உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கர் காதி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கர் காதி தேசியப் பூங்கா
அமைவிடம்ஜெகதல்பூர், பஸ்தர் மாவட்டம் சத்தீசுகர், இந்தியா
பரப்பளவு200 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது1982
www.kvnp.in

கங்கர் காதி தேசியப் பூங்கா (Kanger Ghati) தேசியப்பூங்கா இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில், பஸ்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜெகதல்பூர் அருகில் அமைந்துள்ளது. 1982 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதன் பரப்பளவு சராசரி 200 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

இந்தத் தேசியப்பூங்காவினூடே கங்கர் நதி செல்வதால் இது கங்கர் காதி தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் முக்கிய இடமாக இப்பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவில் 49 வகையான பாலூட்டிகளும் 144 வகையான பறவைகளும் 37 வகையான ஊர்வனங்களும் 91 வகையான வண்ணத்துப்பூச்சிகளும் மற்றும் 113 வகையான சிலந்திகளும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இப்பூங்கா பெரும்பாலும் பாறைகளால் ஆனது. சுற்றுலாப்பயணிகள் இப்பூங்காவிற்குச் செல்ல நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் வசதியானவை ஆகும்.

புகைப்படங்கள்

[தொகு]

இத்தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுள் சில கீழே,