முகௌக் கற்குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
முகௌக் கற்குகை
Name as inscribed on the World Heritage List
முகௌக் கற்குகை
வகை பண்பாடு
ஒப்பளவு i, ii, iii, iv, v, vi
உசாத்துணை 440
UNESCO region ஆசியா-பசிபிக்
Inscription history
பொறிப்பு 1987 (11th தொடர்)

முகௌக் கற்குகை, (Mogao Caves or Mogao Grottoes (Chinese: 莫高窟; pinyin: Mògāo kū), also known as the Caves of the Thousand Buddhas (Chinese: 千佛洞; pinyin: qiān fó dòng), வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில், மிங்சா மலையின் கிழக்கு அடிவாரத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் செதுக்கப்பட்ட கற்குகைகள் ஆகும். இதுவரை உலகளாவிய நிலையில் அளவில் மிகப் பெரிய, மிகவும் முழுமையாகப் பேணப்பட்டுள்ள புத்த மதக் கலைக்கருவூலமாக முகௌக் கற்குகை திகழ்கின்றது. 1987ஆம் ஆண்டு, உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் முகௌக் கற்குகை சேர்க்கப்பட்டது. இங்குள்ள புத்தரின் உருவச்சிலைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றினால், இக்குகை உலகப் புகழ்பெற்றுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மதக் கலையை இது பிரதிபலித்துள்ளது என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.

அமைவிடம்[தொகு]

வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்து துன்ஹுவாங் நகரின் புறநகரில் மிங்சா மலை ஒன்று உள்ளது. இம்மலையின் கிழக்கு அடிவாரத்தில் பிரிந்துவிட்ட மலைப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏராளமான குகைகள் செதுக்கபட்டுள்ளன. இக்குகைகள், மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை 5 தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான முறையில் செதுக்கப்பட்ட மிகவும் கம்பீரமான, உலகில் புகழ்பெற்ற கற்குகை துன்ஹுவாங் முகௌக் கற்குகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகௌக்_கற்குகை&oldid=1779096" இருந்து மீள்விக்கப்பட்டது