உள்ளடக்கத்துக்குச் செல்

குகுவா புதைபடிவ பூங்கா

ஆள்கூறுகள்: 23°6′38″N 80°36′51″E / 23.11056°N 80.61417°E / 23.11056; 80.61417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குகுவா புதைபடிவ பூங்கா
Ghughua Fossil Park
குகுவா புதைபடிவ பூங்கா is located in மத்தியப் பிரதேசம்
குகுவா புதைபடிவ பூங்கா
வகைதேசிய பூங்கா
அமைவிடம்மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு23°6′38″N 80°36′51″E / 23.11056°N 80.61417°E / 23.11056; 80.61417
பரப்பளவு75 ஏக்கர்கள் (0.30 km2)[1]

குகுவா புதைபடிவப் பூங்கா (Ghughua Fossil Park) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாபுராவுக்கு அருகில் அமைந்துள்ள தேசியப் பூங்கா ஆகும், இப்பூங்காவில் 18 குடும்பத்தினைச் சார்ந்த 31 வகை தாவர புதைபடிவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[2]

மண்டலா மாவட்டத்தின் புள்ளியியல் அதிகாரியும், மாவட்ட தொல்லியல் பிரிவின் கௌரவ செயலாளருமான முனைவர் தர்மேந்திர பிரசாத் அவர்களால் 1970களில் இப்பூங்கா நிறுவப்பட்டது. இது 1983-ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[3] இந்த பூங்காவில் ஏராளமான தாவரங்கள், இலைகள், பழங்கள், விதைகள் மற்றும் ஓடு படிமங்கள் காணப்படுகின்றன, இவற்றில் சில 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தயவை.[3] இவற்றில் மிக முக்கியமானவை பனை புதைபடிமங்கள்.[2]

குறிப்பிடத்தக்க புதைபடிவங்கள்

[தொகு]

குகுவாவில் கண்டுபிடிக்கப்பட்ட தைல மரம் புதைபடிமமானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளில் மிகப் பழமையான புதைபடிமமாகும். மேலும் இது கோண்டுவானாவிலில் இதன் தோற்றத்தை ஆதரிக்கிறது.[4] கூடுதல் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்புகளில் ஒரு டைனோசர் முட்டை படிமம் அடங்கும்.[5]

போக்குவரத்து

[தொகு]

குகுவா புதைபடிவ பூங்கா தேசிய நெடுஞ்சாலை 11க்கு அருகில் அமைந்துள்ளது. இது சாகாபுராவிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் ஜபல்பூரிலிருந்து 76 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dindori district - Points of Interest". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  2. 2.0 2.1 2.2 "Fossil National Park Ghughua (65 Million Year Old Heritage)". National Information Centre. Archived from the original on 2013-02-25. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  3. 3.0 3.1 Mishra, Girima (17 January 2010). "A dino egg and other fossils". http://www.indianexpress.com/news/a-dino-egg-and-other-fossils/568147. 
  4. Anumeha Shukla, R.C.Mehrotra, Antariksh Tyagi. "Research Communications" (PDF). Current Science Vol 103. No.1. 10 July 2012. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  5. Kumar, Vikas (21 February 2011). "6.5 crore-year-old fossil in Ghughua" இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304124701/http://www.thesundayindian.com/en/story/65-crore-year-old-fossil-in-ghughua/14/12889/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகுவா_புதைபடிவ_பூங்கா&oldid=4109708" இலிருந்து மீள்விக்கப்பட்டது