பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா
പാമ്പാടും ഷോല വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം
கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ஒரு காட்சி
Map showing the location of பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா പാമ്പാടും ഷോല വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം
Map showing the location of பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா പാമ്പാടും ഷോല വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം
Pampadum Shola NP
அமைவிடம்தேவிகுளம் வட்டம், இடுக்கி மாவட்டம், கேரளம், தென்னிந்தியா
கிட்டிய நகரம்மறையூர்
பரப்பளவு1.32 km2 (0.51 sq mi)
Elevation:
1,886 மீட்டர்கள் (6,188 ft) to 2,531 மீட்டர்கள் (8,304 ft)
நிறுவப்பட்டது2003
நிருவாக அமைப்புKerala State Forest and Wild Life Department

பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள மிகச்சிறிய தேசிய பூங்காவாகும் . [1] [2] இந்தப் பூங்காவையும் அருகிலுள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா, எரவிகுளம் தேசிய பூங்கா, ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா, சின்னார் கானுயிர்க் காப்பகம், குறிஞ்சி மலை சரணாலயம் ஆகியவற்றையும் சேர்த்து மூணார் வனவிலங்கு கோட்டம் நிர்வகிக்கிறது. [3] இந்தப் பூங்காவானது பழநி மலைகள் வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, அல்லிநகரம் காப்புக் காடுகளை ஒட்டியுள்ளது. இது வண்டறாவு சிகரம் வரை நீண்டுள்ள பழனி மலைகளின் ஒரு பகுதியாகும். இந்த பூங்கா உட்பட மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆனைமலை துணை கிளஸ்டர் ஆகியவை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவால் உலக பாரம்பரிய களமாக தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுகிறது. [4]

சொற்பிறப்பியல்[தொகு]

"பாம்பாடும் சோலை" என்ற பெயரானது, மூன்று மலையாள சொற்களில் இருந்து உருவானது, அவை "பாம்பு", "ஆட்டம்", "சோல" (காடு) என்பவை ஆகும். "சோல" என்பது "சோலை" இன் தவறான உச்சரிப்பாக கருதப்படுகிறது.

தாவரங்கள்[தொகு]

கானுயிர்கள் நிறைந்த எராவிக்குளம் தேசிய பூங்காவுடன் தொடர்புடைய மித பசுமைமாறா சோலைக் காடுகளை இந்த பூங்கா பாதுகாக்கிறது.

இப்பகுதியில் பல்வேறு வகையான மருத்துவ மூலிகைகள் உள்ளன. அவைகுறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வனப் பகுதிக்குள் பலவிதமான தைல மரங்கள் உள்ளன, அவற்றின் மிகுதியான நீரை உருஞ்சும் தன்மை, விரைவாக பரவும் தன்மை போன்றவற்றின் காரணமாக இப்பகுதியின் சுற்றுச்சூழலை அச்சுறுத்துபவையாக உள்ளன. தனித்துவமான சூழல் அமைப்பை அழிக்கும் தைல மரங்களை வனவியலால் இன்னும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

விலங்குகள்[தொகு]

கருப்பு புறா ( அழிவாய்ப்பு இனம் )

இங்குள்ள மறைதிறவுச் சிற்றினங்கள் மிகவும் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக ஊனுன்னி விலங்கான கரும்வெருகு உள்ளது. இங்கு சிறுத்தைகள் மற்றும் செந்நாய்கள் சில நேரங்களில் அந்தி அல்லது விடியற்காலையில் காணப்படுகின்றன, புலிகள் இப்பூங்காவின் முக்கியமான விலங்கு ஆகும். [5] யானைகள், காட்டெருமைகள், சோலைமந்தி, காட்டெருது, நீலகிரி மந்தி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அருகிலுள்ள பழைய கொடைக்கானல்-மூணாறு சாலை மூடப்பட்டுள்ளது.

இங்கு கருப்பு புறா, குட்டை இறக்கையன், இளவேனில் தொங்கும் கிளி, நீலப் பாறை -த்ரஷ், நீல-மூடிய ராக்-த்ரஷ் மற்றும் நீலகிரி ஈப்பிடிப்பான் கருப்பு மற்றும் ஆரஞ்சு ஈப்பிடிப்பான் ஆகிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன .

பார்வை[தொகு]

அங்கீகரிக்கப்படாத மலையேற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது
பாம்பாடும் தேசிய பூங்காவில் வந்தராவ் கண்காணிப்புக் கோபுரம்

ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சிக் குழுவினருக்கு பாம்பாடும் சோலை தேசிய பூங்காவின் அழகை அனுபவிக்க வனத்துறை வாய்ப்பு வழங்குகிறது. வட்டவாடாவை அடைவதற்கு 7 கி.மீ தோலைவில் உள்ள சோதனைச் சாவடியில், தேசிய பூங்காவின் நுழைவாயிலில் ஒரு சிறப்பு வரவேற்பு அறிவுப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கபட்ட நாட்களில் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் பணம் செலுத்தி பார்வையிட அனுமதிக்கபடுகின்றனர். இந்தப் பூங்காவானது பசுமையான மரங்களும், நீர் ஆதாரங்களும், பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக மாறப்பட்டுவருகிறது. இந்த அடர்த்தியான பசுங்காடு  மூணாரிலிருந்து கிட்டதட்ட 35 கி.மீ தொலைவில் கோவிலூர் மற்றும் வட்டவாடா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள கிராமங்கள்[தொகு]

தேசிய பூங்காவிற்கு அப்பால் உள்ள கிராமங்களான ஊர்காடு, வட்டவாடா, கோவிலூர், கோட்டகம்பூர் போன்றவை வளமான காய்கறி சாகுபடிகள் கொண்டதாக உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. Envis Kerala (2009). "Forest". Kerala State Council for Science, Technology and Environment. மூல முகவரியிலிருந்து 11 March 2008 அன்று பரணிடப்பட்டது.
  2. Online Highways LLC. (2004) India | Kerala | Devikulam Pambadum Shola National Park, retrieved 6/4/2007
  3. K.S. Sudhi (3 November 2006) The Hindu, retrieved 21 June 2007 New lives bloom in Rajamala
  4. UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris. retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists
  5. Mathew Roy, Kerala, Small National Parks