சிவப்பு மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு மீன்கொத்தி
Ruddy kingfisher
தாய்லந்து, காயெங் கிரசன் தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கோரசிபார்மிசு
குடும்பம்:
அல்சிடினிடே
பேரினம்:
ஹால்சியான்
இனம்:
ஹா. கோரமண்டா
இருசொற் பெயரீடு
ஹால்சியான் கோரமண்டா
லத்தாம், 1790

சிவப்பு மீன்கொத்தி (Ruddy kingfisher)(ஹால்சியான் கோரமண்டா) என்பது நடுத்தர அளவிலான மர மீன்கொத்தி ஆகும். இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாகக் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

சிவப்பு மீன்கொத்தி (ஜான் ஜெரார்ட் கியூலேமன்ஸ்)

இதனுடைய நீளம் தோராயமாக 25 செ.மீ. வரை இருக்கும். மிகப் பெரிய, பிரகாசமான சிவப்பு அலகு மற்றும் சிவப்பு காலினை உடையது. உடல் துரு சிவப்பு நிறமுடையது. வால் ஊதா நிறமுடையது. பாலின வேறுபாடுகள் சிறிதளவே உள்ளன. ஆண் பறவையில் பளிச்சென்ற இறக்கைகளுடையன. அடர்ந்த வனப்பகுதிகளையே இந்தப் பறவைகள் விரும்புவதால், இதனை பார்ப்பதைவிட இதன் ஒலியினைக் கேட்பதே அதிகமாக உள்ளது. மேலும் இந்த பறவைகள் பொதுவாகத் தனியாகவோ அல்லது இணையாகவோ பயணிக்கின்றன.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இந்தியாவின் சுந்தரவன புலி காப்பகத்தில் சிவப்பு மீன்கொத்தி

சிவப்பு மீன்கொத்தி தென் கொரியா மற்றும் ஜப்பானில் வடக்கிலும், தெற்கே பிலிப்பீன்சு வழியாக சுந்தா தீவுகளிலும், மேற்கில் சீனா மற்றும் இந்தியா வரையிலும் காணப்படும். இது வலசை செல்லக்கூடியது. குளிர்காலத்தில் வடபகுதியில் வாழக்கூடிய மீன்கொத்தி தெற்கே போர்னியோ வரை குடியேறும். இதன் வரம்பின் தெற்குப் பகுதிகளில் உள்ளூரில் பொதுவானது. சிவப்பு மீன்கொத்தி மிதமான வெப்பமண்டலம் முதல் வெப்பமண்டலப் பகுதியில் உள்ள காடுகள் மற்றும் மழைக்காடுகளில் வசிக்கின்றன.

இதனுடைய விலங்கியல் பெயரானது இந்தியாவின் கோரமண்டல கடற்கரையை நினைவுபடுத்துகிறது.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

மற்ற மீன்கொத்திகளைப் போலவே, சிவப்பு மீன்கொத்தியும் பொதுவாக மீன், ஓட்டுமீன்கள் மற்றும் பெரிய பூச்சிகளை உண்கின்றன. இருப்பினும், நீர் குறைவாக ஓடும் ஓடைகளில் உள்ள தவளைகள் மற்றும் நீர்நில வாழ்வனவற்றினை உண்ணுகின்றன.

வகைப்பாட்டியல்[தொகு]

ஹால்சியான் கோரமண்டாவில் பின்வரும் கிளையினங்கள் உள்ளன: [2]

  • இந்திய சிவப்பு மீன்கொத்தி ஹா. கோ. கோரமண்டா - (லாதம், 1790)
  • ஹா. கோ. மேஜர் - (டெமின்க் & ஸ்க்லெகல், 1848)
  • ஹா. கோ. பேங்சி - (ஓபர்ஹோல்ஸ்டர், 1915)
  • ஹா. கோ. மிசோரினா - (ஓபர்ஹோல்சர், 1915)
  • ஹா. கோ.. மைனர் - (டெமின்க் & ஸ்க்லெகல், 1848)
  • ஹா. கோ. லின்னே - ஹப்பார்ட் & டுபோன்ட், 1974
  • ஹா. கோ. கிளாடியா - ஹப்பார்ட் & டுபோன்ட், 1974
  • ஹா. கோ.ரூஃபா - வாலஸ், 1863
  • ஹா. கோ.பெலிங்கென்சிசு - நியூமன், 1939
  • ஹா. கோ. சுலானா - மீஸ், 1970

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Halcyon coromanda". IUCN Red List of Threatened Species 2012: e.T22683234A40529189. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22683234A40529189.en. https://www.iucnredlist.org/species/22683234/40529189. 
  2. Gill F, D Donsker & P Rasmussen (Eds). 2020.

பிற ஆதாரங்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Halcyon coromanda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மீன்கொத்தி&oldid=3786719" இலிருந்து மீள்விக்கப்பட்டது