வார்டு வண்டுகுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்டு வண்டுகுத்தி
ஆண், பருந்துகூடு காட்டுயிர் காப்பகத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துரோங்கினிடே
பேரினம்:
கார்பெக்டெசு
இனம்:
கா. வார்டி
இருசொற் பெயரீடு
கார்பெக்டெசு வார்டி
கின்னியர், 1927

வார்டு வண்டுகுத்தி (Ward's trogon)(கார்பெக்டெசு வார்டி) என்பது துரோகோனிடே குடும்ப பறவை சிற்றினமாகும். இதன் வாழிட வரம்பு இந்தியத் துணைக்கண்டத்தின் வடகிழக்கு பகுதிகள் கிழக்கு நோக்கி தென்கிழக்காசியா வரை நீண்டுள்ளது. இது பூட்டான், இந்தியா, திபெத் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது வடக்கு வியட்நாமில் ஒரு துண்டிக்கப்பட்ட எண்ணிக்கையில் காணப்படுகிறது. ஆனால் இங்கு வார்டு வண்டுகுத்தி குறித்த சமீபத்திய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

இதன் பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் இருசொற் பெயர், ஆங்கில தாவரவியலாளரும் ஆய்வாளருமான பிரான்சிஸ் கிங்டன்-வார்டை நினைவுபடுத்துகின்றன.[2]

விளக்கம்[தொகு]

வார்டு வண்டுகுத்தி 35 to 38 cm (14–15 அங்) நீளமும் 115–120 g (4.1–4.2 oz) எடையும் கொண்டது. ஆண் பறவை இளஞ்சிவப்பு-சிவப்பு மார்பகம், வயிறு, கீழ் வால் மற்றும் நெற்றி மற்றும் மார்பு, முதுகு மற்றும் இறக்கைகள் மற்றும் மேல் வால் ஆகியவை கருப்புடன் அரக்கு நிறத்தில் காணப்படும். அலகின் முனை அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். பெண்ணின் இறகுகள் ஆணுடன் பொருந்துகின்றன. ஆனால் சிவப்பு நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் மற்றும் கருமையான பகுதிகள் அடர் ஆலிவ் நிறத்திலிருக்கும். பெண்ணின் அலகின் முனை மஞ்சள் நிறத்திலிருக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகளின் கண்ணைச் சுற்றி நீல வளையம் காணப்படும்.[3]

பரவலும் வாழ்விடமும்[தொகு]

வார்டு வண்டுகுத்தி வடகிழக்கு இந்தியாவில் பூட்டான் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மியான்மர் மற்றும் தெற்கு சீனா (மேற்கு யுன்னான்) வரை பரவியுள்ளது. 1939-ல் வியட்நாமில் உள்ள பேன் சி பானில் ஒரு பிரிந்த பறவைக்கூட்டம் பொதுவானதாகக் காணப்பட்டது. இவை பொதுவாக மலைப்பகுதிகளில் சுமார் 1,500–3,200 m (4,900–10,500 அடி) உயரத்தில் காணப்படுகிறது. இவை எப்போதாவது 300 m (980 அடி) காணப்படும். குளிர்காலத்தில் இது குறைந்த உயரத்திற்கு நகரும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.[3]

வார்டு வண்டுகுத்தியின் விருப்பமான வாழ்விடம் கருவாலி மரம் மற்றும் காசுடானோபிசு மற்றும் மிதமான அகலமான பசுமையான காடுகளால் ஆன மிதவெப்பமண்டல பகுதிகள் ஆகும். இந்த காடுகளுக்குள் இது அடிவாரத்திலும், அடிமரங்களிலும் மற்றும் மூங்கிலிலும் காணப்படுகிறது.[3]

பாதுகாப்பு நிலை[தொகு]

இந்த சிற்றினம் பொதுவாகக் காணப்படும் பறவை இல்லை. இருப்பினும் இது சில இடங்களில் உள்ளூரில் பொதுவானதாக இருக்கலாம். இது 1990களில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதியது. ஆனால் பூட்டானில் பாதுகாப்பான எண்ணிக்கையில் இதன் மக்கள்தொகை உள்ளது. எனவே இது தற்போது அச்சுறு நிலையை அண்மித்த இனமாக உட்பட்டதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[3]

நடத்தை[தொகு]

வார்டு வண்டுகுத்தியின் நடத்தை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இது அந்துப்பூச்சிகள், குச்சி-பூச்சிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் பூச்சிகள் மற்றும் பெரிய விதைகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்ணுகிறது. இதன் கூடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது விவரிக்கப்படவில்லை, இவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Harpactes wardi". IUCN Red List of Threatened Species 2016: e.T22682857A92964837. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682857A92964837.en. https://www.iucnredlist.org/species/22682857/92964837. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. பக். 359. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Collar, N (2018). del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi; Christie, David A; de Juana, Eduardo (eds.). "Ward's Trogon (Harpactes wardi)". Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 4 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்டு_வண்டுகுத்தி&oldid=3746674" இலிருந்து மீள்விக்கப்பட்டது