பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் தலைமையிடம்.

பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் 1883 ஆம் ஆண்டு தொடங்கப்பட ஓர் அரசு சாரா அமைப்பாகும். பறவைகள் மற்றும் விலங்குகள் மீது இயற்கை ஆர்வம் கொண்ட தொழில்முறை சாராத ஆறு ஆங்கிலேயர்களும், இரண்டு இந்தியர்களும் செப்பம்பர் 15,1883 இல் விக்டோரியா அருங்காட்சியகத்தில் கூடி உருவாக்கிய சங்கம் இதுவாகும்.

நோக்கம்[தொகு]

இந்தியாவில் காணப்படும் உயிரினங்களின் வரலாற்றை சேகரித்தல், அவ்வுயிரினங்களைப் பிடித்து அதை ஆராய்தல் அவற்றை அறிவியல் முறையில் வகைப்படுத்துதல், உயிரினங்களை பாதுகாத்தல் கள ஆய்வு மேற்கொள்ளல் என இவ்வகையில் இயங்க ஆரம்பித்தனர்.

அருங்காட்சியகம்[தொகு]

இங்கு பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை 1,20,000க்கும் மேல் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொகுப்பு இது. பாலூட்டிகள் 20,000, பறவைகள், 29,000, பறவை முட்டைகள் 5,400, இருவாழிகளும், ஊர்வனவும் 8,500, பூச்சிகள் 50,000 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து தமிழ் புலப்படாத பறவையின் உடலைத் தேடி, ஆசை கட்டுரை 15.செப்டம்பர்.2015

வெளி இணைப்புகள்[தொகு]