நம்தாபா தேசிய பூங்கா

ஆள்கூறுகள்: 27°29′00″N 96°23′00″E / 27.48333°N 96.38333°E / 27.48333; 96.38333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்தாபா தேசியப் பூங்கா
Namdapha National Park
நம்தாபா தேசியப் பூங்கா விதானம்
Map showing the location of நம்தாபா தேசியப் பூங்கா Namdapha National Park
Map showing the location of நம்தாபா தேசியப் பூங்கா Namdapha National Park
Map showing the location of நம்தாபா தேசியப் பூங்கா Namdapha National Park
Map showing the location of நம்தாபா தேசியப் பூங்கா Namdapha National Park
அமைவிடம்சங்லங் மாவட்டம், அருணாசலப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்மியா, சாங்லாங்
ஆள்கூறுகள்27°29′00″N 96°23′00″E / 27.48333°N 96.38333°E / 27.48333; 96.38333
பரப்பளவு1,985.23 km2 (766.50 sq mi)
நிறுவப்பட்டது1974
நிருவாக அமைப்புஅருணாச்சலப்பிரதேச அரசு, இந்திய அரசு
arunachalforests.gov.in/Namdapha%20Tiger%20Reserve.html

நம்தாபா தேசிய பூங்கா (Namdapha National Park) என்பது சுமார் 1,985 km2 (766 sq mi) பகுதியில் வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்த பூங்கா 1983-ல் நிறுவப்பட்டது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மலர்கள் மற்றும் சுமார் 1,400 விலங்கினங்கள் உள்ளன. இது இமயமலையின் கிழக்குப் பகுதியின் பல்லுயிர் மையமாக உள்ளது.[1] இத்தேசிய பூங்கா 27°N அட்ச ரேகையில் உலகின் வடக்கே தாழ்நில பசுமையான மழைக்காடுகளை கொண்டுள்ளது.[2] இது மிசோரம்-மணிப்பூர்-காச்சின் மழைக்காடுகளின் சுற்றுச்சூழலின் வடமேற்கு பகுதிகளை உள்ளடக்கிய விரிவான திப்டெரோகார்ப் காடுகளையும் கொண்டுள்ளது.

இது இந்தியாவின் நான்காவது பெரிய தேசிய பூங்காவாகும்.[3]

வரலாறு[தொகு]

நம்தாபா முதலில் 1972-ல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1983-ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டில் புலிகள் திட்டத்தின் கீழ் புலிகள் காப்பகமாக மாறியது. இதன் பெயர் இரண்டு சிங்போ வார்த்தைகளின் கலவையாகும். அதாவது "நாம்" அதாவது நீர், மற்றும் "டபா" அதாவது தோற்றம் என்பதாகும்.

புவியியல் மற்றும் தாவரங்கள்[தொகு]

நம்தாபா தேசிய பூங்கா, வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில், மியான்மரின் பன்னாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இது 1,985 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1,808 சதுர கி. மீ. மையப் பகுதியாகும். 177 சதுர கி. மீ. இதனைச் சுற்றியுள்ள இடையக மண்டலம் ஆகும். இது 200 மற்றும் 4,571 மீட்டர் உயரத்தில் மிச்மி மலைகள் மற்றும் பட்காய் மலைத்தொடரின் டாபா பம் வரம்பிற்கு இடையில் அமைந்துள்ளது. இது இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள சௌகான் கணவாயில் உருவாகும் நோவா டிஹிங் ஆறு கிழக்கிலிருந்து மேற்காகக் கடக்கிறது. நிலப்பரப்பு வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளிலிருந்து மிதமான அகன்ற இலைகள் மற்றும் கலப்புக் காடுகளுக்கு அதிகரிக்கும் உயரத்துடன் மாறுகிறது. இரண்டாம் நிலை காடுகள் 345.47 கி.மீ. உயரத்திலும் திசம்பர் மற்றும் மார்ச் இடையே பருவகால பனிக் காடுகள் 2,700க்கு மேல் காணப்படுகிறது.[1][4]

தாவரங்கள்[தொகு]

சப்ரியா கிமயமலையான மலர்

சப்ரியா கிமாலனா மற்றும் பலனோபோரா ஆகியவை ரபிளீசியாவுடன் தொடர்புடைய வேர் ஒட்டுண்ணிகள் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[5] நம்தாபாவின் மலர் சார்ந்த பன்முகத்தன்மையுடைய தாவரங்கள் பின்வருமாறு:

நம்தாபா தேசிய பூங்காவின் தாவரங்கள் எண்ணிக்கை[6]
வகை (மொத்தம்) இருவித்திலை ஒருவித்திலை பூஞ்சைப்பாசி பாசிகள் பன்னத்தாவரம் பூவாத் தாவரங்கள்
குடும்பங்கள் (215) 119 (55.35) 19 (8.84) 17 (7.90) 21 (9.77) 36 (16.74) 3 (1.4)
பேரினங்கள் (639) 403 (63) 111 (17.37) 34 (5.32) 33 (5.16) 54 (8.45) 4 (0.63)
சிற்றினங்கள் (1119) 674 (60.25) 196 (17.5) 73 (6.53) 59 (5.27) 112 (10) 5 (0.66)

அடைப்புக்குறிக்குள் உள்ள மதிப்புகள் மொத்த எண்ணிக்கையின் சதவீதமாகும்.

விலங்கினங்கள்[தொகு]

பாலூட்டிகள்[தொகு]

இந்த பூங்காவில் சிவப்பு ராட்சத பறக்கும் அணில் அடிக்கடி காணப்படுகிறது

நம்தாபா பறக்கும் அணில் (Biswamoyopterus biswasi ) முதலில் பூங்காவில் சேகரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[7] இது பூங்காவில் காணப்படும் அகணிய உயிரி மற்றும் மிக அருகிய இனமாக உள்ளது. இது கடைசியாக 1981-ல் பூங்காவிற்குள் பள்ளத்தாக்கு ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.

300 முதல் 4,500 m (980 முதல் 14,760 அடி) உயரம் இருப்பதாலும் தாவர மண்டலங்கள் முதல் பசுமையான, ஈரமான இலையுதிர் முதல் மிதமான அகலமான இலைகள் மற்றும் ஊசியிலையுள்ள காடுகள் வரை ஆல்பைன் தாவரங்கள் காணப்படுவதால் பூங்காவின் பாலூட்டி சிற்றினங்களின் பெரும் பன்முகத்தன்மை உள்ளது. பூங்காவில் நான்கு பாந்தெரினே சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவை சிறுத்தை (பாந்தெரா பார்டசு), பனிச்சிறுத்தை (பா. அன்சியா), புலி (பா. டைகரிசு) மற்றும் படைச்சிறுத்தை (நியோபெலிசு நெபுலோசா).[8]

இந்த பூங்காவில் அடிக்கடி காணப்படும், சிவப்பு பாண்டா

இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் காணப்படும், மற்ற வேட்டையாடும் விலங்குகள், செந்நாய், மலாயன் சூரிய கரடி, இந்திய ஓநாய் மற்றும் ஆசியக் கறுப்புக் கரடி. சிறிய மாமிச உண்ணிகளில் சிவப்பு பாண்டா, சிவப்பு நரி, மஞ்சள் தொண்டை மார்டன், யூரேசிய நீர்நாய், காட்டு நீர்நாய், புள்ளி லிசாங் புனுகுப் பூனை, கரடிப்பூனை, ஆசிய மரநாய், சிறு இந்தியப் புனுகுப்பூனை, இந்திய பெரும் புனுகுப்பூனை, முகமூடி அணிந்த பனை புனுகுப்பூனை, மீன்பிடிப் பூனை ஆசியப் பொன்னிறப் பூனை மற்றும் இரண்டு கீரி சிற்றினங்கள். பெரிய தாவர உண்ணிகளில் இந்திய யானை, காட்டுப்பன்றி, கத்தூரி மான், இந்திய முண்ட்ஜாக், ஆக்சிசு, கடமான், இந்தியக் காட்டெருது, கோரல், மலையாடு, மற்றும் பரல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. மனிதரல்லாத விலங்குகளில் ஸ்டம்ப்-டெயில்ட் மக்காக், பெரிய தேவாங்கு, ஹூலக் கிப்பான், கேப்ட் லாங்கூர், அசாமியக் குரங்கு மற்றும் செம்முகக் குரங்கு ஆகியவை அடங்கும்.[9][10]

பறவைகள்[தொகு]

நம்தாபாவின் பறவைகள் பற்றிய முந்தைய கட்டுரைகளில்[11] 1990-ல் வெளியிடப்பட்டது. இந்த பூங்காவில் சுமார் 425 பறவை சிற்றினங்கள் உள்ளன.[12] இப்பகுதியில் ஐந்து வகையான இருவாய்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்தாபாவில் பல வகையான அரிய வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற பறவைக் குழுக்களில் சிரிப்பான்கள், கிளிகள், சிலம்பன்கள் மற்றும் வளைந்த அலகுச் சிலம்பன்கள் ஆகியவை அடங்கும். மேகத் தொண்டை சிலம்பன்கள் என்பது பட்காய் மற்றும் மிச்மி மலைகள் மற்றும் வடக்கு மியான்மரின் அருகிலுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய வகை சிலம்பன் ஆகும், இது நம்தாபாவில் காணப்படுகிறது. மற்ற அரிய, குறிப்பிட்ட வரம்பு அல்லது உலகளவில் அழிந்துவரும் இனங்களில் செங்கழுத்து இருவாய்ச்சி, பச்சை கொக்கோவா, ஊதா கோச்சோவா, வார்டு வண்டுகுத்தி, சிவப்பு மீன்கொத்தி, நீலக்காது மீன்கொத்தி, ஊதா வலைய மீன்கொத்தி, வெண்வால் கழுகு, யூரேசிய வாத்து, இமயமலை ஆந்தை, அமுர் வல்லூறு மற்றும் பல அமெரிக்கப் பாடும் பறவைகள் போன்ற பல இலை சிலம்பன்கள் இங்குக் காணப்படுகின்றன.[12] வலசை வரும் பறவைகளும் இங்குக் காணப்படுகின்றன. 1994ஆம் ஆண்டில் நம்தாபாவில் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது வெண் வயிற்றுக் கொக்கு போன்ற மிகவும் ஆபத்தான பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.[13]

பட்டாம்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும்[தொகு]

இப்பகுதியில் லெபிடோப்டெரா சிற்றினங்கள் அதிகம் உள்ளன. பட்டாம்பூச்சிகள் மற்றும் விட்டில்பூச்சிகள் இங்குப் பலவகையான பூச்சிகளுடன் சம அளவில் காணப்படுகின்றன. அக்டோபர் 2014-ல் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் ஏற்பாடு செய்த தேசிய முகாமின் போது எடுக்கப்பட்ட அவதானிப்புகளின்படி, பல அரிய வகை பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. கோஹ்-இ-நூர், நாகா ட்ரீப்ரவுன், ரெட் கலிஃப், க்ரூஸர், மந்திரவாதி, பஞ்சுபோன்ற டைட், கிழக்கு இமயமலை ஊதா பேரரசர் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Deb, P. & Sundriyal, R. C. (2007). "Tree species gap phase performance in the buffer zone area of Namdapha National Park, Eastern Himalaya, India". Tropical Ecology 48 (2): 209–225. http://www.tropecol.com/pdf/open/PDF_48_2/08%20Panna.pdf. 
  2. Proctor, J., Haridasan, K. & Smith, G.W. (1998). "How Far North does Lowland Evergreen Tropical Rain Forest Go?". Global Ecology and Biogeography Letters 7 7 (2): 141–146. doi:10.2307/2997817. 
  3. Ministry of Environment & Forests (2011). "List of national parks in India". ENVIS Centre on Wildlife & Protected Areas.
  4. Lodhi, M.S.; Samal, P.K.; Chaudhry, S.; Palni, L.M.S.; Dhyani, P.P. (2014). "Land Cover Mapping for Namdapha National Park (Arunachal Pradesh), India Using Harmonized Land Cover Legends". Journal of the Indian Society of Remote Sensing 42 (2): 461–467. doi:10.1007/s12524-013-0326-8. 
  5. Arunachalam, A.; Sarmah, R.; Adhikari, D.; Majumder, M.; Khan, M.L. (2004). "Anthropogenic threats and biodiversity conservation in Namdapha nature reserve in the Indian Eastern Himalayas" (PDF). Current Science 87 (4): 447. http://www.ias.ac.in/currsci/aug252004/447.pdf. 
  6. Chauhan AS, Singh KP, Singh DK. (1996) A contribution to the Flora of Namdapha Arunachal Pradesh. Kolkata: Botanical Survey of India 422p
  7. Saha, S. S. (1981). "A New Genus and a New Species of Flying Squirrel (Mammalia: Rodentia: Sciuridae) from Northeastern India". Zoological Survey of India 4 (3): 331−336. 
  8. Rawal, R. S.; Dhar, U. (2001). "Protected area network in Indian Himalayan region: Need for recognizing values of low profile protected areas". Current Science 81 (2): 175–184. 
  9. Choudhury, A.U. (1995). "The primates of Namdapha National Park". IPPL News 22 (2): 23–24. 
  10. Chetry, D., Medhi, R., Biswas, J., Das, D. and Bhattacharjee, P.C. (2003). "Nonhuman Primates in the Namdapha National Park, Arunachal Pradesh, India". International Journal of Primatology 24 (2): 383–388. doi:10.1023/A:1023057401967. 
  11. Choudhury, A.U. (1990). Bird observations from Namdapha National Park and adjacent areas. Arunachal Forest News 8 (1&2): 38-43. Itanagar.
  12. 12.0 12.1 Datta, A., Naniwadekar, R. & Anand, M.O. 2008. Hornbills, hoolocks and hog badgers: Long‐term monitoring of threatened wildlife with local communities in Arunachal Pradesh, north‐east India. Final report to the Rufford Small Grants Program (UK). Nature Conservation Foundation, Mysore, India. 80 pp. PDF[தொடர்பிழந்த இணைப்பு] [permanent dead link]
  13. Choudhury, A.U. (1996). Winter waterfowl count in Namdapha National Park. OBC Bulletin 23:29-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்தாபா_தேசிய_பூங்கா&oldid=3752574" இலிருந்து மீள்விக்கப்பட்டது