வளைந்த அலகுச் சிலம்பன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளைந்த அலகுச் சிலம்பன்கள்
தைவன் வளைந்த அலகுச் சிலம்பன்
பொமடோதோரிங்கசு மியூசிகசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்

பொமடோதோரிங்கசு
ஜாபோலெயா

வளைந்த அலகுச் சிலம்பன்கள் (Scimitar babbler) என்பன குருவி வரிசையில் பழைய உலக சிலம்பன்களின் பெரிய குடும்பமாகும். இவை பொமடோர்கினசு மற்றும் ஜபோய்லியா பேரினங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பறவைகளாகும். இவை வெப்பமண்டல ஆசியா பறவைகள். அதிக எண்ணிக்கையிலான இந்தப் பறவையினங்கள் இமயமலை மலைப் பகுதிகளில் வாழ்கின்றன.

விளக்கம்[தொகு]

வளைந்த அலகுச் சிலம்பன்கள் மென்மையான பஞ்சுபோன்ற இறகுகளைக் கொண்டவை. இவை வலுவான கால்களுடன் நடுத்தர அளவிலான, நெகிழ்-வால் நிலப் பறவைகளாகும். இந்தப் பறவைகள் குழுவாக வாழக்கூடியன, இடம்பெயர்வதில்லை., மேலும் பெரும்பாலான இனங்கள் குறுகிய வட்டமான இறக்கைகளுடன் பலவீனமான பறக்கும் தன்மையுடன் காணப்படும்.

வளைந்த அலகுச் சிலம்பன்கள் நீண்ட கீழ்நோக்கி வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன. அவை இலைக் குப்பைகளைக் கிளறி உணவு உண்ணப் பயன்படுகின்றன. வளைந்த அல்குகளைக் கொண்டதன் மூலம் இப்பறவைகள் இப்பெயரினைப் பெற்றன. இவை பொதுவாக நீண்ட வாலுடன், மேலே அடர் பழுப்பு மற்றும் கீழே வெள்ளை அல்லது ஆரஞ்சு-பழுப்பு வண்ணத்துடன் ஈர்க்கும் தலை வடிவங்களுடன், கண்ணின் வழியாக ஒரு அகன்ற கறுப்புப் பட்டையுடன், மேலேயும் கீழேயும் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

வாழிடம்[தொகு]

பெரும்பாலான வளைந்த அலகுச் சிலம்பன்கள் காட்டில் வாழும் இனங்களாகும். இவை விரும்பும் அடர்ந்த தாவரங்களில் அவதானிப்பது கடினம். ஆனால் மற்ற சிலம்பன்களைப் போலவே இவையும் சத்தமிடும் பறவைகளாகும்.

மற்ற சிலம்பன்கள் இனங்களைப் போலவே, இவை குழுக்களாக அடிக்கடி காணப்படும். மேலும் இந்திய வளைந்த அலகுச் சிலம்பன்கள் பெரும்பாலும் வெப்பமண்டல ஆசிய மழைக்காடு காடுகளில் காணப்படும்.[1]

பேரினங்கள்:

  • பொமடோதோரிங்கசு - 15 இனங்கள்[2]
  • ஜாபோலெயா - 2 இனங்கள்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Scimitar-Babbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
  2. "ADW: Pomatorhinus: CLASSIFICATION". animaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
  3. "ADW: Jabouilleia: CLASSIFICATION". animaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.