பூக்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூக்கொத்தி மிகச்சிறிய பறவை இனங்களில் ஒன்று. இந்தியாவில் இருக்கும் பூக்கொத்தி பெரும்பாலும் 7-10 செ.மீ. வரை இருக்கும். பழங்களை, அதுவும் குறிப்பிட்ட சிலவகை பழங்களை அப்படியே விழுங்கி, அதன் கொட்டைகளை பரவச்செய்தல் மூலம் சூழலியலில் அனைத்துப் பறவைகளையும் போல முக்கியப் பங்குவகிக்கின்றன.

பூக்கொத்தி

டிக்கல் பூக்கொத்தி[தொகு]

டிக்கல் பூக்கொத்தி (Tickell’s Flowerpecker) மிகச்சிறிய கிட்டத்தட்ட 7 செ.மீ. அளவே உள்ள பறவை. வீட்டுத் தோட்டங்களிலும், பழ மரங்களிலும் அடிக்கடி சுற்றித் திரிந்துகொண்டிருக்கும். வெளிர்ரோஸ் நிற அலகைக் கொண்டிருக்கும். சாம்பல் + வெள்ளை நிற அடி – வயிற்றுப் பகுதியும், வெளிர் பச்சைநிற முதுகுப் பகுதியையும் கொண்டிருக்கும்.

தடித்த அலகு பூக்கொத்தி[தொகு]

தடித்த அலகு பூக்கொத்தி. பெயருக்கேற்றார் போல, தடிமனான அலகைக் கொண்டது. இது டிக்கலை விட சற்றுப் பெரியதாக இருந்தாலும், பார்வைக்கு டிக்கலைப் போலவே இருக்கும். ஆனால் இதன் அலகின் கருநீல நிறத்தில் ஒரு சிறிய அமைப்பைப் பார்க்கலாம். தவிர, இதன் மற்றொரு தனித்துவமான குணம், மற்ற பூக்கொத்திகளைப் போல பழங்களை அப்படியே விழுங்காது. தோலைத் தேய்த்து எடுத்துவிட்டுத் தான் சாப்பிடும்.

பூக்கொத்தி

மேற்கோள்கள்[தொகு]

[1]

உசாத்துணைகள்[தொகு]

[2]

  1. சரவண கணேஷ் & கொழந்த. கா2 : கா ஸ்கொயர். https://docs.google.com/uc?id=0Bwum8gbunJGsYk1KZlNCUk8wZVk&export=download. 
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:126,127
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கொத்தி&oldid=2427693" இருந்து மீள்விக்கப்பட்டது