உள்ளடக்கத்துக்குச் செல்

யுன்காங் கற்குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
யுன்காங் கற்குகை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Cell murals and statues in the Yungang Grottoes
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iii, iv
உசாத்துணை1039
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2001 (25வது தொடர்)

யுன்காங் கற்குகை (Yungang Grottoes) வட சீனாவின் சாங்சி (Shanxi) மாநிலத்தில் அமைந்துள்ள கற்குகையாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் 'யுன்காங் கற்குகை' ஓர் கலைச் சின்னமாகும். சீனப் புத்தமதத்தின் முதலாவது கால கட்டத்தில குடையப்பட்ட இக்குகைகள் மிகச்சிறந்த குடவரை கலையின் முன் மாதிரியாகும் என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பிட்டுள்ளது.[1] ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் உலக மரபுச்செல்வப் பட்டியலில் யுன்காங் கற்குகை சேர்க்கப்பட்டது. சீனாவின் மிகவும் புகழ் பெற்ற கற்குகைகளில் இதுவும் ஒன்று. மற்றவை லுங்மென் கற்குகை,முகௌக் கற்குகை ஆகியவையாகும். யுன்காங் கற்குகை, கி.பி. 5வது நூற்றாண்டில் சீனாவின் கல்செதுக்கல் கலை வேலைப்பாடுகளில் முதலிடம் பெற்றது என்றும், பண்டைய சீனாவின் பாரம்பரிய செதுக்கல் கலைக் களஞ்சியம் என்றும் போற்றப்படுகிறது. சீனாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது[2]

அமைப்பு[தொகு]

வட சீனாவின் சாங்சி (Shanxi) மாநிலத்த்தில் தாதுங் நகருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வுசௌ ஷான் (Wuzhou Shan)மலையின் தென்பகுதி அடிவாரத்தில், ஷி லீ (Shi Li river )ஆறு பாயும் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது யுன்காங் கற்குகுகையாகும். மலையைச் சுற்றிச் செதுக்கப்பட்ட கற்குகையின் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக சுமார் ஒரு கி.மீ ஆகும். கம்பீரமாகக் காணப்படும் இக்குகைகளுள் இப்போது 45 கற்குகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. புத்தர் உருவச்சிலைகள் வைக்கப்படும் பெரிய மற்றும் சிறிய பீடங்களின் எண்ணிக்கை 252 ஆகும். இவற்றில் 51000 புத்தர் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 17 மீ உயரமுள்ள மிகப் பெரிய புத்தர் உருவச்சிலை முதல் சில செ.மீ மட்டுமே உயரமுள்ள மிகச் சிறிய புத்தர் உருவச்சிலை வரை காணப்படுகின்றன. இக்கற்குகையில் புத்தர் முதலிய தெய்வங்களின் உருவச்சிலைகள் உயிர்த்துடிப்புடன் விளங்கிகின்றன. கோபுரத்தின் தூண்களில் செதுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலைகள், கி.மு 221ஆம் ஆண்டு முதல் 220 ஆம் ஆண்டு வரையிலான கலையின் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளன.

காலம்[தொகு]

யுன்காங் கற்குகைகள் வெவ்வேறு கால கட்டத்தில் செதுக்கப்பட்டவை. கற்குகை செதுக்கப்பட்ட காலம் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என்று 3 கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்காலம் மற்றும் இடைக்காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகையின் வடிவமும் பாணியும் பிற்காலச் செதுக்கல்களிலிருந்து வேறுபடுகின்றன.

கட்டுமானக் கலை[தொகு]

கற்குகையின் நுழைவாயில்

யுன்காங் கற்குகை, கற்குகை கலையின் சீன மயமாக்கத்தின் துவக்கமாக அறியப்படுகிறது. மத்திய காலத்தில் செதுக்கப்பட்ட யுன்காங் கற்குகையில் இடம்பெற்றுள்ள சீன அரண்மனைக் கட்டடமும் அதன் அடிப்படையில் வளர்ச்சி பெற்ற சீன புத்தர் உருவச்சிலைப் பீடமும் அதற்குப் பிந்திய கற்குகைக் கோயில்களின் கட்டுமானத்தில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில் செதுக்கப்பட்ட யுன்காங் கற்குகை அறைகளின் பரவலும் அலங்காரமும் சீனக் கட்டடப்பாணியை வெளிப்படுத்தி, புத்த மதக் கலை சீன மயமாவதை உணர்த்துவனவாகும். கி.பி 453ஆம் ஆண்டில் கற்குகையைச் செதுக்கும் பணி துவங்கியது. கி.பி 494ஆம் ஆண்டில் இதன் பெரும்பாலான பணி நிறைவடைந்தது. ஆனால், புத்தர் உருவச்சிலையைச் செதுக்கும் பணி கி.பி. 520 முதல் 525 வரை நீடித்தது.

புத்தர் சிலை[தொகு]

இந்திய மற்றும் மத்திய ஆசியாவின் புத்தமதக் கலை, சீன புத்தமதக்கலையாக வளரும் வரலாற்றை யுன்காங் கற்குகை நிரூபித்துள்ளது. புத்தர் உருவச்சிலை சீனாவில் படிப்படியாகத் தேசிய மயமாவதை இது வெளிப்படுத்துகிறது. யுன்காங் கற்குகையில் புத்தர் உருவச்சிலை வெவ்வேறு பாணியில் செதுக்கப்பட்டு, முன்னெப்பொழுதும் கண்டிராதவாறு தனிச்சிறப்பு பெற்றுள்ளது. இதனால் யுன்காங் கற்குகை சீனப் புத்த மதக் கலையின் வளர்ச்சியில் திருப்பு முனையாக விளங்குகின்றது. லுங்மென் கற்குகை,துன்ஹுவாங் மொகௌக் கற்குகை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள வடக்குவெய் வமிசக் கால அளவில் பெரிய புத்தர் உருவச்சிலைகளின் தாக்கம் யுன்காங் கற்குகையில் காணப்படுகிறது.

பண்பாடு[தொகு]

முற்காலத்தில் செதுக்கப்பட்ட 5 கற்குகைகள்(தென்யொ) சீனாவின் மேற்கு பகுதியின் தனிச்சிறப்பையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. மத்திய காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகள், நுட்பம், அழகு ஆகியவற்றினால் பாராட்டப்படுகின்றன. பிற்காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகளில் அறையின் அளவு சிறியதாக இருந்தாலும் புத்தர் உருவச்சிலையில் காணப்படும் கடவுள் உருவம் மெல்லியதாகவும், உரிய விகிதத்தில் செதுக்கப்பட்டதாகவும் உள்ளது. மேலும் கற்குகையிலுள்ள இசை, நடனம், நாடகம் மற்றும் குட்டிக்கரண உருவச்சிலைகள், அப்போதைய புத்த மதச் சிந்தனையின் பரவலையும் அக்காலச் சமூக வாழ்வையும் பிரதிபலித்துள்ளன.

உலகப் பாரம்பரிய மரபுச் செல்வம்[தொகு]

கி.பி. 5வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரையிலான சீனாவின் தலை சிறந்த புத்த மதக் கலையின் சின்னமக விளங்கும் யுன்காங் கற்குகை, சீனப் புத்த மதக் கலையின் முதலாவது உச்சகட்டத்தின் முன் மாதிரியாகும் என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பிடுகின்றது. 2001ஆம் ஆண்டு டிசம்பரில் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் யுன்காங் கற்குகை சேர்க்கப்பட்டது.

படிமங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yungang Grottoes". UNESCO. Retrieved 2007-09-06. 2001
  2. "AAAAA Scenic Areas". China National Tourism Administration. 16 November 2008. Retrieved 9 April 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுன்காங்_கற்குகை&oldid=3226278" இலிருந்து மீள்விக்கப்பட்டது