1936
வருகையாளர்கள்20,000 (in 1983)

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும். இது 1936 இல் நிறுவப்பட்டது. உத்தராகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 சதுர கி.மீ பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. முதலில் எய்லி தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டுப் பின்னர் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், இயற்கைப் பாதுகாவலரும், நூலாசிரியருமான ஜிம் கார்பெட்டின் பெயர் சூட்டப்பெற்றது.

இது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் இப்பூங்காவின் விலங்கினங்களில் முக்கியமானவை. யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.

இங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும், பாலூட்டிகளில் 50 சிற்றினங்களும், பறவைகளில் 580 சிற்றினங்களும், ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் காணக்கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15வரை பூங்கா திறந்திருக்கும்.

ராம்கங்கா ஆறு
காட்டு யானைக் கூட்டமொன்று கார்பெட் பூங்காவில்.

வெளி இணைப்புகள்[தொகு]