ரபிளீசியா ஆர்னொல்டா மலர்
Jump to navigation
Jump to search
ரபிளீசியா | |
---|---|
![]() | |
Rafflesia arnoldii flower and bud | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Rafflesiaceae |
பேரினம்: | Rafflesia R.Br. |
இனம் (உயிரியல்) | |
See text. |
ரபிளீசியா ஆர்னொல்டா மலர் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ளது. ரபிளீசியா ஆர்னொல்டா மலர் ஒன்றின் எடை 7 கிலோ, குறுக்களவு மூன்று அடி. மகரந்தத் தண்டுகளையும் தேன் பையையும் தாங்கும் மையப் பகுதியின் குறுக்களவு 30 செ.மீ. இந்தப் பூவின் இதழ் 60 மில்லி மீற்றர் தடிமன் கொண்டது. பூவின் நடுவே உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீற்றர் நீரை ஊற்றி வைத்திருக்க முடியும். இந்த மலர் விரிந்து இரு நாட்களில் கருகி விடும். இது ஒட்டுண்ணி ரகத்தைச் சேர்ந்ததால் அதற்கென்று தனியாக இலை, தண்டு கிடையாது. பிற தாவரங்களில் ஒட்டிக் கொண்டு வளர்கிறது. நீரையும் பிற சத்துக்களையும் ஒட்டியிருக்கும் தாவரத்தில் இருந்து பெற்றுக் கொள்கிறது.