பீக்கிங் மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீக்கிங் மனிதன்
புதைப்படிவ காலம்:Pleistocene
Sinathropus pekinensis.jpg
பீகிங் மனிதனின் மண்டையோடு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Hominidae
பேரினம்: Homo
இனம்: H. erectus
துணையினம்: H. e. pekinensis
மூவுறுப்புப் பெயர்
Homo erectus pekinensis
(Black, 1927)

பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.

பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறிந்திருந்தனர்.[1]

வரலாறு[தொகு]

சீனாவின் தலைநகரம் பெய்ஜிங் (பழைய பெயர் பீகிங்) அருகில் உள்ள சொவ்கொவ்தியான் என்ற பள்ளத்தாக்கில் 1921இல் சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்டர்சன் என்பவர் அகழ்வாராய்ச்சி நடத்தினார். 1923இல் ஆண்டர்சனின் உதவியாளரான ஓட்டோ ஸ்டேன்ஸ்கி, பண்டைய மனிதனின் கடைவாய்ப்பற்கள் சிலவற்றைக் கண்டெடுத்தார். 1926இல் அதுகுறித்த செய்திகளை, ஆய்வு அறிக்கைகளை ஓட்டோ வெளியிட்டார். அதற்குப் பிறகு அதே பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கீழ்தாடையுடன் கூடிய சில பற்கள், மண்டை ஓட்டின் சில துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பிறகு சீனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலரது தலைமையிலும், சார்டின் என்ற பிரெஞ்சு ஆய்வாளரது முயற்சியிலும் அங்கே தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. அடுத்த சில வருடங்களில் ஆதிமனிதனின் ஆறு முழுமையான மண்டை ஓடுகள் கிடைத்தன. தவிர, மண்டை ஓட்டின் பகுதிகள், பற்கள், தாடை எலும்புகள் என மொத்தம் 200 படிமங்கள் கிடைத்தன. அந்த மண்டை ஓடுகளுக்குச் சொந்தமான மனிதர்களுக்கு ‘பீகிங் மனிதன்’ என்று பெயரிடப்பட்டது.

இதன் பிறகு ஆய்வாளர்கள் இந்த மண்டையோடுகள் குறித்து தங்கள் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். பீகிங் மனிதனுக்கு முன்பாகவே கண்டெடுக்கப்பட்டவன் ஜாவா மனிதன். நீளமான கைகளையுடைய ஜாவா மனிதனை முழுமையான வளர்ச்சியடைந்த மனிதர்களாக ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த ஆய்வுகளின்படி பீகிங் மனிதன் ஜாவா மனிதனைவிட வளர்ச்சியடைந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடந்திருக்கிறான். கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். நெருப்பின் பயனை அறிந்திருக்கிறான். எனவே, அவனிடம் மனித குலத்தின் பண்பாடு இருந்திருக்கிறது. இன்றைய நாகரிக மனிதனின் மூதாதையன் பீகிங் மனிதனே என்று சார்டின் தனது ஆய்வுகள் மூலம் விளக்கினார். பீகிங் மனிதன், சுமார் 2,50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று சார்டினின் ஆய்வுகள் தெரிவித்தன. மனித இனத்தின் வரலாற்றை விளக்குவதில் பீகிங் மனிதனின் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்த மண்டையோடுகள் காணாமல் போயின.[2]

தூணை நூற்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சு.கி. ஜெயகரன்
  2. முகில் (2018 நவம்பர் 28). "பீகிங் மண்டை ஓடு!". கட்டுரை. இந்து தமிழ். 16 திசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீக்கிங்_மனிதன்&oldid=2697845" இருந்து மீள்விக்கப்பட்டது