முர்லன் தேசியப் பூங்கா
முர்லன் தேசியப் பூங்கா Murlen National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மியான்மர் எல்லைக்கு அருகில் சம்பாய் மாவட்டத்தில் உள்ள பூங்காவின் அமைவிடம் |
பரப்பளவு | 200 km2 (77 sq mi) |
நிறுவப்பட்டது | 1991 |
முர்லன் தேசியப் பூங்கா இந்திய மாநிலமான மிசோரத்தின் சம்பாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த பூங்கா கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது அய்சாலில் இருந்து 245 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்காவின் தெற்கில் லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[2] இங்கு 25 வகையான பாலூட்டி இனங்களும், 150 வகையான பறவைகளும், 35 வகையான மருந்துச் செடிகளும், மூங்கில், ஆர்க்கிட் செடிகளும் உள்ளன.[3]
இந்த இடம் 1991ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[4]
செடிகள்[தொகு]
காட்டிற்குள் சூரிய ஒளி புக முடியாத காரணத்தினால், இந்த பகுதிக்கு திரும்பி வர முடியாத இடம் என்ற பெயர் உண்டு.[5] இங்குகருவாலி மரம், சண்பகம், ஆர்க்கிட் உள்ளிட்ட செடி வகைகள் உள்ளன.
விலங்குகள்[தொகு]
இங்கு புலி, சிறுத்தை, கடமான், மான், அணில், கருங்கரடி, ஹுலக் கிப்பான், செம்முகக் குரங்கு, மலை மைனா உள்ளிட்ட பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Das, Chhanda (2007). A Treatise On Wildlife Conservation In India. Biswajit Das. http://books.google.co.in/books?id=KlwjSnkh1EAC&pg=PA170&lpg=PA170&dq=Murlen+national+Park&source=bl&ots=J8Kj6p3W7P&sig=oqbje_fCK8iE3UWZ_dHCFKt25zs&hl=en&sa=X&ei=ZLU0UIrvKITOrQfYqIH4DQ&sqi=2&ved=0CD8Q6AEwBA#v=onepage&q=Murlen%20national%20Park&f=false.
- ↑ "Lengteng Wildlife Sanctuary". BirdLife International. http://www.birdlife.org/datazone/sitefactsheet.php?id=18320. பார்த்த நாள்: 11 April 2014.
- ↑ "Lui dunga ngaw humhalh buaipui mek". Vanglaini இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413155246/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=13577:lui-dunga-ngaw-humhalh-buaipui-mek&catid=99:tualchhung&Itemid=2. பார்த்த நாள்: 22 August 2012.
- ↑ "List of National Parks in India". Centre for Ecological Sciences Indian Institute of Science. http://ces.iisc.ernet.in/envis/sdev/parks.htm. பார்த்த நாள்: 22 August 2012.
- ↑ "Murlen National Park and the Losing Area of Seven Fellow-Men". India-north-east.com. http://www.india-north-east.com/2010/09/murlen-national-park-and-losing-area-of.html. பார்த்த நாள்: 22 August 2012.
- ↑ Bhatt, Bhargava (2006). Land and People of Indian States and Union Territories: In 36 ..., Volume 19. Kalpaz Publication. http://books.google.co.in/books?id=EJEZRa_4R8wC&pg=PA153&lpg=PA153&dq=Murlen+national+Park&source=bl&ots=-lf3BsaByb&sig=o0qOdtGHx4XHwYBVAXXLnIFX7Kg&hl=en&sa=X&ei=ZLU0UIrvKITOrQfYqIH4DQ&sqi=2&ved=0CC8Q6AEwAA#v=onepage&q=Murlen%20national%20Park&f=false.