தடோபா அந்தாரி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடோபா தேசியப் பூங்கா
தடோபா தேசியப் பூங்காவிலுள்ள மான்களுள் ஒன்று
Map showing the location of தடோபா தேசியப் பூங்கா
Map showing the location of தடோபா தேசியப் பூங்கா
அமைவிடம்மகாராட்டிரம், இந்தியா
அருகாமை நகரம்சந்த்ரபூர்40 கிலோமீட்டர்கள் (25 mi) E
பரப்பளவு625.4 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது1955
நிருவாக அமைப்புமஹாராஸ்டிர வனத்துறை அமைச்சு
வலைத்தளம்இணையதளம்

தடோபா அந்தாரி தேசியப் பூங்கா (Tadoba Andhari Tiger Reserve) இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மஹாராஸ்டிராவின் பழமையான மற்றும் பெரிய தேசியப் பூங்காவாகும். இந்தத் தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.[1] தடோபா என்பது இங்குள்ள அடர்ந்த வனங்களில் வாழும் பழங்குடியினர் வணங்கும் கடவுளின் பெயராகும். மேலும் அந்தாரி என்பது இந்தத் தேசியப் பூங்காவில் ஓடும் ஆற்றின் பெயர் ஆகும்.[2]

வரலாறு[தொகு]

1935 ஆம் ஆண்டு இந்தக் காட்டுப் பகுதியில் வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 1955 ஆம் ஆண்டு 116.54 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அருகிலுள்ள காட்டுப் பகுதிகளில் அந்தாரி வனவிலங்குகள் காப்பகம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இவை அனைத்தையும் ஒன்றிணைத்து இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

புகைப்படம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tadoba-andhari Tiger Reserve", Reserve Guide - Project Tiger Reserves In India, National Tiger Conservation Authority, பார்க்கப்பட்ட நாள் 2012-02-29
  2. Tadoba-Andhari Tiger Reserve-History, Sanctuary Asia, archived from the original on 2019-08-14, பார்க்கப்பட்ட நாள் 2012-02-29