உள்ளடக்கத்துக்குச் செல்

அமுர் வல்லூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமுர் வல்லூறு
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
F. amurensis
இருசொற் பெயரீடு
Falco amurensis
ரட்டே, 1863

     வளரும் இடங்கள்      இடம்பெயரும் இடங்கள்
வேறு பெயர்கள்
  • Erythropus amurensis
  • Falco vespertinus வேறுபெயர் amurensis

அமுர் வல்லூறு (ஆங்கிலப் பெயர்: Amur falcon, உயிரியல் பெயர்: Falco amurensis) என்பது வல்லூறு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது தென்கிழக்குச் சைபீரியா மற்றும் வடக்கு சீனாவில் பெருகுகின்றன. பின்னர் பெரும் மந்தைகளாக இந்தியா மற்றும் அரேபியக் கடலைத் தாண்டி தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன. இது இதற்கு முன்னர் சிவப்புப் பாத வல்லூறின் (Falco vespertinus) ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. கிழக்கு சிவப்புப் பாத வல்லூறு என அழைக்கப்பட்டது. ஆண் அடர் சாம்பல் நிறத்திலும், தொடைகள் மற்றும் அடிவால் பகுதிகள் சிவந்த பழுப்பு நிறத்திலும், கண் வளையம்,அலகுப்பூ மற்றும் பாதங்கள் சிவந்த ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். பெண்களின் மேல்புறம் மங்கிய நிறத்திலும், வெள்ளை அடிப்பகுதியில் அடர்ந்த செதில் போன்ற அடையாளங்களுடனும், கண் வளையம், அலகுப்பூ மற்றும் பாதங்கள் ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். தொடைகள் மற்றும் அடிவால் பகுதிகள் சிறிதளவே வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை கரையான்கள் போன்ற பூச்சிகளை உண்கின்றன. கடலுக்கு மேல் இடம்பெயரும்போது, இவை இடம்பெயரும் தட்டான்களை உண்பதாகக் கருதப்படுகிறது. இவை தமிழகத்தில் இராஜபாளையத்திலும் பார்க்கப்பட்டுள்ளன.[2]

உசாத்துணை

[தொகு]
  1. "அமுர் வல்லூறு". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2017. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: பறவைகள் ஆர்வலர் ஆய்வில் தகவல்". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2017.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுர்_வல்லூறு&oldid=3605033" இலிருந்து மீள்விக்கப்பட்டது