டாச்சிகம் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாச்சிகம் தேசியப் பூங்கா (Dachigam National Park) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற டால் ஏரியின் நீர்தாங்கு பகுதியின் அரைப்பங்கைத் தன்னுள் அடக்கியுள்ள இப்பூங்கா ஸ்ரீநகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இமயமலைப் பகுதிக்கேயுரிய பல தனித்துவமான தாவர, விலங்கின வகைகளை இங்கே காணலாம். அழியும் நிலையிலிருக்கும் விலங்கினமான சிவப்பு மான் இங்கே வாழ்கின்றது.