சஞ்சய் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் தேசியப் பூங்கா
அமைவிடம்மத்தியப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்சிதி
பரப்பளவு466.657 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது1981

சஞ்சய் தேசியப் பூங்கா (The Sanjay National Park) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சிதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா சஞ்சய்-டூப்ரி புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் பகுதி ஆகும். இப்பூங்காவின் மொத்தப் பரப்பளவு 466.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். சஞ்சய் தேசியப் பூங்காவில் ஒன்பது வகையான பறவைகளும், புலிகளும், சிறுத்தைகளும் மற்றும் ஊர்வனவும் உள்ளன. 2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இங்கு 6 புலிகள் இருந்தன. ஆனால் அக்டோபர் 2008 முதல் மே 2009 வரையான காலகட்டத்தில் இங்கு புலிகள் எதுவும் காணப்படவில்லை.[1] .[2] 2000 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு இப்பூங்காவின் பெரும்பகுதி சட்டீஸ்கர் மாநிலத்திற்குச் சென்றது. அங்கு சென்ற 1440 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள தேசியப்பூங்கா குரு காசிதாஸ் தேசியப் பூங்கா எனப் பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "No-tiger-in-Sanjay-Tiger-Reserve-also-says-official", NEWS-Environment-Flora-Fauna, Times of India, 2012-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2011-01-19 அன்று பார்க்கப்பட்டது
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2012-01-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-12-21 அன்று பார்க்கப்பட்டது.