ஜல்தாபாரா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜல்தாபாரா தேசியப் பூங்கா
Elephant safari.jpg
ஜல்தாபாரா தேசியப் பூங்காவினுள் யானை சவாரி.
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India West Bengal" does not exist.
அமைவிடம்மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூறுகள்26°37′43″N 89°22′39″E / 26.628611°N 89.3775°E / 26.628611; 89.3775ஆள்கூற்று: 26°37′43″N 89°22′39″E / 26.628611°N 89.3775°E / 26.628611; 89.3775
பரப்பளவு216.51

ஜல்தாபாரா தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Jaldapara National Park) கிழக்கு இமயமலை அடிவாரத்தில் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள ஜல்பாய்குரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் அருகில் தோர்ஸா ஆறு செல்கிறது. இந்தப் பூங்காவானது கடல் மட்டத்தில் இருந்து 61 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 216.51 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது 1941 ஆம் ஆண்டு வன விலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.2012 ஆம் ஆண்டு மே மாதம் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பலவகையான தாவர வகைகளும், விலங்கினங்களும் உள்ளன. தற்போது அதிக அளவில் இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் கானப்படுகின்றன. இதன் அருகில் உள்ள சில்லபாட்டா யானைகளின் முக்கிய வலசைப் (elephant corridor) பாதையாக உள்ளது. இங்கு கடமான்கள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருதுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

புகைப்படங்கள்[தொகு]

இந்த தேசியப் பூங்காவின் புகைப்படங்கள் கீழே,