உள்ளடக்கத்துக்குச் செல்

தியான் சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியான் சான்
Tian Shan
கான் டெங்ரி (7,010 மீ) மையத்தில் தெரியும்,. சீனா மற்றும் கிர்கிசுத்தான் இடையேயான எல்லையில் தியான் சான் வரம்பு.
உயர்ந்த புள்ளி
உச்சிஜெங்கிஷ் சோக்குசு
உயரம்7,439 m (24,406 அடி)
புவியியல்
நாடு சீனா
 கசக்கஸ்தான்
 கிர்கிசுத்தான்
 உஸ்பெகிஸ்தான்
பகுதிசிஞ்சியாங்
பெர்கனா பகுதி
நிலவியல்
பாறையின் வயதுபுதுஉயிர் ஊழி
(Cenozoic)
அலுவல் பெயர்சிஞ்சியாங் தியன்ஷான்
வகைஇயல்பான தன்மை
வரன்முறைvii, ix
தெரியப்பட்டது2013 (37th session)
உசாவு எண்1414
State Party சீனா
Regionஆசியா
அலுவல் பெயர்Western Tien-Shan
வகைஇயல்பான தன்மை
வரன்முறைx
தெரியப்பட்டது2016 (40th session)
உசாவு எண்1490
State Party கசக்கஸ்தான்,  கிர்கிசுத்தான் ,  உஸ்பெகிஸ்தான் .
Regionஆசியா

தியான் சான் அல்லது தியன் ஷான் (ஆங்கிலம்: Tian Shan; சீனம்: 天山; பின்யின்: டியான்ஷன்; வேட்-கில்ஸ்: T'ien1shan1; Xiao'erjing: تياشا;டங்கன் மொழி: Тянсан; Tjansan; பழைய துர்க்கி: 𐰴𐰣 𐱅𐰭𐰼𐰃, டெங்ரி டேக்; துர்க்கி: Tanrı Dağı; மங்கோலியன்: Тэнгэр уул , கடல் உல்; உய்குர்: تەڭرىتاغ, Тәңри тағ, டெங்ரி tagh; கிர்கிஸசு: Теңир-Тоо / Ала-Тоо, Teñir-டூ / ஆலா-டூ, تەڭىر-توو / الا-توو; காசாக்கு: Тәңіртау, Täñirtaw, تأڭئرتاۋ; உசுபேகி: Tyan-ஷான், Тян-Шан, تيەن-شەن), மற்றும், பொதுவாக ஹெவன் மலை (Mountain of Heaven, Tian;) அல்லது பரலோக மலை ( Heavenly Mountain) எனும் பெயர்களில் உள்ளூர்வாசிகள் அழைக்கப்படும் இது, நடு ஆசியாவில் அமைந்துள்ள மலைத்தொடர்களில், 7.439 மீட்டர் (24,406 அடி) உயரத்தில் உள்ள "ஜெங்கிஷ் சோக்குசு" (Jengish Chokusu,)[1] என்னும் ஒரு பெரிய மலை அமைப்பில் உருவாகியுள்ள இந்த தியான் சான் மலை, மிகவும் உயரமான சிகரம் ஆகும்.[2]

பின்புலம்

[தொகு]

யுரேசியாவின் பெருநிலப்பரப்பில் ஒரு பெரிய மலைத் தொடராக உள்ள தியான் சான் மலை, கடலில் இருந்து அதிக தூரத்தில் அமைந்த பரவலான வறட்சி பகுதியாக காணப்படுகிறது. மேலும், உலகின் ஏழு மலை அமைப்புகளில் ஒன்றாக உள்ள தியன் சான் மலைகள், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய சீனா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், உசுபெக்கிசுத்தான் ஊடாக சுமார் 2,500 கிலோமீட்டர் (1,553 மைல்) தொலைவிற்கு நீண்டுள்ளது.[3] கசக்கஸ்தான் பகுதியில் வியாபித்திருக்கும் இந்த மலைத்தொடரில், சுமார் 3000 ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகி வழியும் நீரால் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும், மற்றும் அப்பகுதியில் உள்ள வன உயிரிகளுக்கும் நீராதாரமாக விளங்குவதோடு, அப்பிராந்தியம் முழுவதும் பசுமையான புல்வெளிகள் நிறைந்த வசீகரிக்கும் காட்சிகளால் வெகுவான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளது.[4]

நிலவியல்

[தொகு]

தியான் சான் மலைத்தொடர், தக்கிலமாக்கான் பாலைவனத்தின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியிலும், மற்றும் நேரடியான வடக்கில் கசக்கஸ்தான் பிராந்திய எல்லையில் தாரிம் நீர்த்தேக்கமும் (Tarim Basin), மேலும், வடமேற்கில் கிர்கிசுத்தான், மற்றும் சீனாவும் உள்ளது. தெற்கில் பாமிர் மலைகள் வரை இணைப்புகள் கொண்ட தியான் சான் மலைத்தொடர், வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி சென்று மங்கோலியாவில் உள்ள அல்த்தாய் மலைத்தொடரை சந்திக்கிறது.[5] இமாலய மலை பிறப்பு திணைமண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மலைத்தொடர், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய "புது உயிர் ஊழி" (cenozoic era) என்னும் காலகட்டத்தில், இந்திய மற்றும் யுரேசிய புவித் தகடுகளின் மோதல் மூலம் உருவாக்கப்பட்டது. நடு ஆசியாவின் மிக நீளமான மலைத்தொடர்களில் ஒன்றான இது, உசுபெக்கிசுத்தான் தலைநகரமும் தாஷ்கந்து மாகாணத்தின் தலைநகரமுமான தாஷ்கந்து வரையில் சுமார் 2,800 கிலோமீட்டர்கள் (1,700 மைல்) கிழக்கு நோக்கி நீண்டுள்ளது.[6]

சூழலியல்

[தொகு]

2,000 மீட்டர் (6,600 அடி) உயரத்தில் ஆசிய ஊசி இலை மரம் (Picea schrenkiana, Schrenk's spruce, or Asian spruce) போன்ற மர வகைகள் முக்கியமான காடுகளாக செழித்து வளரும் இந்த தியான் சான் மலைத்தொடரில், தாழ்வான மலைச் சரிவுகளில் காட்டு அக்கரோட்டு தாவர வகை மரங்களும், மற்றும் ஆப்பிள் மரங்களும் தனித்தன்மை வாய்ந்த இயற்கை காடுகளாக காணப்படுகிறது.[7]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-27. Retrieved 2016-11-05.
  2. "Tien-Shan - "the Heaven's mountains"". mountains.tos.ru (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2013-04-24. Retrieved 2016-11-03.
  3. "Tien-Shan - "the Heaven's mountains"". www.travelchinaguide.com (ஆங்கிலம்) - 1998-2016. Retrieved 2016-11-03.
  4. "தியான் ஷான் - கஜகஸ்தான்". www.eegarai.net (தமிழ்) - Apr 27, 2010. Retrieved 2016-11-04.
  5. "Amazing Tianshan Mountains". en.people.cn (ஆங்கிலம்) - Thu,Jun 19,2014. Retrieved 2016-11-04.
  6. "Tian Shan - Geography". www.liquisearch.com (ஆங்கிலம்) - 2016. Retrieved 2016-11-05.
  7. "The Info List - Tian-shan". www.theinfolist.com (ஆங்கிலம்) - 2014 -2015. Retrieved 2016-11-05.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தியான் சான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்_சான்&oldid=3722415" இலிருந்து மீள்விக்கப்பட்டது