மலையாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையாடு

Serow[1]

Mainland serow (Capricornis sumatraensis) at Dusit Zoo, Bangkok, Thailand.
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஆர்டியோடாக்டைலா
குடும்பம்: போவிடே
துணைக்குடும்பம்: கேப்ரினே
பேரினம்: கேப்ரிகோர்னிசு
ஓகில்பை, 1836
சிற்றினங்கள்

கேப்ரிகோர்னிசு கிரிசுபசு கேப்ரிகோர்னிசு ரூபிடசு

கேப்ரிகோர்னிசு சுமத்ரேன்சிசு

கேப்ரிகோர்னிசு சுவின்கோயீ

மலையாடு (Serow) எனப்படும் நடுத்தர ஆடு அல்லது மான் போன்ற பாலூட்டி வகையினைச் சார்ந்த நான்கு சிற்றினங்கள் கேப்ரிகோர்னிசு பேரினத்தின் கீழ் வருகின்றன.

தற்போது வாழும் சிற்றினங்கள்[தொகு]

நான்கு வகையான மலையாடுகள் நெய்மோர்ஹெடஸின் கீழ் வகைப்படுத்தப்பட்டன, அவற்றில் கோரல்கள் மட்டுமே உள்ளன. இவை மத்திய மற்றும் கிழக்காசியாவில் வாழ்கின்றன.

படம் அறிவியல் பெயர் பொது பெயர் விநியோகம்
கேப்ரிகார்னிசு கிரிசுபசு ஜப்பானிய மலையாடு ஒன்சூ, கியுஷு, ஷிகோகு (ஜப்பான்)
கேப்ரிகார்னிசு சுமத்ரென்சிசு முதன்மைநில மலையாடு கிழக்கு இமயமலை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பங்களாதேஷ், சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேசிய தீவான சுமத்ரா
கேப்ரிகார்னிசு ரூபிடசு செம்மலையாடு தெற்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மர்
கேப்ரிகார்னிசு சுவின்ஹோய் தைவான் மலையாடு தைவான்

மலையாடுகள் அவைகளின் தொடர்புடைய இனங்களைப் போன்று பெரும்பாலும் மலைப் பாறைகளில் மேய்ச்சலை மேற்கொள்கின்றன, பொதுவாக இரண்டு வகையான விலங்கு பகிர்வு நிலப்பரப்பில் குறைந்த உயரத்திலிருந்தாலும். செரோக்கள் கோரல்களை விட மெதுவானவை மற்றும் சுறுசுறுப்பானவை. ஆனால் இவை வேட்டையாடலிருந்து தப்பிக்கச் சரிவுகளில் ஏறலாம். மேலும் குளிர்காலம் அல்லது வெப்பமான கோடைக்காலங்களில் தஞ்சமடையவும் இதனைச் செய்கின்றன. கண்ணக்குழி முன் சுரப்பிகளைப் பயன்படுத்தி அடையாளமிடுகின்றன.

சிற்றினங்களின் வண்ணம், வாழிடப்பகுதி மற்றும் சிற்றினத்தினைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆண் பெண் என இரு ஆடுகளிலும் தாடி மற்றும் சிறிய கொம்புகள் உள்ளன. இவை பெரும்பாலும் காதுகளை விட அளவில் குறைவாக இருக்கும்.

இரண்டு முதல் ஏழு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிலியோசீனின் பிற்பகுதியில் மலையாடு போன்ற புதைபடிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவான கேப்ரினே துணைக்குடும்ப முன்னோடி சிற்றினங்கள் நவீன மலையாடுகளைப் போன்று இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக மலையாட்டின் துணை குடும்ப சிற்றினங்கள் ஆபத்திற்குள்ளானவையாகக் கருதப்படுகின்றன. குறைந்துவரும் எண்ணிக்கையின் காரணமாக ஐ.யூ.சி.என் இன் செம்பட்டியலில் பெரும்பாலான மலையாடு இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானிய மலையாடானது துணை சிற்றினங்களைவிடச் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது (ஆதாரம்: ஐ.யூ.சி.என் 2008).

மேற்கோள்கள்[தொகு]

  1. Grubb, P. (2005). Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 703–705. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.

வெளி இணைப்புகள்[தொகு]

  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாடு&oldid=3113455" இலிருந்து மீள்விக்கப்பட்டது