உள்ளடக்கத்துக்குச் செல்

உருபீடியம் ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருபீடியம் ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
10010-65-8 நீரிலி Y
7243-75-6 ஒற்றைநீரேற்று Y
ChemSpider 10760835
InChI
  • InChI=1S/C2H2O4.2Rb/c3-1(4)2(5)6;;/h(H,3,4)(H,5,6);;/q;2*+1/p-2
    Key: DUXDETQJUQZYEX-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13955568
  • [Rb+].[O-]C(=O)C(=O)[O-].[Rb+]
பண்புகள்
Rb2C2O4
வாய்ப்பாட்டு எடை 258.95 g·mol−1
தோற்றம் colourless crystals
அடர்த்தி 2.76 கி/செ.மீ3 (ஒற்றைநீரேற்று)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
ஏனைய நேர் மின்அயனிகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உருபீடியம் ஆக்சலேட்டு (Rubidium oxalate) என்பது Rb2C2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்சாலிக் அமிலத்தினுடைய உருபீடியம் உப்பான இதில் ருபீடியம் நேர்மின் அயனியும் (Rb+) ஆக்சலேட்டு எதிர்மின் அயனியும் (C2O2−4 சேர்ந்துள்ளன. உருபீடியம் ஆக்சலேட்டு பெரும்பாலும் ஒற்றை நீரேற்றாக(Rb2C2O4·H2O) உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

ருபீடியம் கார்பனேட்டும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து ருபீடியம் ஆக்சலேட்டு உருவாகிறது:[1]

Rb2CO3 + H2C2O4 → Rb2C2O4 + H2O + CO2

ருபீடியம் பார்மேட்டை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் உருபீடியம் ஆக்சலேட்டைத் தயாரிக்கலாம்.:[2]

2 HCOORb → Rb2C2O4 + H2

பண்புகள்

[தொகு]

ஒரு நீரிய கரைசலில் இருந்து, ரூபிடியம் ஆக்சலேட்டு Rb2C2O4·H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒற்றைநீரேற்றாக ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் படிகமாக உருவாகிறது.[3] பொட்டாசியம் ஆக்சலேட்டு ஒற்றைநீரேற்றுடன் K2C2O4·H2O ஒத்த உருவமைப்பைக் கொண்டுள்ளது.[4] அறை வெப்பநிலையில் உருபீடியம் ஆக்சலேட்டின் (Rb2C2O4) இரண்டு நீரிலி வடிவங்கள் அறியப்படுகின்றன. சீசியம் ஆக்சலேட்டுடன் (Cs2C2O4) ஒருபடித்தான வடிவம் கொண்ட ஒற்றைச்சரிவச்சு வடிவம், பொட்டாசியம் ஆக்சலேட்டுடன் (K2C2O4) ஒருபடித்தான வடிவம் கொண்ட செஞ்சாய்சதுரப் படிகவடிவம் என்பன இவ்விரண்டு வடிவங்களாகும்.[5] புதியதாகத் தயாரிக்கப்படும் நீரிலி வடிவ ருபீடியம் ஆக்சலேட்டு ஆரம்பத்தில் முக்கியமாக ஒற்றைச்சரிவச்சு வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இது மெதுவாக செஞ்சாய்சதுர படிகவடிவ உருபீடியம் ஆக்சலேட்டாக மாறுகிறது.[6] 2004 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு உயர்வெப்ப உருபீடியம் ஆக்சலேட்டு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7]

உருபீடியம் ஆக்சலேட்டின் வெவ்வேறு வடிவ படிகத்தரவுகள்

வடிவம் படிக வடிவம் இடக்குழு a Å b Å c Å β Z
ஆல்பா[5] ஒற்றைச்சரிவச்சு P21/c 6.328 10.455 8.217 98.016° 4
பீட்டா[5] செஞ்சாய்சதுரம் Pbam 11.288 6.295 3.622 2
ஒற்றைநீரேற்று[8] ஒற்றைச்சரிவச்சு C2/c 9.617 6.353 11.010 109.46° 4

உருபீடியம் ஆக்சலேட்டு படிகத்தின் உருவாதல் வெப்பம் 1325.0 ± 8.1 கிலோயூல்/மோல் ஆகும்.[9]

507-527 °செல்சியசு (945-981 °பாரங்கீட்டு; 780-800 கெல்வின்) வெப்பநிலையில் உருபீடியம் ஆக்சலேட்டின் சிதைவு நடைபெற்று கார்பன் மோனாக்சைடும் பின்னர் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.

Rb2C2O4 → Rb2CO3 + CO↑
Rb2CO3 → Rb2O + CO2
Rb2O → 4 Rb + O2

நடுநிலையான உருபீடியம் ஆக்சலேட்டுடன் Rb2C2O4 கூடுதலாக, RbHC2O4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் அமில உப்பு ருபீடியம் ஐதரசன் ஆக்சலேட்டும் அறியப்படுகிறது.[10] இது பொட்டாசியம் ஐதரசன் ஆக்சலேட்டுடன் KHC2O4 ஒத்த அமைப்பைக் கொண்டு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் உள்ளது.[11] இதைதவிர இருநீரேற்று சேர்மமாக இருக்கும் RbHC2O4·H2C2O4 சேர்மமும் அறியப்படுகிறது. இது 18 °செல்சியசு வெப்பநிலையில் 2.125 கி/செ.மீ3 அடர்த்தியும், 21 ° செல்சியசு வெப்பநிலையில் 21 கி/லிட்டர் கரைதிறன் கொண்டது.

ஐதரசன் பெராக்சைடில் கரைக்கப்பட்ட கரைசலை ஆவியாக்கும்போது, ​​உருபீடியம் ஆக்சலேட்டு Rb2C2O4·H2O2 என்ற வாய்ப்பாடு கொண்ட ஒற்றைபெர்நீரேற்றாக உருவாகிறது. இது காற்றில் ஒப்பீட்டளவில் நிலையாக இருக்கும் ஒற்றைச் சரிவச்சுப் படிகங்களை உருவாக்குகிறது.[12]

உருபீடியம் ஆக்சலேட்டு ஐதரசன் புளோரைடுடன் வினைபுரிந்து ஐதரோபுளோரிடேட்டு என்ற உப்பாக உருவாகிறது.:[13]

Rb2C2O4 + 2 HF → RbHC2O4·HF + RbF

மேற்கோள்கள்

[தொகு]
  1. Giglio, E.; Loreti, S.; Pavel, N. V. (May 1988). "EXAFS: a new approach to the structure of micellar aggregates" (in en). The Journal of Physical Chemistry 92 (10): 2858–2862. doi:10.1021/j100321a032. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/j100321a032. 
  2. Meisel, T.; Halmos, Z.; Seybold, K.; Pungor, E. (February 1975). "The thermal decomposition of alkali metal formates" (in en). Journal of Thermal Analysis 7 (1): 73–80. doi:10.1007/BF01911627. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5215. http://link.springer.com/10.1007/BF01911627. 
  3. Ans, Jean d'; Lax, Ellen (1998). Taschenbuch für Chemiker und Physiker (in ஜெர்மன்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-60035-0.
  4. Pedersen, B. (1966-03-01). "The equilibrium hydrogen–hydrogen distances in the water molecules in potassium and rubidium oxalate monohydrates". Acta Crystallographica 20 (3): 412–417. doi:10.1107/S0365110X66000951. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X66000951. 
  5. 5.0 5.1 5.2 Dinnebier, Robert E.; Vensky, Sascha; Panthöfer, Martin; Jansen, Martin (2003-03-10). "Crystal and molecular structures of alkali oxalates: first proof of a staggered oxalate anion in the solid state". Inorganic Chemistry 42 (5): 1499–1507. doi:10.1021/ic0205536. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:12611516. https://pubmed.ncbi.nlm.nih.gov/12611516. 
  6. Vensky, Sascha (2004). Konformationsaufklärung anorganischer Oxoanionen des Kohlenstoffs und Festkörpersynthesen durch Elektrokristallisation von Ag3O4 und Na3BiO4 (doctoralThesis thesis) (in ஜெர்மன்).
  7. Robert E. Dinnebier, Sascha Vensky, Martin Jansen, Jonathan C. Hanson (2005-02-04), "Crystal Structures and Topological Aspects of the High-Temperature Phases and Decomposition Products of the Alkali-Metal Oxalates M2[C2O4] (M=K, Rb, Cs)", Chemistry - A European Journal, vol. 11, no. 4, pp. 1119–1129, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/chem.200400616, PMID 15624128{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  8. Takuya Echigo, Mitsuyoshi Kimata (November 2006), "The common role of water molecule and lone electron pair as a bond-valence mediator in oxalate complexes : the crystal structures of Rb2(C2O4) · H2O and Tl2(C2O4)", Zeitschrift für Kristallographie, vol. 221, no. 12, pp. 762–769, Bibcode:2006ZK....221..762E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1524/zkri.2006.221.12.762, S2CID 98482669
  9. Masuda, Y.; Miyamoto, H.; Kaneko, Y.; Hirosawa, K. (February 1985). "The standard molar enthalpies of formation of crystalline rubidium and cesium oxalates" (in en). The Journal of Chemical Thermodynamics 17 (2): 159–164. doi:10.1016/0021-9614(85)90068-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0021961485900680. 
  10. Piccard, Julius (1862). "Beitrag zur Kenntniss der Rubidiumverbindungen" (in de). Journal für Praktische Chemie 86 (1): 449–460. doi:10.1002/prac.18620860163. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8383. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/prac.18620860163. 
  11. Watts, Henry (1866). A Dictionary of Chemistry and the Allied Branches of Other Sciences (in ஆங்கிலம்). Longmans, Green, Longman, Roberts & Green.
  12. Pedersen, Berit F.; Seip, Hans M.; Santesson, Johan; Holmberg, Pär; Eriksson, G.; Blinc, R.; Paušak, S.; Ehrenberg, L. et al. (1967). "The Crystal Structure of Potassium and Rubidium Oxalate Monoperhydrates, K2C2O4.H2O2 and Rb2C2O4.H2O2." (in en). Acta Chemica Scandinavica 21: 779–790. doi:10.3891/acta.chem.scand.21-0779. பன்னாட்டுத் தர தொடர் எண்:0904-213X. http://actachemscand.org/doi/10.3891/acta.chem.scand.21-0779. 
  13. Weinland, R. F.; Stille, W. (1903). "Ueber die Anlagerung von Krystallfluorwasserstoff an Oxalate und an Ammoniumtartrat" (in de). Justus Liebig's Annalen der Chemie 328 (2): 149–153. doi:10.1002/jlac.19033280205. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/jlac.19033280205. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_ஆக்சலேட்டு&oldid=4041822" இலிருந்து மீள்விக்கப்பட்டது