சவகர் மான் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சவகர் மான் பூங்கா
Jawahar Deer Park
அமைவிடம்இந்தியா, தெலங்கானா, சமீர்பேட்டை
கிட்டிய நகரம்செகந்திராபாத்து
பரப்பளவு54 ஏக்கர்கள்
நிருவாக அமைப்புதெலுங்கானா அரசு

சவகர் மான் பூங்கா (Jawahar Deer Park) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் மல்கச்கிரி மாவட்டத்திலுள்ள சமீர்பேட்டை நகரத்தில் அமைந்துள்ளது. இம்மான் பூங்கா 54 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மான்கள் பூங்காவில் வாழ்கின்றன.[1] சமிர்பேட்டை ஏரி அருகில் உள்ள காரணத்தால் ஏராளமான மான்கள் தாகத்தைத் தணிக்க ஏரிக்குச் செல்வதை இங்கிருந்து காணலாம்.

மான்களைத் தவிர இங்கு மயில்களும் பல்வகை பறவைகளும் காணப்படுகின்றன. ஐதராபாத்தில் அறியப்படும் இரண்டு பட்டாம்பூச்சி பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும் மற்றொன்று சில்கூர் இரங்காரெட்டி மாவட்டத்திலுள்ள மிருகவானி தேசியப் பூங்காவாகும். மான் பூங்காவை தெலுங்கானா அரசு பராமரிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவகர்_மான்_பூங்கா&oldid=3069500" இருந்து மீள்விக்கப்பட்டது