மிருகவானி தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 17°21′19″N 78°20′17″E / 17.355228°N 78.338159°E / 17.355228; 78.338159
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருகவானி தேசியப் பூங்கா
Pied Cuckoo (Clamator jacobinus) W IMG 9409.jpg
மிருகவானி தேசியப் பூங்காவில் சுடலைக் குயில்
Map showing the location of மிருகவானி தேசியப் பூங்கா
Map showing the location of மிருகவானி தேசியப் பூங்கா
தெலங்காணாவில் பூங்காவின் அமைவிடம்
Map showing the location of மிருகவானி தேசியப் பூங்கா
Map showing the location of மிருகவானி தேசியப் பூங்கா
மிருகவானி தேசியப் பூங்கா (இந்தியா)
அமைவிடம்சில்கூர் அருகே, ஐதராபாத்து, தெலங்காணா
அருகாமை நகரம்ஐதராபாத்து
ஆள்கூறுகள்17°21′19″N 78°20′17″E / 17.355228°N 78.338159°E / 17.355228; 78.338159
பரப்பளவு1,211 ஏக்கர்கள் (4.90 km2)

மிருகவானி தேசியப் பூங்கா (Mrugavani National Park) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இது, ஐதராபாத்தின் மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மொய்னாபாத் மண்டலத்தின் சில்கூரில் அமைந்துள்ளது. மேலும், இது 3.6 சதுர கிலோமீட்டர் (1.4 சதுர மைல்) அல்லது 1211 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 600 வகையான தாவர இனங்களைக் கொண்டுள்ளது. சுமார் 350 புள்ளிமான்கள் இந்த பூங்காவில் உள்ளன. மேலும், இந்திய குழிமுயல், காட்டுப்பூனை, புனுகுப்பூனை, சாரைப்பாம்பு, கட்டுவிரியன், பூக்கொத்தி 200 க்கும் மேற்பட்ட மயில்கள் போன்ற உயிரனங்களும் உள்ளது. [1] [2] இன்று இந்த பூங்கா பல்லுயிர் பெருக்கத்தின் தாயகமாகும். பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளும் பூங்காவிற்குள் வழங்கப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

இது 1994இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

இடம்[தொகு]

இந்தப் பூங்கா சில்கூர் பாலாஜி கோயிலுக்கு அருகில் உள்ளது, ஐதராபாத், மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wild Life in Telangana :: Telangana Tourism". telanganatourism.gov.in. 30 ஏப்ரல் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Borah, Prabalika M. (11 January 2018). "Dear, how about some deer spotting?". 18 April 2018 அன்று பார்க்கப்பட்டது – www.thehindu.com வழியாக.

வெளி இணைப்புகள்[தொகு]