உள்ளடக்கத்துக்குச் செல்

சுடுமட்சிலைப் படை

ஆள்கூறுகள்: 34°23′5.71″N 109°16′23.19″E / 34.3849194°N 109.2731083°E / 34.3849194; 109.2731083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
முதலாம் குயின் சக்கரவர்த்தியின் சமாதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, iii, iv, vi
உசாத்துணை441
UNESCO regionஆசியா பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11th தொடர்)
சுடுமட்சிலைப் படை is located in சீனா
சுடுமட்சிலைப் படை
Location of சுடுமட்சிலைப் படை in China.

சுடுமட்சிலைப் படை, சுடுமட்சிலை இராணுவம் அல்லது சுடுமட்சிலைப் போர் வீரர்களும் குதிரைகளும் (Terracotta Army) என்பது முதலாவது சீனச் சக்கரவர்த்தி சின் ஷி ஹுவாங்கின் போர் வீரர்களைச் சித்தரிக்கும் சுடுமட்சிலைச் சிற்பங்களாகும். இது சக்கரவர்த்தியை மறு வாழ்விலும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, சக்கரவர்த்தியுடன் கி.மு. 210 இல் அடக்கம் செய்யப்பட்ட ஒரு மரணச்சடங்குக் கலையின் வடிவமாகும்.

கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவ்வுருவங்கள்[1] சாங்சி மாகாணத்திலுள்ள சிய்யான் என்னுமிடத்தின் லின்டோங் மாவட்டத்தில் உள்ளூர் விவசாயி ஒருவரால் 1974 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுருவங்கள் அவற்றின் பாத்திரத்திற்கு ஏற்ப உயரத்தில் வேறுபடுகின்றன. தளபதிகளின் உருவங்கள் உயரமாக இருக்கின்றன. இவ்வுருவங்கள் போர் வீரர்கள், தேர், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. 2007 இல் நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி, மூன்று குழிகளில் 8,000 இற்கு மேற்பட்ட வீரர்கள், 130 தேர்கள், 520 குதிரைகள், 150 குதிரைப்படைக்குரிய குதிரைகள் உள்ளன. இவற்றில் அனேகமானவை சின் ஷி ஹுவாங்கின் சமாதிக்கு அருகில் காணப்படுகின்றன.[2] படை அற்ற சுடுமட்சிலை உருவங்களான அலுவலர்கள், கழைக்கூத்தாடிகள், அரசியல் ஆட்சியாளர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியன ஏனைய குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.[3]

கண்டுபிடிப்பு[தொகு]

சுடுமட்சிலைப் படை 29 மார்ச்சு 1974 அன்று[4] சிய்யான் கிழக்குப் பக்கத்தில் கிட்டத்தட்ட குயின் பேரரசரின் சமாதியிலிருந்து 1.6 கிலோமீட்டர்கள் (0.99 mi) தூரத்தில் விவசாயி ஒருவர் ஒரு கிணறைத் தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது.[5][6] நூற்றாண்டுகளாக, நிகழ்ந்த அறிக்கைகள் சுடுமட்சிலை உருவத் துண்டுகள், குயின் இடுகாட்டுக் கூரை ஓடுகள், செங்கற்கள், கட்டுமானப் பொருட்களின் துண்டுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தன.[7] இந்தக் கண்டுபிடிப்பு சீனத் தொல்பொருளாளர்களை, சீனாவில் எப்போதும் கண்டுபிடிக்கப்படாத பாரம்பரிய மட்பாண்ட உருவச்சிலைக் கூட்டங்களைப் பற்றி விசாரிக்கவும் வெளிப்படுத்தவும் தூண்டியது.

வரலாறு[தொகு]

சுடுமட்சிலைப் படைகளின் பக்கவாட்டுத் தோற்றம்

சமாதியின் கட்டுமானம் பற்றி வரலாற்றாளர் சிமா சியான் (கி. மு. 145 – 90 BCE) அவருடைய முக்கிய படைப்பான மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் என்பதில், சமாதி வேலைகள் முடிவுற்று ஒரு நூற்றாண்டின் பின் குறிப்பிட்டுள்ளார். சமாதி வேலைகள் கி.மு. 246 இல் பேரரசர் குயின் (அப்போது வயது 13) அரியாசனம் ஏறியதும், சுமார் 700,000 பணியாட்களைக் கொண்டு ஆரம்பமாகியது.[8] புவியியலாளர் வி டயுவான் சாதகமாக நில அமைப்பு மலை விருப்பத்திற்குரிய இடமாயிருந்தது பற்றி, முதலாவது பேரரசரின் மரணத்தின் பின் ஆறு நூற்றாண்டுகள் கழித்து தன்னுடைய இலக்கியப்படைப்பில் பின்வருமாறு தெரிவித்திருந்தார். "அதன் ஜேட் இரத்தினக்கல் சுரங்கங்களுக்காக அது பிரபலமானது, அதன் வடக்குப் பக்கம் தங்கம் நிறைந்து இருந்தது, அதன் தெற்குப் பக்கத்தில் அழகான ஜேட் இரத்தினக்கல் இருந்தது; அதன் நற்புகழின் ஆசையினால் பேராசை கொண்டு முதலாவது பேரரசர் அங்கே அடக்கம் செய்யப்பட விரும்பினார்".[9][10] சிமா சியான் முதலாவது பேரரசர் அரண்மனைகள், கோபுரங்கள், அலுவலர்கள், பெருமதிப்பு மிக்க பொருட்கள், சிறப்பான பொருட்கள் என்பவற்றுடன் அடக்கம் செய்யப்பட்டார் என எழுதியுள்ளார். அவர் கூற்றுப்படி, பாதரசத்தைப் பயன்படுத்தி ஓடும் 100 ஆறுகள் உருவகப்படுத்தப்பட்டும், அவற்றின் மேலே நிலத் தோற்ற விண்ணக உடல்களுடன் கூரை அலங்கரிக்கப்பட்டும் இருந்தது. சில மொழிபெயர்ப்புகள் "மாதிரி", "நடிப்பு" எனக் குறிப்பிட்டாலும் மூல எழுத்தில் அவ்வாறு இல்லாததோடு, சுடுமட்சிலைப் படை பற்றிய குறிப்பும் இல்லை.[8][11]

சமாதியுள்ள மேட்டுப் பகுதி

சமாதி மேட்டுப் பகுதி மண்ணில் காணப்பட்ட அதிக அளவான பாதரசம் சிமா சியானின் கூற்றுக்கு வலு சேர்க்கிறது.[12]

பின்னர் உருவாகிய வரலாற்றுக் குறிப்புகள் முதலாவது பேரரசரின் மரணத்திற்குப் பின் அரியாசனத்திற்காகச் சச்சரவு செய்து வந்த "சிய்யாங் யு" எனும் பேரரசரால் சமாதி கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.[13][14][15] ஆயினும், சமாதி சூறையாடப்பட்டிருக்காது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.[16]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. Lu Yanchou, Zhang Jingzhao, Xie Jun; Jingzhao; Jun; Xueli (1988). "TL dating of pottery sherds and baked soil from the Xian Terracotta Army Site, Shaanxi Province, China". International Journal of Radiation Applications and Instrumentation. Part D. Nuclear Tracks and Radiation Measurements 14 (1–2): 283–286. doi:10.1016/1359-0189(88)90077-5. http://www.sciencedirect.com/science/article/pii/1359018988900775. 
 2. Portal 2007, ப. 167.
 3. சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய பேரரசர் சின் ஷே ஹுவாங் கல்லறை ரகசியம்; காவலுக்கு 8,000 சுடுமண் சிலை படைவீரர்கள்
 4. Agnew, Neville (2010-08-03). Conservation of Ancient Sites on the Silk Road. Getty Publications. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60606-013-1. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
 5. O. Louis Mazzatenta. "Emperor Qin's Terracotta Army". National Geographic. Archived from the original on 2017-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-04.
 6. The precise coordinates are 34°23′5.71″N 109°16′23.19″E / 34.3849194°N 109.2731083°E / 34.3849194; 109.2731083)
 7. Clements 2007, ப. 155, 157, 158, 160–161, 166.
 8. 8.0 8.1 Sima Qian – Shiji Volume 6 《史记·秦始皇本纪》 Original text: 始皇初即位,穿治郦山,及并天下,天下徒送诣七十余万人,穿三泉,下铜而致椁,宫观百官奇器珍怪徙臧满之。令匠作机驽矢,有所穿近者辄射之。以水银为百川江河大海,机相灌输,上具天文,下具地理。以人鱼膏为烛,度不灭者久之。二世曰:"先帝后宫非有子者,出焉不宜。" 皆令从死,死者甚众。葬既已下,或言工匠为机,臧皆知之,臧重即泄。大事毕,已臧,闭中羡,下外羡门,尽闭工匠臧者,无复出者。树草木以象山。 Translation: When the First Emperor ascended the throne, the digging and preparation at Mount Li began. After he unified his empire, 700,000 men were sent there from all over his empire. They dug down deep to underground springs, pouring copper to place the outer casing of the coffin. Palaces and viewing towers housing a hundred officials were built and filled with treasures and rare artifacts. Workmen were instructed to make automatic crossbows primed to shoot at intruders. Mercury was used to simulate the hundred rivers, the Yangtze and Yellow River, and the great sea, and set to flow mechanically. Above, the heaven is depicted, below, the geographical features of the land. Candles were made of "mermaid"'s fat which is calculated to burn and not extinguish for a long time. The Second Emperor said: "It is inappropriate for the wives of the late emperor who have no sons to be free", ordered that they should accompany the dead, and a great many died. After the burial, it was suggested that it would be a serious breach if the craftsmen who constructed the tomb and knew of its treasure were to divulge those secrets. Therefore after the funeral ceremonies had completed, the inner passages and doorways were blocked, and the exit sealed, immediately trapping the workers and craftsmen inside. None could escape. Trees and vegetation were then planted on the tomb mound such that it resembled a hill.
 9. Clements 2007, ப. 158.
 10. Shui Jing Zhu Chapter 19 《水经注·渭水》Original text: 秦始皇大兴厚葬,营建冢圹于骊戎之山,一名蓝田,其阴多金,其阳多美玉,始皇贪其美名,因而葬焉。
 11. Portal 2007, ப. 17.
 12. Portal 2007, ப. 202.
 13. Shui Jing Zhu Chapter 19 《水经注·渭水》 Original text: 项羽入关,发之,以三十万人,三十日运物不能穷。关东盗贼,销椁取铜。牧人寻羊,烧之,火延九十日,不能灭。Translation: Xiang Yu entered the gate, sent forth 300,000 men, but they could not finish carrying away his loot in 30 days. Thieves from northeast melted the coffin and took its copper. A shepherd looking for his lost sheep burned the place, the fire lasted 90 days and could not be extinguished.
 14. Sima Qian – Shiji Volume 8 《史记·高祖本纪》 Original text: 项羽烧秦宫室,掘始皇帝冢,私收其财物 Translation: Xiang Yu burned the Qin palaces, dug up the First Emperor's tomb, and expropriated his possessions.
 15. Han Shu汉书·楚元王传》:Original text: "项籍焚其宫室营宇,往者咸见发掘,其后牧儿亡羊,羊入其凿,牧者持火照球羊,失火烧其藏椁。" Translation: Xiang burned the palaces and buildings. Later observers witnessed the excavated site. Afterward a shepherd lost his sheep which went into the dug tunnel; the shepherd held a torch to look for his sheep, and accidentally set fire to the place and burned the coffin.
 16. "Royal Chinese treasure discovered". BBC News. 2005-10-20. பார்க்கப்பட்ட நாள் 2011-12-03.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Terracotta Army
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடுமட்சிலைப்_படை&oldid=3732986" இலிருந்து மீள்விக்கப்பட்டது