உருபீடியம் புரோமைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் புரோமைடு
| |
| வேறு பெயர்கள்
ருபீடியம்(I) புரோமைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 7789-39-1 | |
| ChemSpider | 74217 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 4670918 |
| |
| பண்புகள் | |
| RbBr | |
| வாய்ப்பாட்டு எடை | 165.372 கி/மோல் |
| தோற்றம் | வெண்மை படிகத் திடப்பொருள் |
| அடர்த்தி | 3.350 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 693 °C (1,279 °F; 966 K) |
| கொதிநிலை | 1,340 °C (2,440 °F; 1,610 K) |
| 98 கி/100 மி.லி | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | ருபீடியம் புளோரைடு ருபீடியம் குளோரைடு ருபீடியம் அயோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் புரோமைடு சோடியம் புரோமைடு பொட்டாசியம் புரோமைடு சீசியம் புரோமைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ருபீடியம் புரோமைடு (Rubidium bromide) என்பது RbBr என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஓரு வேதிச் சேர்மம் ஆகும். இது ருபீடியத்தினுடைய புரோமைடு உப்பாகும். ருபீடியம் புரோமைடு, சோடியம் குளோரைடு உப்பின் படிக வடிவத்தைக் கொண்டுள்ளது. இப்படிகத்தின் அணிக்கோவை மாறிலியின் மதிப்பு 685 பைக்கோ மீட்டர்கள் ஆகும்[1].
ருபீடியம் புரோமைடைத் தயாரிப்பதற்கு பல்வேறு தொகுப்பு முறைகள் காணப்படுகின்றன. ருபீடியம் ஐதராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலம் சேர்த்து ருபீடியம் புரோமைடு தயாரிக்கும் முறையும் ஒரு வழிமுறையாகும்.
- RbOH + HBr → RbBr + H2O
ருபீடியம் கார்பனேட்டை, ஐதரோ புரோமிக் அமிலம் சேர்த்து நடுநிலையாக்கித் தயாரிப்பது மற்றொரு முறையாகும
- Rb2CO3 + 2HBr → 2RbBr + H2O + CO2
ருபீடியம் உலோகம் நேரடியாக புரோமினுடன் வினை புரிந்து ருபீடியம் புரோமைடைத் தருகிறது. ஆனால் இம்முறையில் ருபீடியம் புரோமைடு தயாரிப்பது சிறந்த வழிமுறையாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில், கார்பனேட்டு அல்லது ஐதராக்சைடை விட ருபீடியம் உலோகம் விலைமதிப்பு மிக்கதாகும் அதுமட்டுமின்றி இவ்வினையில் வெடிக்கும் விபத்துகள் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ G. Chern, J. G. Skofronick, W. P. Brug ,S. A. Safron (1989). "Surface phonon modes of the RbBr(001) crystal surface by inelastic He-atom scattering". Phys. Rev. B 39 (17): 12838–12844. doi:10.1103/PhysRevB.39.12838.
- WebElements. URL accessed March 1, 2006.