மிதவெப்ப ஊசியிலைக் காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒன்டாரியோவின் பெட்ரோகிளிஃப் மாகாண வனத்தில் உள்ள ஒரு மிதவெப்ப ஊசியிலைக் காட்டுச் சூழல்மண்டலம்

மிதவெப்ப ஊசியிலைக் காடு என்பது, மிதமான வெப்பம் கொண்ட கோடையையும், குளிரான மாரியையும், காடுகள் வளர்வதற்கு உகந்த போதிய அளவு மழைவீழ்ச்சியையும் கொண்ட உலகின் மிதவெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் நிலம் சார்ந்த உயிர்ச்சூழல் ஆகும். பெரும்பாலான மிதவெப்ப ஊசியிலைக் காடுகளில் பசுமைமாறா ஊசியிலைத் தாவரங்களே முதன்மையாகக் காணப்படுகின்றன. எனினும் இத்தகைய காடுகள் சிலவற்றில், கலப்பு ஊசியிலைத் தாவரங்கள், பசுமைமாறா அகன்ற இலைத் தாவரங்கள் என்பவற்றுடன், இலையுதிர்க்கும் அகன்ற இலைத் தாவரங்களும் காணப்படுகின்றன. மிதமான குளிர் காலத்தையும், பெருமளவு மழைவீழ்ச்சியையும் கொண்ட கடற்கரைப் பகுதிகளிலும்; வரண்ட காலநிலை கொண்ட அல்லது மலைப் பாங்கான உட்புறப் பகுதிகளிலும்; மிதவெப்ப பசுமைமாறாக் காடுகள் பொதுவாகக் காணப்படுகின்றன. செடார், சைப்பிரசு, டக்ளசு ஃபர், ஃபர், சுனிப்பர், பைன், செம்மரம் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு இன மரங்கள் மிதவெப்ப ஊசியிலைக் காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கீழ்த்தளங்களில் பல வகையான செடிகளும், புல், பூண்டு வகைகளும் இருக்கும்.

அமைப்பு[தொகு]

இக் காடுகள் எளிமையான அமைப்பைக் கொண்டவை. மேல்தளம், கீழ்த்தளம் எனும் இரண்டு தளங்களை மட்டுமே கொண்டவையாக இருக்கும். சில காடுகளில் செடிகளைக் கொண்ட இடைத்தளம் ஒன்றும் இருப்பது உண்டு. "பைன்" காடுகளில் புல், பூண்டுகளைக் கொண்ட கீழ்த்தளம் காணப்படும். இது புற்களையும், பல்லாண்டுப் பூண்டுகளையும் கொண்டிருக்கும். இவை அடிக்கடி காட்டுத்தீயினால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]