உள்ளடக்கத்துக்குச் செல்

உருபீடியம் ஓசோனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருபீடியம் ஓசோனைடு
இனங்காட்டிகள்
11139-50-7
InChI
  • InChI=1S/Rb.HO3/c;1-3-2/h;1H/q+1;/p-1
    Key: LKBBZAZOURCTNC-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Rb+].[O-]O[O]
பண்புகள்
O3Rb
வாய்ப்பாட்டு எடை 133.46 g·mol−1
தோற்றம் அடர் சிவப்பு[1] பழுப்புச் சிவப்பு[2] படிகங்கள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருபீடியம் புளோரைடு
உருபீடியம் குளோரைடு
ருபீடியம் புரோமைடு
ருபீடியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஓசோனைடு
பொட்டாசியம் ஓசோனைடு
சீசியம் ஓசோனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உருபீடியம் ஓசோனைடு (Rubidium ozonide) என்பது ஆக்சிசன் மிகுதியாக இடம்பெற்றுள்ள உருபீடியம் சேர்மமாகும். RbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. ஓசோனைடு வகை சேர்மமான இதில் உருபீடியம் நேர்மின் அயனியும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் உள்ளன.

உருபீடியம் சூப்பர் ஆக்சைடுடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதை உருவாகலாம் [3]

இரண்டு வகையான படிக வடிவங்களில் உருபீடியம் ஓசோனைடு உருவாகிறது. குறைந்த வெப்பநிலையில் α-RbO3 (P21 இடக்குழு) [1] மற்றும் β-RbO3 (இடக்குழு P21/c)[4] என்ற இரண்டு மாற்றியன்கள் உருவாகின்றன. விரிவான கட்டமைப்பு பகுப்பாய்வுகள், சுற்றியுள்ள உருபீடியம் அணுக்களில் இருந்து ஓசோனைடு எதிர்மின் அயனிகள் குறிப்பிடத்தக்க அளவில் மையமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன.[5]

ஓசோனைடு அயனி காந்தத் தன்மை கொண்டது என்பதால், உருபீடியம் ஓசோனைடின் எலக்ட்ரான் பாரா காந்த அதிர்வு அளவீடுகள் ஓசோனைடு எதிர்மின் அயனியின் அகச்சிவப்பு கதிர்வீச்சின் அளவுகளைத் (ஜி-மதிப்பு) தீர்மானிக்கின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sans, Annette; Nuss, Hanne; Mohitkar, Shrikant; Jansen, Martin (2017-02-01). "α-RbO3, a Low Temperature Polymorph of Rubidium Ozonide". Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 643 (5): 357–359. doi:10.1002/zaac.201600430. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  2. 2.0 2.1 Steffen, G.; Hesse, W.; Jansen, M.; Reinen, D. (1991). "Single-crystal EPR and optical absorption investigations of the ozonide radical in crystalline solids alkali metal and ammonium ozonides, MO3 (M = potassium(1+), rubidium(1+), cesium(1+), tetramethylammonium(1+), and tetraethylammonium(1+))". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 30 (8): 1923–1926. doi:10.1021/ic00008a045. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
  3. Vol'nov, I. I.; Dobrolyubova, M. S.; Tsentsiper, A. B. (1966). "Synthesis of rubidium ozonide via rubidium superoxide". Bulletin of the Academy of Sciences, USSR Division of Chemical Science (Springer Science and Business Media LLC) 15 (9): 1611. doi:10.1007/bf00848934. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  4. Schnick, W.; Jansen, M. (1986). "Über Rubidiumozonid. Reindarstellung und Kristallstruktur" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 532 (1): 37–46. doi:10.1002/zaac.19865320107. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://epub.ub.uni-muenchen.de/3948/. 
  5. Schnick, Wolfgang; Jansen, Martin (1985). "Crystal Structures of Potassium Ozonide and Rubidium Ozonide". Angewandte Chemie International Edition in English (Wiley) 24 (1): 54–55. doi:10.1002/anie.198500541. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833. https://epub.ub.uni-muenchen.de/3944/1/3944.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_ஓசோனைடு&oldid=3318301" இலிருந்து மீள்விக்கப்பட்டது