பால்பாக்ராம் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால்பாக்ராம் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Balphakram National Park) மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இது மேகாலாயாவின் காரோ மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு எருமை, யானை, புலி, மான் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. இப்பூங்காவினுள் மருத்துவ குணமுள்ள பல மூலிகைகள் உள்ளன. இப்பூங்காவானது இந்திய வனத்துறையினால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் முக்கிய வலசைப் பாதை (elephant corridor) இப்பூகாவினுள் அமைந்துள்ளது. இது அனுமதி பெற்றுச் செல்லும் சுற்றுலாத்தலமாகவும், இயற்கை ஆர்வலர்களின் முக்கியப் பகுதியாகவும் விளங்குகிறது. இப்பூங்காவிற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான நாட்கள் சுற்றுலாவிற்குச் சிறந்த நாட்கள் ஆகும்.