மக்காவ்வின் வரலாற்று மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மக்காவு வரலாற்று மையம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
மக்காவ்விலுள்ள புனி பவுல் தேவாலயத்தின் இடிபாடுகள்
வகைபண்பாடு
ஒப்பளவுii, iii, iv, vi
உசாத்துணை1110
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2005 (29வது தொடர்)

மக்காவ்வின் வரலாற்று மையம் (Historic Centre of Macao) (மரபுவழிச் சீனம்: 澳門歷史城區; போர்த்துக்கேய மொழி: O Centro Histórico de Macau) என்பது முன்னாள் போர்த்துக்கேய குடியேற்றப் பகுதியாகவிருந்த மக்காவ்விலுள்ள இருபதிற்கும் மேற்பட்ட, சீனத்துப் பண்பாட்டையும் போர்த்துக்கேய பண்பாட்டையும்]] ஒருங்கிணைத்த, கட்டிடங்கள் உள்ள நகரப்பகுதியாகும். இவை இந்த நகரின் கட்டிடப் பாரம்பரியத்தைப் பறை சாற்றுவனவாக அமைந்துள்ளன. இவற்றில் , நகர சதுக்கங்கள், சாலையமைப்புகள், தேவாலயங்கள், கோவில்கள் அடங்கியுள்ளன.

2005இல் இவற்றை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் ஏற்றது; சீன மக்கள் குடியரசில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களில் இது 31வது களமாகும். யுனெசுக்கோ இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகையில்: "வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலைகள், வீடுகள், சீன/போர்த்துக்கேய சமய, அரசுக் கட்டிடங்கள் அடங்கிய மக்காவ்வின் வரலாற்று மையம், பண்பாடு, கட்டிடப் பாணி, தொழினுட்பம், அழகியல் ஆகியவற்றில் கிழக்கத்திய, மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றது." என்றும் "...பன்னாட்டு வணிகத்தின் உந்துகையால் சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான மிகத் தொன்மையான, நீண்ட கால உறவை வெளிப்படுத்துவனவாக உள்ளன." என்றும் கூறியுள்ளது.[1]

வரலாற்று மையத்திலுள்ள இடங்கள்[தொகு]

மக்காவு மூவலந்தீவில் நகர மையத்திலுள்ள மக்காவ்வின் வரலாற்று மையம் இரண்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு வலயமும் இடையகப் பகுதியால் சூழப்பட்டுள்ளது. [2]

வலயம் 1[தொகு]

முதலாம் வலயம் மவுண்ட் ஹில்லிற்கும் பர்ரா ஹில்லிற்கும் இடைப்பட்ட குறுகிய நிலப்பகுதியில் அமைந்துள்ளது.[3]

கட்டிடங்கள்[தொகு]

பெயர் ஒளிப்படம்
அ-மா கோவில்
Templo de A-Ma.jpg
மூர்களின் படைவீடு
Moorish Barracks.jpg
மண்டாரின் மாளிகை
MacaoMandarinsHouse.jpg
புனித இலாரன்சு தேவாலயம்
St. Lawrence's Church (Macau) 01.JPG
புனித யோசப் குருமடமும் தேவாலயமும்
St Joseph's Church, Macau.jpg
டொம் பெத்ரோ V அரங்கம்
Teatro Don Pedro V, Macao, 2013-08-08, DD 02.jpg
சர் இராபர்ட்டு ஹோ துங் நூலகம்
Sir Robert Ho Tung Library 01.JPG
புனித ஆகஸ்தீன் தேவாலயம்
Igreja de Santo Agostinho (Macau) 01.JPG
லீல் செனடோ கட்டிடம்
Macao Edificio do Leal Senado.jpg
சாம் கை வுய் குன்
(குவாங் டைய் கோவில்)
Sam Kai Vui Kun Temple.JPG
ஹோலி அவுஸ் ஆப் மெர்சி
Santa Casa da Misericordia.jpg
இக்ரெயா ட சே (மக்காவு)
Macau Largo da Sé 1.JPG
லூ காவ் மாளிகை
Casaloukao.JPG
புனித டொமினிக் தேவாலயம்
StDominicsMacau.JPG
புனித பவுல் தேவாலயத்தின் இடுபாடுகள்
20091003 Macau Cathedral of Saint Paul 6542.jpg
நா ச்சா கோவில்
Na Tcha Temple 1.jpg
பழைய நகரச் சுவர்களின் பகுதி
Templo Na Tcha, Macao, 2013-08-08, DD 01.jpg
மொன்டே கோட்டை
Fortaleza do Monte IMG 5420.JPG
புனித அந்தோணியார் தேவாலயம்
IgrejaDeSaoAntonioDeMacau1.jpg
காசா கார்டன்
Casa Garden.JPG
பழைய சீர்திருத்தவாதக் கல்லறை மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பழைய தலைமையகம்[2]
Macao Protestant Cemetery.jpg

சதுக்கங்கள்[தொகு]

பெயர் ஒளிப்படம்
பர்ரா சதுக்கம்
媽閣廟前地

இலார்கோ டொ பகோடெ ட பர்ரா

MacaoBarraSq.jpg
லிலோ சதுக்கம்

亞婆井前地
இலார்கோ டொ லிலோ

LilauSqareMacao.JPG
புனித அகஸ்தீன் சதுக்கம்

崗頂前地
இலார்கோ டெ சான்டோ அகோஸ்தினோ

Film crew along Largo de Santo Agostinho, Macau - 20070503.jpg
செனடோ சதுக்கம்

議事亭前地
இலார்கோ டொ செனடோ

Largo do Senado.jpg
புனித டோமினிக் சதுக்கம்

板樟堂前地
இலார்கோ டொ சாவோ டொமிங்கோசு

St Dominic's Church.jpg
கதீட்ரல் சதுக்கம்

大堂前地
இலார்கோ ட செ

Igreja da Sé 2011b.JPG
இயேசு கம்பனி சதுக்கம்

耶穌會紀念廣場
இலார்கோ ட கம்பனியா டெ ஜெசஸ்

View From the Ruins of the Church of St Paul (1386829855).jpg
கேமோசு சதுக்கம்

白鴿巢前地
பிராசா டெ லூயி டெ கமோசு

Waterfall at Praça de Luís de Camões.jpg

வலயம் 2[தொகு]

குய்யா கலங்கரை விளக்கம்

பூங்காவும் நகரியப் பகுதிகளும் உள்ளடங்கிய இடைநிலப் பகுதியால் இந்த வலயம் சூழப்பட்டுள்ளது.[2]

மேலாண்மை[தொகு]

மக்காவு வரலாற்று மையத்தில் உள்ள பெரும்பான்மையானக் கட்டிடங்கள் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிக்குச் சொந்தமானவை. இந்த நிர்வாக அமைப்பின் பல்வேறு துறைகள்/ஆணையங்கள் இவற்றை பராமரித்து வருகின்றன. சிறப்பு நிர்வாகப் பகுதி அரசின் பண்பாட்டுக் கழகம் மண்டாரின் மாளிகை, புனித பவுல் தேவாலயத்தின் இடிபாடுகள், பழையச் சுவரின் பகுதிகள், மலைக்கோட்டை, குய்யா கோட்டை ஆகியவற்றை மேற்பார்க்கின்றது.

லீல் செனடோ கட்டிடத்தை மக்காவு பிராந்திய நகராட்சி மன்றமும், அ-மா கோவிலை அ-மா கோவில் அறக்கொடை சங்கமும் ந ட்ச்சா கோவிலை அக்கோவிலின் மேலாண்மை வாரியமும் மேற்பார்க்கின்றன. மூரிஷ் பாரக்சை மக்காவு துறைமுக நிர்வாகம் பராமரிக்கின்றது.[4]

மற்றவற்றை அவற்றிற்குரிய அமைப்புக்கள் மேலாண்மை செய்கின்றன. புனித. ஜோசப் குருமடமும் தேவாலயமும் அந்த மடாலயத்திற்கு உரியன; மக்காவு கத்தோலிக்க மறைமாவட்டம் இவற்றை மேற்பார்வையிடுகின்றது. மெர்சி புனித மாளிகையை ஹோலி அவுஸ் ஆப் மெர்சி அறக்கட்டளை நிர்வகிக்கின்றது. டொம் பெத்ரோ V அரங்கை அதற்குரிய மேலாண்மை வாரியம் நிர்வகிக்கின்றது.[4]

வரலாற்று மையத்தில் நியமிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் பல்வேறுச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன; இவற்றில் முதன்மையானது மக்காவு அடிப்படைச் சட்டம் ஆகும்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Historic Centre of Macau. UNESCO World Heritage Centre
  2. 2.0 2.1 2.2 2.3 "Advisory Body Evaluation (of Historic Centre of Macao)" (PDF). UNESCO. 2005. 2009-05-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. The Map, Historic Centre of Macao
  4. 4.0 4.1 "Nomination file submitted to UNESCO" (PDF). UNESCO. 2005. 2009-05-03 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]