உருபீடியம் மூவயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருபீடியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
12298-69-0 Y
InChI
  • InChI=1S/I3.Rb/c1-3-2;/q-1;+1
    Key: PXHPKMRCAYWMAT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23717888
SMILES
  • [Rb+].I[I-]I
பண்புகள்
RbI3
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references


உருபீடியம் மூவயோடைடு (Rubidium triiodide) என்பது RbI3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியம் நேர்மின் அயனியும் (Rb+) அயோடைடு எதிர்மின் அயனியும் I3.சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

உருபீடியம் அயோடைடுடன் அயோடின் சேர்ந்த நீர்த்த கரைசலை சூடாக்குவதன் மூலம் உருபீடியம் மூவயோடைடு உருவாகும்.:[1]

RbI + I2 → RbI3

பண்புகள்[தொகு]

உருபீடியம் மூவயோடைடு செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது. Pnma என்ற இடக்குழுவில் அலகு செல் அளவுருக்கள் a = 1090.8 பைக்கோமீட்டர், b = 665.5 a = 1090.8 பைக்கோமீட்டர், c = 971.1 a = 1090.8 பைக்கோமீட்டர் என்ற அலகு செல் அளவுருக்கள் கொண்டு சீசியம் மூவயோடைடு சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பில் படிகமாகிறது.[2]270 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது உருபீடியம் மூவயோடைடு உருபீடியம் அயோடைடு மற்றும் தனிம அயோடினாக சிதைவடைகிறது.[1] மேலும் உருபீடியம் மூவயோடைடு எத்தனாலில் கரையக்கூடியதாகவும் ஈதரில் சிதையக்கூடியதாகவும் உள்ளது.[1]

வினைகள்[தொகு]

உருபீடியம் மூவயோடைடு அயோடினுடன் மேலும் வினைபுரிந்து RbI7 மற்றும் RbI9 போன்ற சேர்மங்களை உருவாக்குமென நீண்ட காலமாக நம்பப்பட்டது.[3] ஆனால் இவ்வினைகள் சமீபத்திய ஆய்வுகளால் மறுக்கப்பட்டன.[4][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Wells, H. L.; Wheeler, H. L.; Penfield, S. L. (1892). "Über Trihalogenverbindungen des Rubidiums und Kaliums. nebst ihrer Krystallographie" (in en). Zeitschrift für anorganische Chemie 1 (1): 442–455. doi:10.1002/zaac.18920010140. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.18920010140. 
  2. 2.0 2.1 Tebbe, K. F.; Georgy, U. (1986-12-15). "Die Kristallstruckturen von Rubidiumtriiodid und Thalliumtriiodid". Acta Crystallographica Section C Crystal Structure Communications (International Union of Crystallography (IUCr)) 42 (12): 1675–1678. doi:10.1107/s0108270186090972. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-2701. 
  3. Abegg, R. (1906-09-21). "Über die festen Polyjodide der Alkalien, ihre Stabilität und Existenzbedingungen bei 25°". Zeitschrift für anorganische Chemie (Wiley) 50 (1): 403–438. doi:10.1002/zaac.19060500136. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1778. https://zenodo.org/record/2048953. 
  4. Briggs, T. R.; Patterson, E. S. (1932-10-01). "The Polyiodides of Rubidium. I". The Journal of Physical Chemistry (American Chemical Society (ACS)) 36 (10): 2621–2624. doi:10.1021/j150340a011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0092-7325. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_மூவயோடைடு&oldid=3894187" இலிருந்து மீள்விக்கப்பட்டது