உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய சிவப்பு மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சிவப்பு மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Halcyon coromanda coromanda) என்பது சிவப்பு மீன்கொத்தியின் துணையினம் ஆகும்.[1]

விளக்கம்

[தொகு]

இந்திய சிவப்பு மீன்கொத்தியானது மைனா அளவில் சுமார் 25 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இதன் அலகு சிவப்பு நிறத்திலும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் சிவப்பாகவும் இருக்கும். இப்பறவையின் உடலின் மேற்பகுதி கத்திரிப்பூ நிறம் தோய்ந்த செம்பழுப்பாக இருக்கும். கீழ்ப்பகுதி கருஞ்சிவப்பாக இருக்கும். மோவாய், வயிறு, தொண்டை ஆகியன சற்று நிறங்குன்றிக் காணப்படும். இப்பறவை தமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படதாக பதிவு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்யபட்டதாக அறியப்படவில்லை.[2]

நடத்தை

[தொகு]

இந்திய சிவப்பு மீன்கொத்தி தனித்தோ அல்லது இணையாகவோ காணப்படும். இது பொதுவாக அஞ்சி மறையும் இயல்புடையது. இதன் குரல் வெண்தொண்டை மீன்கொத்தியை ஒத்து இருக்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill F, D Donsker & P Rasmussen (Eds). 2020. IOC World Bird List (v10.2). doi : 10.14344/IOC.ML.10.2.
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 298.